From Thu Feb 4 17:14:58 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 28471 invoked by uid 7770); 5 Feb 1999 01:14:42 -0000
Received: from pop04.iname.net (165.251.8.69) by vault.findmail.com with SMTP; 5 Feb 1999 01:14:42 -0000
Received: from illusion (ss04.co.us.ibm.com [32.97.110.69]) by pop04.iname.net (8.9.0/8.8.0) with SMTP id UAA24198 for ; Thu, 4 Feb 1999 20:14:35 -0500 (EST)
Sender: anbu@...
Message-ID: <36BA454F.2BCDA589@...>
Date: Thu, 04 Feb 1999 20:11:43 -0500
From: "Anbumani. S"
Organization: ***
X-Mailer: Mozilla 3.04Gold (X11; I; Linux 2.0.30 i586)
MIME-Version: 1.0
To: Agathiyar
Subject: [agathiyar] Knowledge deserves respect
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 101

அகத்தியர்களுக்கு,

சில வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் ஒருபட்டிமன்றம். தலைப்பு - காலத்தினால்
அழிக்க முடியாதது செல்வமா, கல்வியா? (தலைப்பு சரியாக ஞாபகமில்லை).
அதில் ஒரு பெண்மணிகல்விக்காக வாதாடினார். அவர் மேற்கோள் காட்டிய ஒரு
சம்பவம் இன்னும் மனதில் ஒளித்துக்கொண்டிருப்பதால் இங்கு எழுதுகிறேன்.

ஒருமுறை டாக்டர். ராதாகிருஷ்ணன் (இந்தியாவின் முதல் ஜனாதிபதி) அவர்கள்
அமெரிக்கா வந்திருந்தாராம். வெள்ளைமாளிகை விஜயம் செய்த அவருக்கு
அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் (சரியாக ஞாபகமில்லை) அவரை
வெள்ளை விமானத்தில் அழைத்துச் சென்றாராம். (கவனிக்க - வெள்ளை விமானத்தில்
அமெரிக்க ஜனாதிபதி **மட்டுமே** பயணம் செய்யலாமாம்). இதற்காக செனட்டில்ஏகப்பட்ட
கேள்விகள் எழுந்தனவாம். இதனைச் சமாளித்துப் பதில் கூறிய ஜனாதிபதி
சொன்ன பதில், "நான் செய்தது மாணவன்,ஆசிரியருக்குச் செய்ததற்கு ஒப்பானது.
ராதாகிருஷ்ணன் எனது ஆசான்", என்றாராம். ராதாகிருஷ்ணன் அவர்கள் தமது
படிப்பால் மட்டுமே மரியாதை பெற்ற சம்பவம் இது.

மிக சுருக்கமாக எழுதியுள்ளேன். வரலாறு தெரிந்தவர்கள் இச்சம்பவத்தின் உண்மை
நிகழ்வு பற்றி எழுதவும்.

மற்றபடி, டாக்டர் ஜெ.பி. அவர்கள் முன்னர் எழுதப்பட்ட இளங்கோவடிகள் சம்பவத்தின்
உண்மையயைப் பற்றி எழுதவில்லையே ? மறந்துவிட்டாரா ?



அன்பு(டன்).
PS: இம்மடல் அகத்தியத்தின் நோக்கத்தைவிட்டு விலகியிருந்தால் மன்னிக்கவும்.

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com