From Thu Feb 4 18:12:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-Agathiyar@egroups.com
Received: (qmail 25774 invoked by uid 7770); 5 Feb 1999 02:11:50 -0000
Received: from goose.prod.itd.earthlink.net (207.217.120.18) by vault.findmail.com with SMTP; 5 Feb 1999 02:11:50 -0000
Received: from default (pool004-max10.ds27-ca-us.dialup.earthlink.net [209.178.101.204]) by goose.prod.itd.earthlink.net (8.8.7/8.8.5) with SMTP id SAA12171 for ; Thu, 4 Feb 1999 18:11:42 -0800 (PST)
Message-ID: <004001be5093$2c6e6700$cc65b2d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Thu, 4 Feb 1999 18:07:43 -0500
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] iLango and astrology
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 103

எல்லாம் விதிவழியே நடக்கும் எனினும், பரிகாரங்கள்
இறைநம்பிக்கை, பிரார்த்தனை முதலியவற்றால்,
துன்பத்தைப் பொறுக்கும் ஆற்றல் மிகுந்து, துன்பம்
தெரியாமல் போய்விடும். கோள்களின் பலனை
மாற்றமுடியாது. மனோதத்துவ ரீதியிலும் ஒரு
துன்பம் நிறந்த காலத்தில் இந்த கஷ்டம் இந்தக் கோளின்
தசையில் வந்தது என்றறிந்து பரிகாரம் தேடுவது,
மனத்துக்கு இதமளிக்கும். இன்பம் நிறந்த காலத்தில்
இது இதனால் விளைந்தது என்றறிவது, அகம்பாவம்
குறந்து தன்னடக்கத்துடன் இருக்க உதவும்.

இளங்கோவின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர்
பெரும்புகழடையும் வண்ணம் கோள்கள் நிற்பதுகண்டு
"இவர் அரசனாகிப் புகழடைவார்" என்று தவறாக
ஊகித்திருக்கவேண்டும். தவறு ஜாதகத்தில் இல்லை;
தவறாகப் பொருள் கொண்ட ஜோதிடரிடமே.
சிலப்பதிகாரம் படைத்து பெரும்புகழடைந்ததே
இளங்கோவின் ஜாதகம் சரியானது என்பதற்கு சான்றாகும்.

தவிரவும் ஜாதகத்தில் ஒரு உத்தேசமான கணிப்பையே
சொல்ல முடியும். ஜோஸ்ய சாஸ்திரங்கள் எழுதப்பட்ட
காலத்தில் இல்லாத பல தொழில்கள் இப்பொழுது உள்ளன.
நான் Systems Analyst ஆக வருவேன் என்று ஏன் சொல்லவில்லை
என்று கேட்கக்கூடாது. கிரக அமைப்பில் அடிமைத்தொழில்
கிடையாது அதாவது ஒருவர் கீழ் வேலை செய்யாமல் இருப்பாய்
என்று தான் சொல்ல முடியும். ஓகோ, நாம் ஒரு கான்டிராக்டரா
இருப்போம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தவறான நேரக்கணிப்பினால் சிலருக்கு ஜாதக பலன்கள்
சரியாக இருப்பதில்லை. அதனால் ஜாதகத்தில் நம்பிக்கை போய்விடுகிறது.
வைதீக காரியங்களுக்கு பயன்படும்
பாம்பு பஞ்சாங்கத்துக்கும், ஜோதிடர் பயன் படுத்தும் திருக்கணித
பஞ்சாங்கத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.
ஜாதகத்தில் கெட்ட பலன்கள் கண்டு மனம் துவள்வதோ,
அல்லது நல்ல பலன் கண்டு நம் முயற்சிகளை செய்யாமல்
வாளாவிருப்பதோ கூடாது.

ஒரு கதை. ஜெனா பானா முன்னமே சொல்லியிருக்கிறார் என்று
நினைக்கிறேன். சனியால் ஒரு குறிப்பிட்ட காலத்தில்
பீடிக்கப்படுவோம் என்று அறிந்து, சாதகத்தைப்பொய்யாக்க
எண்ணி சாக்கடையில் ஒளிந்தானாம் ஒருவன். பிறகு வெளியே
வந்து ஜாதகத்தைப் பொய்யாக்கிவிட்டேன் பார் என்று
சொன்னான். ஜோசியர் சொன்னார், உன்னை சாக்கடையில்
ஒளிய வைத்ததே சனியின் பார்வைதான்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்




------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com