From jayabarathi Sat Feb 6 19:56:58 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14704 invoked by uid 7770); 7 Feb 1999 03:56:54 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.findmail.com with SMTP; 7 Feb 1999 03:56:54 -0000
Received: from umlugghc ([202.188.69.210]) by cgi2.tm.net.my (InterMail v03.02.03 118 118) with SMTP id <19990207035646.ECR17787@[202.188.69.210]> for ; Sun, 7 Feb 1999 11:56:46 +0800
Message-Id: <3.0.3.32.19990206205736.0082fbf0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 06 Feb 1999 20:57:36 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Never say die
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 110



அன்புள்ள நண்பர்களே,

அகத்திய குழுவைச் சேர்ந்தவர்களை"அகத்தியத்தார்"
என்று அழைக்காமலிருப்பதற்கு காரணமுண்டு. ஒரு தனிப்பாடலில்
"அகத்தியத்தார்" என்பது "அகம்+தியத்தார்" என்று பிரிக்கப்பட்டு
சிலேடையாக விளங்குகிறது. "மனம்கலங்கியவர்" என்று அப்பாடலில்
பொருள் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அமைவதில் தமிழ் மரபுப்படி அறம் விழுந்துவிடும்.
ஆகவேதான் அது தவிர்க்கப்பட்டுவிட்டது.(இப்போது சுமனுக்கு
இன்னொரு சந்தேகம் - "அறம் விழுவது" என்றால் என்ன?)
தமிழ்ப் புலவர்களில் எனக்குப் பிடித்தவர்களில் முன்னணியில்
நிற்பவர் எட்டையாபுரம் கடிகைமுத்துப்புலவர். அவர் ஒன்றும் பிரமாதமாகப்
பாடியதால் அந்த இடத்தைப் பிடித்துவிடவில்லை.
சாகப்போகும் நேரத்திலும் சிலேடையாக ஜோக் அடித்தவர்
அவர். அதான்.
இறப்பு நெருங்கிய சமயத்தில் அவருக்குஉணவு உட்கொள்ள
முடியவில்லை. இப்போது மாதிரி drip,intra-gastric feeding எல்லாம்
அப்போது ஏது?
துணியைப் பாலில் நனைத்து, வாயைலேசாகத்திறந்து,
பாலைப் பிழிந்துவிடுவார்கள். அது சொட்டாகவும் மெல்லிய தாரையாகவும்
வாய்க்குள் சிறிய அளவில் சென்றது. புலவர் அதை மெதுவாக விழுங்குவார்.
ஒரு முறை, இவ்வாறு பாலைத் துணியில் நனைத்து, வாயில்
பிழியும்போது, பாலை உமிழ்ந்துவிட்டார்.

அருகில் இருந்தவர்கள் மிகக்கவலையுடன்கேட்டனர்,
"பாலும் கசந்ததோ?"

அந்த நிலையிலும் புலவர் மெல்லிய குரலில் சொன்னார்,
"பாலும் கசக்கவில்லை; துணியும் கசக்கவில்லை".

(முன்னது கசப்பையும், பின்னது துணியைமுதலிலேயே சுத்தமாக க்கசக்கிப்பிழியாமல், அழுக்குத்துணியால்
பால் புகட்டியதையும் குறிக்கும்).

அன்புடன்

ஜெயபாரதி

================================================









------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com