From jayabarathi Tue Feb 16 03:50:09 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 10591 invoked by uid 7770); 16 Feb 1999 11:50:00 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.findmail.com with SMTP; 16 Feb 1999 11:50:00 -0000
Received: from umlugghc ([202.188.69.215]) by cgi2.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990216114946.BPZP10734@umlugghc>; Tue, 16 Feb 1999 19:49:46 +0800
Message-Id: <3.0.3.32.19990216195935.00898c30@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 16 Feb 1999 19:59:35 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "K. Jeya" , "Mani M. Manivannan"
In-Reply-To: <3.0.16.19990215223319.fb47b506@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Doubt ?
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 137

At 10:31 PM 2/15/99 -0500, you wrote:
>>விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை
>தபுதாரன் என்று ஞாபகம்.
>அன்புடன்,
>ஜெயா.
>At 02:20 PM 2/14/99 -0800, Mani M. Manivannan wrote:
>>>>விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை.
>>>
>>> இருக்கிறது. ஆனால் இப்போது நினைவுக்கு வரவில்லை.
>>
>>கழகத் தமிழ் அகராதியில் 'மனையிலி' என்ற சொல் காணப்படுகிறது.
>>அது உவிடோவர் (Widower) என்ற ஆங்கிலச்சொல்லுக்குப் பொருள்
>>என்று வழங்கப்படுகிறது. இந்த சொல்லைப் பற்றியா குறிப்பிட
>----நறுக்-----
>

"தபுதாரன்" என்ற சொல்லும் பழைய வழக்கில் இருந்தது.
"மனையிலி" என்பது பழைய வழக்கில்இருந்ததாகத் தெரியவில்லை.
Acronym என்ற சொல்லுக்கு "முதலெழுத்துச் சுருக்கம்" என்ற சொல்
பிற்காலத்தில் அகராதி வழக்குக்காகஏற்படுத்தப்பட்டதுபோல்
ஏற்பட்டதாகத்தோன்றுகிறது. "மனையிலி" என்பது நேரடியான
பொருளைத் தரக்கூடிய நல்ல தமிழ்ச்சொல்லாக இருக்கிறது.
நான் குறிப்பிடும் சொல், ஒரு குறிப்பிட்ட மரபு சம்பந்தமான தொடர்புள்ள
ஒரு சொல்.
பதவியில் அமர்ந்திருக்கும் மன்னர்கள்,மனையிலிகளாக இருக்கக்
கூடாது. பட்டத்தரசியாக யாராவதுஇருந்தாகவேண்டும். ஆகவே
பட்டமகிஷி இறந்தவுடனேயே அடுத்த தாரம் அந்தப்பட்டத்திற்கு வந்து
விடுவார். இது மலேசியாவில் உள்ளசுல்த்தானியர்களிடம் இன்றும்
காணப்படுகிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவின்
ஜோகூர் மாநிலத்தின் முன்னைய சுல்த்தானின் பட்டத்தரசி ஒரு விபத்தில்
இறந்தவுடன் அடுத்த மனைவி அந்த இடத்திற்கு வந்தார்.
யாகங்களும் மனைவியிழந்தவர்களால்நடத்தப்படக்கூடாது
என்ற ஆகம வைதிக விதி இருக்கிறது.
இந்த இடத்தில் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் அது எந்த சொல்?
ஹ்ம்ம்ம்ம்........??????
ம்ஹூம்...நினைவுக்கு வரவில்லை.

அன்புடன்

ஜெயபாரதி

===================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com