From jayabarathi Thu Feb 4 20:01:28 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 18373 invoked by uid 7770); 5 Feb 1999 04:01:15 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.findmail.com with SMTP; 5 Feb 1999 04:01:15 -0000
Received: from umlugghc ([202.188.69.30]) by cgi1.tm.net.my (InterMail v03.02.03 118 118) with SMTP id <19990205040106.FIPO29581@[202.188.69.30]>; Fri, 5 Feb 1999 12:01:06 +0800
Message-Id: <3.0.3.32.19990205093458.00822630@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 05 Feb 1999 09:34:58 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "N. Swaminathan"
In-Reply-To: <004001be5093$2c6e6700$cc65b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: iLango and astrology
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 104

At 06:07 PM 2/4/99 -0500, you wrote:
>எல்லாம் விதிவழியே நடக்கும் எனினும், பரிகாரங்கள்
>இறைநம்பிக்கை, பிரார்த்தனை முதலியவற்றால்,
>துன்பத்தைப் பொறுக்கும் ஆற்றல் மிகுந்து,துன்பம்
>தெரியாமல் போய்விடும். கோள்களின்பலனை
>மாற்றமுடியாது. மனோதத்துவ ரீதியிலும் ஒரு
>துன்பம் நிறந்த காலத்தில் இந்த கஷ்டம்இந்தக் கோளின்
>தசையில் வந்தது என்றறிந்து பரிகாரம்தேடுவது,
>மனத்துக்கு இதமளிக்கும். இன்பம் நிறந்தகாலத்தில்
>இது இதனால் விளைந்தது என்றறிவது, அகம்பாவம்
>குறந்து தன்னடக்கத்துடன் இருக்க உதவும்.

இதேதான். கோள்கள் indicators ஆகச்செயல்படுகின்றன.
"ஜ்யோதிஷ" என்றாலேயே ஒளிதான்.வேதத்திற்கு ஆறு அங்கங்கள்
உண்டு. அவைதாம் ஷட் அங்கங்கள்(ஷடங்கம்).இதிலிருந்து வந்ததுதான்
சடங்கு. அங்களுக்கு உப அங்கங்களும் உண்டு.அவற்றை உபாங்கம்
என்பார்கள். "சாங்கோபாங்கமாக" என்றுசொல்வார்களே. வேறொன்றுமில்லை.
ச+அங்க+உப அங்கமாக, அதாவது அங்கஉபாங்கங்களின் துணையோடு
விலாவாரியாக விவரித்தல்.
வேதங்களின் ஆறு அங்கங்களில் கண்ணாகக்கருதப்படுவது,
ஜோதிடமே. காலத்தைச் சூழ்ந்திருக்கும்இருளை ஊடுருவிச்சென்று
நிகழ்ச்சிகளைக் காட்டும் ஒளி என்றுகருதினார்கள்.
ஓர் அறையில் இருளில் ஒரு தேள் இருக்கிறது. உள்ளே
சென்றால் மிதிப்போம்; கொட்டிவிடும்.இது ஒரு சாத்தியக்கூறு.
ஒரு டார்ச் விளக்கை அடித்துப்பார்க்கிறோம். அந்த ஒளியில் தேள்
இருப்பது தெரிகிறது. ஆகவே அறைக்குள்செல்லாமல் விடுகிறோம்;
அல்லது விளக்குமாற்றால் அடித்துக்கொல்கிறோம். அல்லது தேள்
ஓடிவிடுகிறது; அல்லது தேளைத் தாண்டிச்செல்கிறோம். இவை
அனைத்துமே வெவ்வேறு சாத்தியக்கூறுகள்தாம். ஒவ்வொரு சாத்தியக்
க்கூறுவிலிருந்தும் வேறு வேறு தொடர்பான விளைவுகளும் நிகழ்ச்சிகளும்
ஏற்படும். தேள் கொட்டினால் அதன் சங்கிலித்தொடர் நிகழ்ச்சிகள்
ஒரு வகை - அலறல், மயக்கம், நட்டுவாக்காலியாக இருந்தால் இறப்பு;
ஆஸ்பத்திரி, வைத்தியம், மெடிக்கல் லீவு, பல செயல்களின் ஒத்திவைப்பு
என்று போய்க்கொண்டேயிருக்கும். தேள்கொட்டவில்லையானால்
வேறு வகையான தொடர்நிகழ்ச்சிகள்.
இப்போடு ஒரு கேள்வி. அந்தத் தேள் உள்ளே ஏற்கனவே
இருந்ததா? டார்ச் அடித்ததால் தேள் இருந்தது தெரிந்ததா அல்லது
டார்ச் அடித்ததால்தான் அந்த ஒளியால் தேள் புதிதாக ஏற்பட்டதா?
அதுபோலத்தான். இந்துவியக் கருத்தைச்சொல்கிறேன்.
(இந்துவியம் = Hinduistic; என்ன செய்வது? "ஹிந்துத்வம்" என்னும்
சொல்லை யாரெல்லாமோ எடுத்துக்கொண்டுவிட்டார்களே? அந்தச்
சொல்லின் அர்த்தமும் மாறிவிட்டதே?)இப்பிறவியில் நடக்கவிருப்பவை
ஏற்கனவே சேர்ந்துவிட்ட சஞ்சிதம், ஆகாமியம், பிராரத்தம் ஆகிய
மூவினைகளால் என்பதே அக்கருத்து. அதன்விளைவாக வாழ்வின்
பாதையில் ஆங்காங்கு நல்லனவும் தீயனவாகவுமாக நிகழ்ச்சிகள்
காத்திருக்கின்றன. அவை நடக்கவிருக்கும் நேரம்காலம் முதலியவற்றை
மீன்கள், கோள்கள், அவற்றின் பார்வைகள், சம்பந்தங்கள் முதலியவை
காட்டுவதோடு, அவற்றை எப்படி தவிர்ப்பது என்பதற்கும் வழிகாட்டுகின்றன.
வாழ்வின் குறிப்பிட்ட சமயத்தில், முன்செய்த வினைகளின் விளைவாகவும்
இன்னும் சில விஷயங்களின் கூட்டுச்சேர்க்கையாகவும் ஒரு நிகழ்ச்சி
நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது நான்காம் இடத்திற்கு
சனி வரும்போது ஏற்படுகிறது என்றுவைத்துக்கொள்வோம்.
நிகழ்ச்சிகளுக்கும் கோள்கள் மீன்களின் போக்குக்கும் தொடர்புகள்
உள்ளன. அந்தத் தொடர்பைப் பயன் படுத்தி, ஒரு வகையான
reverse application மூலம் கோள்களைச் சாந்தி செய்து,
அதே நேரத்தில் நம்முடைய மனப்பன்மையிலும் நடவடிக்கைகளும்
செயல்திட்டங்களிலும் பல மாறுதல்களைச்செய்து கொள்கிறோம்.
இந்த குறிப்பிட்ட உதாரணத்தில் திருநள்ளாறு, சனிக்கிழமை
விரதம், வெங்கடாசலபதிக்கு நேர்த்திக்கடன், சனிக்கு சாந்தி
என்று செய்யப்படுகிறது.
இன்னொன்றும் உண்டு. ஒரு Placebo Effect இருப்பதையும்
நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறேன்.
Objectiveஆக ஜோதிடம் பயன்படுத்தப்பட்டால் அதனால்
நன்மைகள் உண்டு. ஆனால் இக்காலத்தில் அதனை வைத்து ஜனங்களிடம்
பீதியையும் தன்னம்பிக்கையின்மையையும் ஏற்படுத்திவிடுகிறார்களே?


>
>இளங்கோவின் ஜாதகத்தை ஆராய்ந்தஜோதிடர்
>பெரும்புகழடையும் வண்ணம் கோள்கள் நிற்பதுகண்டு
>"இவர் அரசனாகிப் புகழடைவார்" என்றுதவறாக
>ஊகித்திருக்கவேண்டும். தவறு ஜாதகத்தில் இல்லை;
>தவறாகப் பொருள் கொண்ட ஜோதிடரிடமே.
>சிலப்பதிகாரம் படைத்து பெரும்புகழடைந்ததே
>இளங்கோவின் ஜாதகம் சரியானது என்பதற்கு சான்றாகும்.


துறவிகளில் அரசாகவும் விளங்கலாம்.பார் ஆள்பவன்தான்
அரசன் என்பதில்லை. அரச அம்சம் பெற்றிருப்பதையும், தோரணைகள்
வசதிகள் ஆகியவை அமைவதையும்கூடசாத்திரங்கள் சொல்கின்றன.
"ராஜரீகம்" என்று இதனைசொல்வார்கள்.
நவாப் ராஜமாணிக்கம் என்பவர் பெரியநாடகக்கம்பெனி
ஒன்றை வைத்திருந்தார். அதுவரை யாருமேசெய்யாத அளவுக்கு
நாடகத்துறையில் Grandeur and Magnificence என்பதைஏற்படுத்தியவர்.
மனோகர் பின்னால்தானே செய்தார்.
அவருடைய ஜாதகத்தில் ராஜரீகம் இருந்தது என்று சொல்வார்கள்.
அவருடைய நாடகங்களில் அவர் கம்சன்,சிசுபாலன் என்று அரசர்கள்
வேடம்தான் போடுவார். வேடம்போடும்போது தன்னையே அரசனாகப்
பாவித்துக் கொள்வார்.
"பக்த ராமதாசர்" என்னும் நாடகம். அதில் அவர் நவாபாக
வேடமேற்பார். அவ்வளவு தத்ரூபமாகயிருக்கும். ஆகவே "நவாப் ராஜமாணிக்கம்"
என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது.
உண்மையான ராஜாவாக இல்லையென்றாலும் ராஜாவாக நடித்தார்.
அப்படியே பாவித்துக்கொள்வார். பெயரும் "நவாப்" என்றே கடைசிவரை
நிலைத்து விட்டது.

>
>தவிரவும் ஜாதகத்தில் ஒரு உத்தேசமானகணிப்பையே
>சொல்ல முடியும். ஜோஸ்ய சாஸ்திரங்கள்எழுதப்பட்ட
>காலத்தில் இல்லாத பல தொழில்கள்இப்பொழுது உள்ளன.
>நான் Systems Analyst ஆக வருவேன் என்று ஏன்சொல்லவில்லை
>என்று கேட்கக்கூடாது. கிரக அமைப்பில்அடிமைத்தொழில்
>கிடையாது அதாவது ஒருவர் கீழ் வேலைசெய்யாமல் இருப்பாய்
>என்று தான் சொல்ல முடியும். ஓகோ, நாம்ஒரு கான்டிராக்டரா
>இருப்போம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது ஒரு ஜோக். அப்படியே எடுத்துக்கொள்ளுஙள்.
ஓர் ஆசாமியின் தினபலனில் "வாகனப்ராப்தி, நூதன ஸ்த்ரீகளின்
சிக்ஷ்ருட்சை" என்று போட்டிருந்தது.
"என்னடாயிது! இதெல்லாம் எப்படி ஏற்படமுடியும்?
நாம் எங்கும் பஸ்ஸில்கூட செல்வதாகயில்லையே! பெண்கள்
சம்பந்தமும் கிடையாதே?" என்றெல்லாம்எண்ணிக்கொண்டே
வீதியில் நடந்து சென்றான். திடீரென்றுஅவன்மீது கார் மோதிவிட்டது.
காயத்துடன் மயக்கமாக விழுந்துவிட்டான். ஆம்புலன்ஸ் வந்தது.
அதன் உள்ளேயே ஆக்ஸிஜன், ட்ரிப் எல்லாம் கொடுக்கப்பட்டு, சைரனைப்போட்டுக்கொண்டு மிகவேகமாக
ஆம்புலன்ஸ் மருத்துமனை
சென்றது. அங்கு வைத்தியம். வார்டில் நர்ஸ்மார்கள் அவனை சுத்தப்படுத்தி
வேறு உடை தந்து சாப்பாடு, மருந்தெல்லாம் தந்து கவனித்தன்ர்.
இப்படியாகத்தானே "வாகனப்ராப்தி" -ஆம்புலன்ஸ் பயணம்,
"நூதனஸ்த்ரீகளின் சிக்ஷ்ருட்சை" - நர்ஸ்களின் பணிவிடை ஏற்பட்டு
அந்த தின பலன் உண்மையாகியது.






>
>தவறான நேரக்கணிப்பினால் சிலருக்குஜாதக பலன்கள்
>சரியாக இருப்பதில்லை. அதனால் ஜாதகத்தில் நம்பிக்கை போய்விடுகிறது.
>வைதீக காரியங்களுக்கு பயன்படும்
>பாம்பு பஞ்சாங்கத்துக்கும், ஜோதிடர் பயன் படுத்தும் திருக்கணித
>பஞ்சாங்கத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.
>ஜாதகத்தில் கெட்ட பலன்கள் கண்டு மனம்துவள்வதோ,
>அல்லது நல்ல பலன் கண்டு நம் முயற்சிகளைசெய்யாமல்
>வாளாவிருப்பதோ கூடாது.
>
>ஒரு கதை. ஜெனா பானா முன்னமே சொல்லியிருக்கிறார் என்று
>நினைக்கிறேன். சனியால் ஒரு குறிப்பிட்ட காலத்தில்
>பீடிக்கப்படுவோம் என்று அறிந்து,சாதகத்தைப்பொய்யாக்க
>எண்ணி சாக்கடையில் ஒளிந்தானாம் ஒருவன். பிறகு வெளியே
>வந்து ஜாதகத்தைப் பொய்யாக்கிவிட்டேன் பார் என்று
>சொன்னான். ஜோசியர் சொன்னார், உன்னை சாக்கடையில்
>ஒளிய வைத்ததே சனியின் பார்வைதான்.

இந்தக்கதை இன்னும் சொல்லவில்லை. அதுவேறு.
இன்னொன்றும் கூட இருக்கிறது. இன்னொருசமயம் சொல்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
>
===========================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com