From Krishnan Mon Feb 8 19:02:42 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1125 invoked by uid 7770); 9 Feb 1999 03:02:20 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 9 Feb 1999 03:02:20 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id LAA27924; Tue, 9 Feb 1999 11:02:05 +0800 (SGT)
Received: from kisna (dyn243ppp68.pacific.net.sg [210.24.243.68]) by pop1.pacific.net.sg with SMTP id LAA24521; Tue, 9 Feb 1999 11:02:02 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990211043154.007a76a0@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Thu, 11 Feb 1999 04:31:54 +0800
To: Tamil-Hinduism@...
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] siddhagalen samuthaaya samanookku. [ சித்தர்களின் சமுதாய சமநோக்கு .# 7]
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 114


சித்தர்களின் சமுதாய சமநோக்கு .#7
<================================>

தமிழ் புலவர்களும், அறிஞர்களும் தம்இலக்கியங்களில் வாய்ப்பு நேரும்
போதெல்லாம் தமிழை போற்றினர்,வளர்த்தனர், மேன்மையுற செய்தனர்.

சித்தர்கள் தாமரை இலை நீராக சமுதாயத்தில் இருந்தாலும், பற்றற்றவர்களாகஇருந்தாலும்
மொழி உணர்வு நீங்காமல் வாழ்ந்தனர்என்பதை அவர் தம் பாடல் வழி, நூல்கள்வாயிலாக அறியமுடிகிறது.
" முத்தி தருபவன் அவனே ; முத்தியாய்விளங்குபவனும் அவனே ;
ஞானம் தருபவன்
அவனே ; ஞானமாய்
விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம்கரந்துள்ளான்"
எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான்" எனக் குறிக்கின்றார்.
எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும்சுரந்துள்ளவன்,
தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும்வைத்துப் போற்றுகின்றார்.

" முத்தியை ஞானத்தை முத்தமிழ ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "-திருமந்திரம்.

வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும்
அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங்கருணையைப் பாடி பரவுகிறார். :
" என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."
இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள்கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்.

" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் " -ஞானவெட்டியான்

"பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "

" சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்
காவியந்தானாயிரத்தில் கல்லா யொரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்
அகஸ்தியர் ஞானம் 100
பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போத ஞாத்தமிழ் வாக்கியம் - ஞானவெட்டியான் 1500

கருத்து விளக்கத்திற்காகப் பயன் படுத்தப்படும் உவமை இலக்கிய சுவைக்கு
மெருகூட்டுவது ஆகும். சித்தர் பாடல்களில் கணக்கற்ற உவமைகள் காணப்படுகின்றன.

விழுமிய கருத்துக்களை கூறுவனவாக இருப்பினும் சித்தர் இலக்கியங்களில்
மற்ற இலக்கியங்களைப் போலவே சொல், பொருள், நயம் மிகுதியாக காணலாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மூன்று சங்கங்கள் இருந்தன , அவை
முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் . இச் சொல்லாட்சி வைத்துப்
பட்டினத்தார் சுவையான பாடல் ஒன்றினைக் காண்போம்.

" முதற்சங்கம் அமுதூட்டும் மொகுழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம்
ஆம்போதது ஊதும் அம்மட்டோ நாம் பூமி வாழ்ந்த நலம்.
மனித வாழ்வில் மூன்று நிலை முக்கியமானது. குழவி பருவம்,வாலிப பருவம், முதுமைப்
பருவம் என்பன. இம் மூன்று பருவங்களும் வாழ்க்யைன் திருப்பு முனைகளாகும்.
குழவி பருவம் வாலிபப் பருவத்திற்கும்,வாலிபப் பருவம் முதுமைப் பருவத்திற்கும்
முதுமைப் பருவம் மரணத்திற்கும் திருப்புமையாகும்.இம்மூன்று நிலைகளிலும்
சங்கம் [சங்கு] பெறுகிறது. குழவி பருவம்சங்கம் - அமுதூட்டும் ; வாலிபப் பருவத்தில்
சங்கம் மணவிழாச் சின்னம் ; முதுமையின்சங்கம் மரணத்திற்கு சின்னம். எனவே
இம்மூச்சங்கமும் முறையே தோற்ற வளர்ச்சி மறைவைக் குறிக்கிறது.

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை, நூல்களை
படைத்துள்ளனர். மொழி நூல், யோகநூல் ;மந்திரம் ; தந்திரம் ; யந்திரம் ; மருத்துவ
நூல் ; புவியியல் நூல் ; தாவரயியல் நூல் ;சோதிட நூல் ; கணித நூல் ; வானநூல்
என தமிழுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

ஆனால் இவைகள் யாவும் இன்னும் 'பாழாய்பழங் கனவாய் ' தான் உள்ளது.

சில அனுவபங்களை படித்தால் புரியும் ,சில கேட்டால் , சில நுகர்ந்தால், சிலவே உணர்ந்தால்
புரியும். அத்தனை விதங்களிலும் , நிறைவாய் , சுகானுபவமாய் நமக்கு சாந்தமும்-இன்பமும் அளிப்பது
இலக்கியம்.

*** " மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதே- தங்க இடம் பாரப்பா...."***

இதுவே சித்தர்களின் கொள்கை. நலம் சிறக்க , நல்லன விளைக.

அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை.






------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com