From Sun Feb 14 14:38:37 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
Precedence: list
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-Mailing-List: agathiyar@egroups.com
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11621 invoked by uid 7770); 14 Feb 1999 22:22:29 -0000
Received: from dfw-ix12.ix.netcom.com (206.214.98.12) by vault.findmail.com with SMTP; 14 Feb 1999 22:22:29 -0000
Received: (from smap@localhost) by dfw-ix12.ix.netcom.com (8.8.4/8.8.4) id QAA20140; Sun, 14 Feb 1999 16:22:17 -0600 (CST)
Received: from sji-ca1-247.ix.netcom.com(209.109.232.247) by dfw-ix12.ix.netcom.com via smap (V1.3) id rma020061; Sun Feb 14 16:21:47 1999
Message-ID: <006201be5868$34015c20$f7e86dd1@...>
From: "Mani M. Manivannan"
To:
Cc: "jayabarathi"
Date: Sun, 14 Feb 1999 14:20:16 -0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Doubt ?
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 133

>>விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை.
>
> இருக்கிறது. ஆனால் இப்போது நினைவுக்கு வரவில்லை.

கழகத் தமிழ் அகராதியில் 'மனையிலி' என்ற சொல் காணப்படுகிறது.
அது உவிடோவர் (Widower) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள்
என்று வழங்கப்படுகிறது. இந்த சொல்லைப் பற்றியா குறிப்பிட
வந்தீர்கள்?

அதே போல், உவிடோ என்ற ஆங்கிலச் சொல்லும் சம்ஸ்கிருத
விதவா (vidhavA) என்ற சொல்லின் தொடர்புள்ளதென
மிரியம் உவெப்ஸ்டர் அகராதி குறிப்பிடுகிறது. சம்ஸ்கிருதத்தில்
உவிடோவர் (Widower) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள்
என்ன?

விஸ்வ ஹிந்து பரிஷத் மீண்டும் 'சத்தி' யைக் கொண்டு வர முயற்சிப்பதாக
கீழ்க்காணும் செய்தி கூறுகிறது.

http://www.deccanherald.com/deccanherald/feb09/sati.htm

தீக்குளிப்பு, வடக்கிருத்தல், உண்ணாநோன்பு, கொடுந்தவம், போன்ற
உடலை வாட்டும் பழக்கங்கள் பண்டைக்காலத்திலிருந்தே தமிழ் நாட்டிலும்,
பாரத நாட்டிலும் நிலவி வந்திருக்கின்றன. சத்தி நேரடியாக இருந்ததா
என்று தெரியவில்லை. ஆனால், "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது
இல்லை" என்று கண்ணகியிடம் கூறிய கோப்பெருந்தேவி, செங்கோல்
வளைந்ததும் தன் உயிரை விட்ட பாண்டியனுடனேயே மடிந்ததாகச்
சிலப்பதிகாரம் கூறுகிறது. கைம்பெண்ணின் வாழ்க்கையை
மிகத் துன்பமுள்ள வாழ்க்கையாக நிலைப்படுத்தியது தமிழர் நம்பிக்கைகள்
என்று பேராசிரியர் ஹார்ட் கருதுகிறார். பெண்களிடம் உள்ள
'சக்தி' யை அடக்க ஓர் ஆண் துணை இல்லாவிடில் அந்தச் சக்தி
ஊரையே அழித்து விடும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் பண்டைக்
காலத்தில் நிலவி வந்ததாகக் கூறுகிறார். தந்தையும், தமையர்களும்,
கணவனும் கட்டுப் படுத்தி வரும் இந்த சக்தி, கணவனை இழந்த
கைம்பெண்ணிடம் அடக்க முடியாமல் போய்விடும் என்ற நம்பிக்கை
இருந்ததாகக் கருதுகிறார். ஆனால், தந்தையையும், தமையர்களையும்
போர்க்களத்தில் இழந்த மங்கை கைம்பெண்கோலம் கொள்வதில்லை
என்பதால், இந்தக் கொள்கையை உறுதியாக ஏற்கமுடியவில்லை.

இருப்பினும், பேரா. ஹார்ட் குறிப்பிடுவதென்னவென்றால், தென்னாட்டுப்
பிராம்மணர்களிடையே நிலவி வந்த கைம்பெண் நோன்புகள் (மொட்டைத்தலை,
எள்ளரிசி, வெண்ணிற ஆடை, அணிகலன் இன்மை, போன்றவை),
தமிழர்களிடமிருந்து பிராம்மணர்கள் ஏற்றன என்பதே. இந்த வழக்கங்கள்
வடநாட்டுப் பிராம்மணர்களிடம் இல்லை என்கிறார். இது உண்மையா?

கைம்பெண் நோன்புக்குறிகள் துறவிகளின் தன்மையைக் குறிப்பதாக
நான் கருதுகிறேன். சமண, பௌத்த சமயங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம்
செலுத்திய நாட்களில், கைம்பெண்கள் துறவுக்கோலம் பூண்டிருக்கலாம்.
அந்தக்காலத்தில் இத்தன்மையை பிராம்மணர்களும் ஏற்றிருக்கலாம்.
பின்பு, தமிழர்கள் சைவர்களாய், வைணவர்களாய் மதம் மாறிய பின்பு
இந்தத் துறவுக்கோலம் தமிழர்களிடையே மறைந்திருக்கலாம். ஆனால்,
வடநாட்டிலிருந்து புதிதாக வந்து கொண்டிருந்த பிராம்மணர்களிடையே
இந்தக் கோலம் மறையாமல் இருந்திருக்கலாம். ஜெயபாரதி அவர்கள்தான்
இவை எந்த அளவுக்குப் பொருந்தும்/பொருந்தாது என்று சொல்லமுடியும்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com