From jayabarathi Thu Feb 4 07:12:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7871 invoked by uid 7770); 4 Feb 1999 15:12:04 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.findmail.com with SMTP; 4 Feb 1999 15:12:04 -0000
Received: from umlugghc ([202.188.69.11]) by cgi1.tm.net.my (InterMail v03.02.03 118 118) with SMTP id <19990204151156.EUTT29581@[202.188.69.11]>; Thu, 4 Feb 1999 23:11:56 +0800
Message-Id: <3.0.3.32.19990204205941.0081f480@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 04 Feb 1999 20:59:41 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Anbumani. S"
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Ilangovadigal - disproved astrology ?
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 100

>At 08:06 AM 2/4/99 -0500, you wrote:
>>I sent this mail yesterday & I didn't get it from Agathiyar.
>>Does anyone else have this problem - of not able to post
>>successfully ? This happened few times.
>>
>>- Anbu.
>>
>>அகத்தியர்களுக்கு,
>>
>>> இதெல்லாம் தகவல் என்ற ரீதியில்அனுப்புகிறேன். நம்புவோர்
>>> கொள்ளலாம். நம்பாதோர், "ஓஹோ!இப்படியும்கூட விஷயங்கள்
>>> இருக்கிறதோ?' என்று படித்துப்பார்த்துக்கொள்ளலாம்:-) At least
>>> அரட்டைக்கு ஆகுமே?:-)
>>
>>இது தான் தகுந்த சமயம் என்பதால், இங்குநான் கேள்விப்பட்டதை எழுதுகிறேன்.
>>அரட்டைக்கு அல்ல, டாக்டர் அவர்களே.
>>
>>இது இளங்கோவடிகள், 'இளங்கோவடிகளாய்' மாறுவதற்கு முன் நிகழ்ந்த கதை.
>>
>>சேரமன்னனுக்கு (பெயர் தெரியவில்லை)இரு மகன்கள். சிறுவயதில் தம் மகன்களின்
>>ஜோதிடம் பார்த்தபோது, அந்த ஜோதிடர் இளையமகன் தான் பட்டத்துக்கு வருவான்,
>>மூத்தவன் அரசனாக மாட்டான் என்றாராம். இதைக் கேட்ட இளையவன் இதனைப்
>>பொய்யாக்குவது என்று அன்றே துறவறம் பூண்டு, தன் தமையனை அரசனாக்க வைத்தானாம்.
>
> அன்பு நண்பர்களே,
>
> கோள்களும் மீன் களும் எப்படியிருந்தாலும்கூட விதியின் பல
> அம்சங்கள் மாற்றப்படமுடியும். விதியைமதியால் வெல்லலாம்" என்கிறார்கள்
> அல்லவா?
> "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்றும்,
>
> "எண்ணிய எண்ணியாங்கு எய்துப" என்றும்,
>
> ஊழை வெல்லமுடியும் என்று கருத்துரைக்கும்வள்ளுவர்,
>
>
> "ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
> போகூழால் தோன்றும் மடி" என்றும்,
>
> "வகுத்தான் வகுத்த வகையலால் கோடி
> தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" என்கிறார்.
>
> "ஊழிற் பெருவலி யாவுளா?" என்றும்கேட்கிறார்.
>
> மணி, மந்திரம், ஔஷதம் என்னும் வழிகளில் விதியை மாற்றி
> அமைத்துக்கொள்ள முடியும் என்று சாத்திரங்கள்கூறுகின்றன. மணி
> என்றால் ஜோதிடம், மந்திரம் என்பதுஆகம, தாந்திரீக வழிபாடுகள்,
> ஔஷதம் என்பது மருந்து.
> நாடி ஜோதிடத்தில் அதுவரையிலும்நடந்தவை சரியாகச்
> சொல்லப்பட்டிருக்கின்றன. அப்போதுள்ளநடப்பையும் சொல்லி, கோளாறுகளையும் குறிப்பிட்டு, அதற்கு
என்ன, எவ்விதம் பரிகாரம் செய்யவேண்டும் என்றும் சொல்கிறது. ஆக பரிகாரம்செய்தால்
> விதி மாறும் என்று ஜோதிடமேஒத்துக்கொள்கிறது.......அல்லவா?
> கடுமையான நோய்; சிகிச்சை இல்லையெனில் சாவு
> நிச்சயம்; மருத்துவம் செய்கிறார்கள்;பிழைத்து விடுகிறான்.
> இல்லையா?
> தாங்கமுடியாத பிரச்னை, நடக்க முடியாத காரியம். தெய்வத்திடம்
> வேண்டுதல்.; நடந்து விடுகிறது; பிரார்த்தனைப்படி முடியிறக்கல்,
> காவடிதூக்கல், அங்கப்பிரதக்ஷணம், இத்யாதி. இல்லையா?
> இதற்கும் மேலாக ஒன்று. தீவிர தன்னம்பிக்கையுடன் கூடிய
> முயற்சி.
> புதிய ஏற்பாட்டில் மாத்யூ காஸ்ப்பலில்கண்டுள்ளபடிக்கு
> "உங்களிடம் இப்போது ஒரு கடுகு அளவுக்கே நம்பிக்கை இருந்து,
> அருகில் இருக்கும் ஒரு மலையைப் பார்த்து,"ஏ மலையே இங்கிருந்து
> நகர்ந்து அங்கு போ என்று நீங்கள் கட்டளையிட்டால் அந்த மலையே
> நகர்ந்து அப்பால் சென்றுவிடும்". (தற்காலத் தமிழில் மொழிபெயர்ப்பு என்னுடையது-பிழையிருப்பின்
நானே காரணன்).
> க்ரெக் லெமாண்(Greg LeMond) என்ற ஆசாமியைப் பற்றிக்
> கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர் ஒரு சைக்கிள் ரேஸ் சாம்பியன்.
> ஒரு வேட்டையின் போது அவருடைய மைத்துனரின் துப்பாக்கி
> வெடித்ததில் அறுபது ரவைகள் முதுகிலும்பக்கவாட்டிலும் பாய்ந்தன.
> இறக்கும் தறுவாயில் ஓர் உலங்குவானூர்தி(Helicopter-நன்றி தமிழீழம்
> தினசரி செய்தித்தளம்) அவரை எடுத்துச்சென்றது. பல நாட்கள்
> படிப்படியாக செய்யப்பட்ட ஆப்பரேஷனில் முப்பது ரவைகளை மட்டுமே
> எடுக்கமுடிந்தது. அவற்றில் இரண்டு இதயத்தில் பதிந்திருந்தன.
> அதே ஆண்டு அப்பெண்டிஸைட்டிஸ் ஆப்பரேஷன். பன்னிரண்டு
> மாதங்கள் சும்மாயிருந்தார். பிறகு டெண்டன் கிழிந்ததால் அதற்கு இன்னொருஆப்பரேஷன். இதில் இன்னும்
ஒரு வருடம்
> வீணாகியது.
> ஆனால் சைக்கிள் பந்தயத்தை மட்டும் மறக்கவே முடியவில்லை.
> அடுத்து பாரிஸ்நகரின் பெரிய ரேஸ் - தூர் தெ ஃப்ரான்ஸ்.
> பாரிஸ்நகர சாம்பியன்ன் ஃபின்யோங்தான் ஜெயிப்பார் என்று அனைவருமே
> முடிவு கட்டிவிட்டனர். பாவம். க்ரெக் ஒருபரிதாபமான தோற்றாங்கொள்ளி
> என்றும் நிச்சயம் செய்துவிட்டனர்.
> ரேஸில் க்ரெகால் வேகமாக ஓட்டமுடியவில்லை. கடுமையான
> வலி. கடைசி கட்டம். க்ரெக் 50 விநாடிகள் பின் தங்கியிருந்தார்.
> இன்னும் இருபத்துநாலு கீலோமீட்டரேபாக்கியிருந்தன.
> ஐம்பது விநாடியையும் இதற்குள் சரிக்கட்டி, முன்னுக்கும் வந்துவிடவேண்டும்.
> அப்படியே சங்கல்ப்பத்தோடு மூர்க்கவெறியோடு சைக்கிளை
> ஓட்டினார்.
> ஐந்தே அடிகள் வித்தியாசத்தில் முன்னுக்கு வந்து வென்றார்.
> 1989இல் நடந்தது இது.
> மனதின் ஆற்றல். உந்துதல். அது நிச்சயமான தோல்வியை
> வெற்றியாக மாற்றித்தந்துவிட்டது.
> மனதின் வலிமையாலேயே தீராதநோய்கள்கூட தீர்ந்திருக்கின்றன.
> பிரார்த்தனையின் மகிமையால் அற்புதம் என்று வியக்கும்
> நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இரண்டாம் உலக யுத்தத்தில்,ஜெனரல்
> ஜார்ஜ் பேட்டனுடைய மூன்றாவது படைத்தொகுதி., ஜெர்மனியை
> நோக்கித் தென் கிழக்காகப் போய்க்கொண்டிருந்ததை விட்டுவிட்டு வடபுறம்
> திரும்பி, பெல்ஜியத்தில் மாட்டிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் படையை
> விடுவிக்க வேண்டியிருந்தது.
> கிரிஸ்மஸுக்கு மூன்றுநாட்கள் இருந்தன.கடுமையான பனி
> கொட்டிக்கொண்டிருந்தது. விமானங்கள்பறக்கமுடியவில்லை.
> விமான பலமின்றி ஜெர்மன் பான்ஸரின் "ஆர்டனீஸ்" பாய்ச்சலை முறியடிக்க
> முடியாது.
> அப்போது பேட்டன், படையின் சாப்லேய்னை அழைத்து
> நல்ல பருவநிலையை வேண்டி பிரார்த்தனை ஒன்றை இயற்றுமாறு
> ஆணையிட்டார். அந்த பிரார்த்தனையைலட்சக்கனக்கான போர்வீரர்கள்
> ஒரே நேரத்தில் செய்தார்கள். சிறிதுநேரத்தில் பருவநிலையில் பெரிய
> மாற்றம் ஏற்படது. பல நாட்களாக கண்ணுக்கே தெரியாமலிருந்த சூரியன் பிரகாசிக்க ஆரம்பித்தது!
> போரின் நிலை மாறியது. அதற்கப்புறம் பேட்டானின் வேகமான
> முன்னேற்றத்தை யாராலும் தடுக்கமுடியவில்லை.
> "கலையாத கல்வியும், குறையாத வயதும்,கபடு வராத நட்பும்"
> என்ற பாடலில் அன்னை அபிராமியிடம் நீண்ட பட்டியலிட்டுக்கொண்டு
> பதினாறு பேறுகளையும் நிறையவே கேட்கிறார் அபிராமி பட்டர்.
> இப்பாடலின் முடிவில் அபிராமி தோன்றி, "மகனே சுப்பிரமணிய
> பட்டா! எல்லாமே விதிப்படிதான் நடக்கும். ஆகவே நீ கேட்பது எதையுமே
> தருவதற்கு என்னால் முடியாது", என்று கூறினால் எப்படியிருக்கும்?
> கோளும் மீனும்தான் எல்லாவற்றையும்நிர்ணயிக்கின்றன என்றால்
> இறைவனுக்கோ இறைவழிபாட்டுக்கோதான் என்ன பொருள்? கேட்டாலும்
> கொடுக்கப்படமாட்டது; கிடைப்பதற்குவிதியில்லை என்றால் கேட்பது
> ஏது; கிடைப்பதுதான் ஏது?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>>இவரே பின்னர், சேர தேசம் வந்து வான்வெளி சென்ற கண்ணகியின் வரலாறினை
>>மலைவாழ் மக்கள் மூலம் அறியப்பெற்று,காப்பியம் படைக்க எண்ணி எழுதியதேசிலப்பதிகாரம்.
>>
>>இச்சம்பவத்தின் உண்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.
>>
>>மற்றும், என்னைத் தமிழிணையத்துக்குவரவேற்றவர்களுள் ஒருவரான, எல்லே ராம்
>>அவர்களின் மெளனம் கலைத்(ந்)தற்காகமகிழ்ச்சி அடைகிறேன்.
>>
>>
>>அன்பு(டன்).
>>
>========================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com