![]() |
||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||
| Agathiyar Archives |
||||||||||||||||||||
| 1 to 10,000 |
||||||||||||||||||||
| 10,000 to 19,999 |
||||||||||||||||||||
| 20,000 to 29,999 |
||||||||||||||||||||
| 30,000 to 39,999 |
||||||||||||||||||||
| 40,000 to 49,999 |
||||||||||||||||||||
| Yahoo Agathiyar Group |
||||||||||||||||||||
| Dr. S. Jayabarathi |
||||||||||||||||||||
| English Version |
||||||||||||||||||||
| அகத்திய மடலாடற்குழுவின் மடல்களின் ஆவணமாக 'அகத்தியர் 40000' - 'அகத்தியர் பொக்கிஷக் காப்பகம்' என்னும் இந்த வலையகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 'ஜேய்பி' என்று இணையத்தில் அழைக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் ஜெயபாரதியால் நிறுவப்பட்டது அகத்தியர் மடற்குழு. 29 உறுப்பினர்களுடன் 1998-இல் அமைக்கப்பட்ட அகத்திய மடற்குழு தற்சமயம் (பிப்ரவரி, 2006)எண்ணூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் விளங்குகிறது. சிட்னி பாலாப் பிள்ளையால் தாபிக்கப்பட்ட தமிழ் டாட் நெட் மடற்குழுவிலிருந்து தோன்றியது இது. இது சில குறிப்பிட்ட துறைகளுக்காக அமைக்கப்பட்டது. இதில் மடலாடப்படும் துறைகள் - தமிழிய / இந்திய வரலாறு, புராதன வரலாறு, வருங்காலவியல், கலை, கலாச்சாரம், அறிவியல்,பாரம்பர்யம், மரபுகள், சமயம், சித்தரியல், தமிழ்மொழி,பண்டைத்தமிழ் இலக்கியம், சமூகவியல், சமூக சீர்திருத்தம் முதலியவை. இது ஒரு இருமொழி (தமிழ் + ஆங்கிலம்) மடற்குழு. 'அகத்திய ஐம்பெருங்குழுவின'ரால் வழிகாட்டப்படும் அகத்திய மடற்குழுவை டாக்டர் ஜெயபாரதி நிர்வகித்துவருகிறார். இது பண்டைத்தமிழ் மரபை ஒட்டி அமைந்ததாகும். அகத்தியத்துக்கும் அதனை விடாமல் நடத்துவதற்கும் முழுக்காரணம் திருமதி சந்திரா ஜெயபாரதி அவர்கள் வழங்கும் முழுமனதுடன் கூடிய தார்மீக ஆதரவு. தமிழர்களின் பேராசிரியரும் தமிழ் முனிவருமாகிய அகத்தியரின் பெயரால் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அகத்திய ஐம்பெருங்குழுவினர் அகத்தியரின் கொடிவழியைச் சேர்ந்தவர்கள். ஃபெப்ரவரி மாதம் 2006 வரைக்கும் 38000 மடல்கள் அரங்கேறியுள்ளன. இதுவரை அரங்கேறியுள்ளவை அனைத்தும் ஒருங்குறிக்கு (யுனிகோடு) மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த மடல்களை ஆரம்பத்தில் திரு. முகுந்தராஜூம் அடுத்து திரு. சிவகுமாரும் சேகரம் செய்தனர். தகுதரத்தில் (டிஸ்கி) இருந்து ஒருங்குறிக்கு மாற்றுவதற்கான மென்பொருளை திரு. அருள் குமரன் அளித்தார். தன்னிச்சை சேவையாளர்கள் இந்த மடல்களை யுனிகோடிற்கு மாற்றி அனைத்தையும் வலையேற்றி இந்த வலையகத்தை அமைத்தனர். இந்த முயற்சியில் மேலும் எங்களுக்கு உதவ முன்வருபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும். இந்த வலையகத்தில் இருக்கும் மடல்களை அதற்கென இருக்கும் தேடல் பெட்டியைப் பயன்படுத்தி தேடல் செய்யலாம். இந்த ஆவணத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயமாக அகத்திய மடற்குழுவையும் குறிப்பிட்ட தகவலுக்கு/மடலுக்கு உரியவரின் பெயரையும் குறிப்பிடவேண்டும். இந்த பொக்கிஷம் பிற்காலச்சந்ததியினருக்கு தரப்படும் ஓர் அன்பளிப்பு. |
||||||||||||||||||||