From Krishnan Sat Feb 6 19:13:09 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 2444 invoked by uid 7770); 7 Feb 1999 03:12:53 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 7 Feb 1999 03:12:53 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id LAA03366; Sun, 7 Feb 1999 11:12:40 +0800 (SGT)
Received: from default (dyn245ppp187.pacific.net.sg [210.24.245.187]) by pop1.pacific.net.sg with SMTP id LAA07764; Sun, 7 Feb 1999 11:12:31 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990207111248.0079cd00@...>
X-Sender: kisna@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Sun, 07 Feb 1999 11:12:48 +0800
To: Tamil@...@everbestweb.com
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] siddhagalen samuthaaya samanookku. [ சித்தர்களின் சமுதாய சமநோக்கு .# 5]
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 109


சித்தர்களின் சமுதாய சமநோக்கு.# 5
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மலை, கடல், முதலியவற்றால் பிரிக்கப்பட்ட மனிதன் , மேலும் தனக்குள் சாதி, சடங்கு
முதலியவற்றால் பிரித்துக் கொண்டான்.இப்பிரிவினைக்கு உரம் ஊட்டுவது போல்கடவுட் கொள்கை
சமயமும், சேர்த்துகொண்டான். '" உங்கள்தெய்வம் ,எங்கள் தெய்வம் என்று கருதிக்கருத்து
வேறுபாடுகளைப் பகுத்துக் கொள்ளுகின்றபாதர்களை தெய்வம் எங்கும் உண்டு " எனச்சாடுகின்றார்.
இதனை தனது ஞானவெட்டியான் 1500 என்னும்நூலில் :

" உங்கள் தெய்வ உண்டெனவும் வேறு செய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்களுற் பவித்தார்
பங்கமதாய் வேறு செய்யும் பாதகரேஅங்குமிங்கும்
எங்கெங்குமாய் நிறைந்த ஈசனென்றறிகிலீரே "
- ஞானவெட்டியான் பாடல் 616
" ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம்பூரணமே "
- பட்டினத்தார் பாடல் :30
" ஒருவனென்றே தெய்வத்வதை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனி லிருக்க வேணும்
` - பட்டினத்தார் பாடல் 68
கட்டோடே கனத்தேடே வாழ்ந்து , பட்டோடே பணியோடே திரிந்து , கொட்டோடே முழக்கோடே
கோலங்கண்டு, பண்ணாத தீமைகள் பண்ணி,பகராத வன்மொழிகள் பகர்ந்து , நண்ணாத
தீயினம் நண்ணி, நடவாத நடத்தை நடந்து ,உள்ளொன்று வைத்து புறமொன்றுப் பேசித்
திரிவார்; ஆலயம்
சென்று புற அபிசேகம் செய்தல், பாவம்போக்கும் என்று வந்தனர்- வருகின்றனர்.
இத்தகையோரைப் பார்த்துப் பாடுவதேஇவ்வறிவுரைப் பாடல்கள்

.
பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி, அப்பனி மலர் எடுக்க
மனமும் நண்ணேன் எனத் தாயுமானார் பாடுவதுவதும்
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடினேன்"
என இராமலிங்க சுவாமிகள் பாடியதுபோலவும், மனம் செம்மைப் படுவதே உயரிய வழிபாடு ஆகும்.
" மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் " எனத் திருமூலர் கூறுவதைக் காணலாம்.

எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ,பொதுவாகச் சீர்திருத்தம் பேசியவர்கள் ஏதாகிலும்
ஒரு வகையில் அரசியலோடு தொடர்புகொண்டவர்களாவே விளங்குகின்றனர்.ஆனால், சித்தர்கள்
அவ்விதிக்கு விலக்காவர் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது.
மனிதரில் சிலருக்கு இருக்கும் பலவீனமான நம்பிக்கையைப்பயன் படுத்திச் சிலர் - சமய
துறையில் இருந்து கொண்டு ,பயன்படுத்திக் கொண்டு வயிற்றையும், பொருளையும்பெருக்கி
வருகிறார்கள்.
இத்தகையயோர் எக்காலத்தும் இருப்பார்கள் போலும். இவர்களைச் சாடிப் பாடும்
பாடல்கள் சில,
அவைகளை நாளை காண்போம்....

அன்புடன்,
கிருஷ்ணன்


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com