From jayabarathi Fri Feb 12 06:12:40 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1735 invoked by uid 7770); 12 Feb 1999 11:54:50 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.findmail.com with SMTP; 12 Feb 1999 11:54:50 -0000
Received: from umlugghc ([202.188.69.231]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990212115418.BHBX45@umlugghc>; Fri, 12 Feb 1999 19:54:18 +0800
Message-Id: <3.0.3.32.19990210192000.00822bd0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 10 Feb 1999 19:20:00 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "sankar"
In-Reply-To: <004f01be52fe$856c7140$69af15a5@sanjay01>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Doubt ?
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 123

At 08:59 AM 2/8/99 +0800, you wrote:
>Hello netters,
>VaNakkangkaL.>


அன்பர்களே,

இந்த சிக்கலான விஷயத்துக்குப் ப்குதிபகுதியாக கருத்துச் சொல்வதாக சொன்னபடி, முதற்சிறு துளி:

>நெற்றியில் பொட்டு(திலகம்) இட்டுக்கொள்வது
>வசியப்படுத்துதல் போன்றவற்றை(Hypnotism)
>தவிர்க்கும் என்று பல அறிஞர்கள்சொல்லக்கேட்டிருக்கிறேன்.
>இன்னும் பல ,சில நன்மைகள் கூட இருக்கலாம்.

முதலில் வசியம், hypnotism என்றால் என்ன என்பதைச் சற்று விளக்கி
விடுகிறேன்.
வசியக்கலை என்பது ஒரு பெரிய கலைப்பிரிவைப் பொதுவாகக் குறிப்பிடும் ஒரு சொல். ஹிப்நொட்டிஸம்
என்பது அந்தகலையின் பல பிரிவுகளில்ஒன்று.
வசியக்கலையின் பல பிரிவுகளிலும் உள்ள செயல்பாட்டு முறைகள்
பலவாக வேறு படும். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
மந்திரக்கலையில், "பிரயோகமுறைகள்" என்று சொல்லப்படும் எட்டு
வகைகள் இருக்கின்றன. எட்டு விதமானவிளைவுகள், காரணங்களுக்காக
இவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை"அஷ்டகர்மாக்கள்" என்று கூறுவார்கள்.
இவற்றில் முக்கியமாகக் கருதப்படுபவைஆறு. வஸ்யம், மாரணம், பேதனம், வித்வேஷனம், உச்சாடனம்,
மோஹனம் என்றவை அவை. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டில் ஒன்று வசியம்.
இதில் ஆகம தாந்திரீக முறைகள் உள்ளன.Black Magic எனப்படும்
மாந்திரீக முறைகளும் உள்ளன. Voodoo,மலாய்க்காரர்கள் பயன்படுத்தும்
போமோ வேலைகளெல்லாம் இந்த இரண்டாவதில்தான் அடங்கும். இந்திய
மரபில் Black Magic இன் முக்கிய நூலாக "ஒட்டமரேஸ்வர தந்த்ரம்" என்னும்
நூலே கருதப்படுகிறது. இதைத்தமிழில்"ஒட்டியசாத்திரம்" என்பார்கள்.
கந்தர் ஷஷ்டி கவசத்தில் வருகிறதுஅல்லவா......"ஒட்டியச்செருக்கும் ஒட்டியப்பாவையும், காசும் பணமும்
காவுடன் சோறும்"? இதைச்சேர்ந்தவைதான்.
இவற்றின் மூலம் செய்யப்படும் வசியமுறையில் ஆளை நேரில் பார்க்க
வேண்டியதில்லை; எங்கோ இருந்துகொண்டே செய்துவிடலாம்.
வசியக்கலையில் ராஜவசியம், சர்வஜனவசியம், ஸ்த்ரீபுருஷ வசியம்,
மிருக வசியம், சர்வதேவதாவசியம்என்றெல்லாம் இருக்கின்றன.(Re:குட்டி
சாத்தானைப் பிடிப்பது எப்படி?)
திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்தில் "ஏரொளிச்சக்கரம்" என்னும் பகுதியில் இந்தப்பிரயோக
மந்திரங்கள், முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
சாதாரணமாக நாம் ஹிப்நொட்டிஸம் என்று தற்காலத்தில் அழைப்பது மனோவசியக்கலையின் ஒரு கூறு. இதிலும்
சில முறைகள் உண்டு. மெஸ்மரிஸம்
எனப்படுவதுதான் ஹிப்நொட்டிஸத்துக்கு மூலம்.
ஹிப்நொட்டிஸத்தில் power of suggestion, பார்வையின் தீட்சண்யம்,
ஸ்பரிசம், சில குறிப்பிட்ட ஒலிகள்,பொருள்களின் அசைவுகள் ஆகியவை
பயன்படும்.
இவ்வகையான வசியத்திலிருந்துதான்பாதுகாப்பைப் பொட்டு, விபூதி
ஆகியவை கொடுக்கும் என்று சொல்வார்கள். மாந்திரீக முறையில் செய்யப்
பட்ட வசியத்திற்கு, மந்திர உரு ஏற்றப்பட்ட குங்குமம், விபூதி, தாயத்து என்று
பலவற்றைப் பயன்படுத்துவார்கள்.
வசியத்திலிருந்து உண்மையான, உத்தரவாதமான பாதுகாப்பைக்
கொடுப்பவை மன உறுதியும், ஆழ்ந்ததன்னம்பிக்கையும், பற்றுமிக்க தெய்வநம்பிக்கையும்தான்.
சாதாரணமாக, பொட்டு வைத்தல் வசியத்திலிருந்து பாதுகாப்புக்
கொடுக்கும் என்று நம்புவதே ஒரு plecebo effect ஐத் தோற்றுவித்து, அவ்வகையில் அது வேலை செய்யும்.
அது மனோவியல்ரீதியில் அப்போது செயல்
படுகிறது.

>
>அப்படியிருக்கும் பட்சத்தில் விதவைகள்(கைம்பெண்கள்)
>பொட்டிடுவதை சமூகம் தடுத்தது ஏன்?

ஏன் தடுத்தது, எப்போது தடுத்தது என்பதுசரியாகத் தெரியவில்லை.
கணவனை இழந்த பெண்களும், கணவனை விட்டுப்பிரிந்த பெண்களும்
(அறுத்துக் கட்டுதல்)மறுமணம் செய்து கொள்வதை இந்து சமயத்தில் உள்ள
பல சமூகங்கள் அனுமதித்திருக்கின்றன.அவர்கள் பொட்டு வைத்துக்
கொள்ளத்தான் செய்திருக்கிறார்கள்.
அதே சமயம் சதி எனப்படும் உடன் கட்டையேறும் வழக்கமும்
சிலாகித்துக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கணவனை இழந்தவர்கள் உடன்கட்டை ஏறுவது கட்டாயமாக்கப்படவில்லை.
அடிக்கடி போர்கள்
நடந்து வந்தமையால், ஆண்களில் பெரும்எண்ணிக்கையினர் போருக்குப்
போகவேண்டியிருந்ததாலும்,கொல்லப்பட்டுக்கொண்டேயிருந்ததாலும், விதவைகள்தாம் சமுதாயத்தைக் கட்டி காத்து
வந்திருக்கிறார்கள்.
இருப்பினும் ஏன் அவர்களுடைய நிலைதாழ்த்தப்பட்டது?
இதில் பிராமண சமூகம், விதவைகளைவாழவும் விடாமல் சாகவும்
விடாமல் மிகக் கொடுமையான அவல நிலைக்கு ஆளாக்கியிருந்தது.


>மற்றவரை விட விதவையாய் வாழ விரும்பும்
>பெண்ணிர்கல்லவோ பொட்டின் நன்மை அதிகம் தேவை.
>
>கணவனோடு வந்த தாலியை இழப்பதில்இருக்கும்
>நியாயம் பூவிலோ போட்டிலோ இல்லையே?
>திருமணத்திற்கு முன்னும் தானே பொட்டும்பூவும் வைத்திருந்தாள்?


நீங்கள் சொல்வது உண்மை. திருமணம் ஆகாத பெண்களும் பொட்டு
வைத்துக்கொள்வார்கள். திருமணம் ஆன பிறகு, அத்துடன் நெற்றியின் நடு வகுட்டில் ஒரு குங்குமப்போட்டு
வைத்துக்கொள்வார்கள்.
பெண்களின் நெற்றியின் இந்தப்பகுதி"சீமந்தம்" எனப்படும். இது
மஹாலட்சுமியின் எட்டு இருப்பிடங்களிலொன்றாகக் கருதப்படுவது.
திருமணம் ஆனபிறகு இந்த இடத்தில் குங்குமம் வைத்துக்கொள்வது சுமங்கலித் தன்மைக்கு அடையாளமாகவும்
லட்சுமிகரமாகவும் கருதப்பட்டது. இவ்வாறு வைக்கப்படும் குங்குமம் "சீமந்த சிந்தூரம்" எனப்பட்டது.
வைதவ்யத்தின் அடையாளமாக சீமந்தசிந்தூரத்தை நீக்குவது தாலியைநீக்குவதற்குச்சமமாகக்கொள்ளலாம்.
வைதவ்யத்தைத் துறவறத்திற்கு சமமாகக்கருதியிருக்கிறார்கள்.
ஒருவேளை இப்படியும் இருக்கலாம்:
கறுப்புப்பொட்டு -கன்னித்தன்மை
குங்குமப்பொட்டு- சுமங்கலித்தன்மை
பொட்டின்மை- வைதவ்யம் என்னும் துறவறத்தன்மை

எது எப்படியிருப்பினும் அவர்களுக்கு தாழ்வான நிலையைக்கொடுத்தது ஒரு சமூகவிரோதச்செயல் என்றுதான்
சொல்லவேண்டும்.

>
>நான் அறிந்தவரை கைமைக்கோலமே கூடமனிதன்
>மெள்ள மெள்ள ஏற்படுத்தியது தான்போலிருக்கிறது.

அப்படித்தான் வந்திருக்கிறது.

>(பரிணாமம் காரணமாய்)
>சுமார் எப்போது ஏற்பட்டிருக்கலாம்?

ஆரம்பத்தில் ஒரு மனுநீதி இருந்துள்ளது .இது 24000 சுலோகங்களைக் கொண்டிருந்தது. இதன்
அடிப்படையில்தான் வாழவேண்டும் என்றநியதி இருந்தது. இதைப்பின்பற்றித்தான் சிபிச்சக்கரவர்த்தி,
புறாவுக்கு அடைக்கலம் கொடுத்ததால் தன்னுடைய சதையை அறுத்தது; மனுநீதிச்சோழன் தன்னுடைய மகனின்மீது
பசுமாட்டிற்காக தேரை ஏற்றியது எல்லாம். அனைத்து உயிர்களுக்குமே சமநீதியைவலியுறுத்திய நூல் இந்த
ஆரம்ப நூல். இந்த மனுநீதி நூலைத்தான்கம்பராமாயணத்தில் வாலி குறிப்பிடுகிறான்........

"அரக்கர் ஓர் அழிவு செய்து, கழிவரேல்,அதற்கு வேறோர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனுநெறி கூறிற்று உண்டோ?"

பிறகு நாரதீய மனுநீதி என்று ஒன்றுஏற்பட்டது. அதன்பிறகுதான் நாம் இப்போது பார்க்கும் மனுநீதி நூல்
ஏற்பட்டது. இதன் நீளமும் குறைவு. இதில்தான்
தீண்டாமை போன்றவை வலியுறுத்தப்படுகின்றன. இது ஏற்படுத்தப்பட்ட
பின்னர்தான் விதவைகளின் நிலையும்தாழ்த்தப்பட்டிருக்கவேண்டும்.

>
>விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை.

இருக்கிறது. ஆனால் இப்போது நினைவுக்கு வரவில்லை.

>இது எதைக்குறிக்கிறது?
>
>என் கேள்விகளுக்கு இணையத்தின் பெரியவர்கள்
>பதிலளிப்பார்கள். காத்திருப்போம்.
>
பெண்களின் ஆரம்பகாலநிலையைப்பற்றி அடுத்தமுறை சிறிது எழுதுகிறேன்.விதவைகளின் அவலநிலையைப்
பற்றியும் சில கருத்துக்கள்
இருக்கின்றன.

அன்புடன்

ஜெயபாரதி

>
>Regards to all,
>Jayanthi.

====================================================
>
>
>
>
>------------------------------------------------------------------------
>Tired of waiting for your stock quotes and charts to load?
>StockMaster is super-fast for quotes, charts, news, and portfolios.
>Markets don't wait, why should you? http://www.stockmaster.com/?aவ்
>
>eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
>Free Web-based e-mail groups by eGroups.com
>
>
>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com