From Krishnan Sun Feb 7 15:34:58 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 31341 invoked by uid 7770); 7 Feb 1999 23:34:54 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 7 Feb 1999 23:34:54 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id HAA21112; Mon, 8 Feb 1999 07:34:23 +0800 (SGT)
Received: from default (dyn121ppp78.pacific.net.sg [210.24.121.78]) by pop1.pacific.net.sg with SMTP id HAA17847; Mon, 8 Feb 1999 07:34:21 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990208073514.0079c7e0@...>
X-Sender: kisna@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Mon, 08 Feb 1999 07:35:14 +0800
To: Tamil@...@everbestweb.com
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] siddhagalen samuthaaya samanookku. [ சித்தர்களின் சமுதாய சமநோக்கு .# 6]
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 111


சித்தர்களின் சமுதாய சமநோக்கு.# 6.
....>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<...

போலிகளைச் சாடி சித்தர்கள் பாடியசில பாடல்கள் :-

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உத்தேசம் பகர்வோ என்பான்
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையும் அன்றோ சொல்வான்
நேர்ப்பா சீடனுக்குப் பாவமாச்சு
நிட்டை சொல்லுங் குருக்க்ளுக்குத் தோடமாச்சு
வீரப்பா அடக்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோல முடிந்ததென்று விளம்புவானே..
சித்தர் ஞானக்கோவை : காகசுண்டர்பாடல் :35.


இத்தகைய போலித் துறவிகளின் மாயவித்தைக்கண்டு மனதைப் பறிகொடுக்க வேண்டாம் என்பதே
சித்தர்களது அறிவுறுத்தல். இத்தகையவேடதாரிகளை இனங்கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காக
மெய்ஞ்ஞானிகளின் இலக்கணத்தைக் கூறுகிறார் பட்டினத்தார்.

பேய்போல திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்றுநன் மங்கைரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே

பத்திரகிரியாரும், சிவவாக்கியரும்ஏற்க்குறைய ஒத்த கருத்துக்களை கூறிகிறார்கள். எத்துணை
உயர்ந்த நிலை இது.! அனைத்தும் அடங்கியநிலை அன்றோ இது ! இத்தகையாரே தூயதுறவிகள் -
இவர்கள் சமுதாயம் உய்யும் , போலித்துறவிகளைப் பின்பற்றுவதால் அழிவு நேரும் என்கிறார் திருமூலர்:

குடுடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழு மாறே -
திருமந்திரம் 1652.
என்பது பாடல். " வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர்.குருடனுக்கு
குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்றும் இருத்துவ வேதமும் கூறுவது இங்கு
நோக்கத்தக்கது.

உண்மையை அறியாது அப்படியே கண்ணைமூடிக்கொண்டு மக்கள் உள்ளார்கள். ஆதியிலே
இதனை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன்மறைத்ததை இன்னும் பலர் விடை காணவில்லை.
நாமும் உண்மையை உணராது - உணர முயலாதுசாதிலும், மதங்களிலும் சமய நெறிகளிலும்,
சாத்திர சந்தடிகளிலும், கோத்திரச்சண்டையிலும் அலைந்தலைந்து வீண் போகின்றோம்.

நாளை சித்தர்களின் இலக்கிய நயமும்,உவமையும் பார்ப்போம்,
அதுவரை,
அன்புடன்,
கிருஷ்ணன்






------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com