From Tue Feb 16 13:29:36 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 19840 invoked by uid 7770); 16 Feb 1999 21:28:18 -0000
Received: from pop02.globecomm.net (206.253.129.186) by vault.findmail.com with SMTP; 16 Feb 1999 21:28:18 -0000
Received: from illusion (socksgwb.chips.ibm.com [192.91.197.35]) by pop02.globecomm.net (8.9.0/8.8.0) with SMTP id QAA16042 for ; Tue, 16 Feb 1999 16:29:06 -0500 (EST)
Sender: anbu@...
Message-ID: <36C9E2E2.2203579@...>
Date: Tue, 16 Feb 1999 16:28:03 -0500
From: "Anbumani. S"
Organization: ***
X-Mailer: Mozilla 3.04Gold (X11; I; Linux 2.0.30 i586)
MIME-Version: 1.0
To: Agathiyar
Subject: [agathiyar] Making of bronze idols ??
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 139

அகத்தியர்களுக்கு,

http://www.tamilnation.org -ல் திரு. நடேசன் சத்யேந்திரா அவர்கள் தமிழர்களின்
கலை பற்றிப் பல பக்கங்கள் இட்டு வைத்துள்ளார்.

அதில் சோழர் கால பஞ்சலோக சிலைகள் பற்றி டாக்டர் ஜெ.பி.-யும் எழுதியுள்ளார்.
சுருக்கமாக சொன்னால் - சோழர் காலத்தில் பஞ்சலோக சிலைகளை மெழுகும், குங்கிலியமும்
எண்ணையில் கலந்து முதலில் உருவத்தை செய்வார்களாம். பின்னர் எறும்புப் புற்றின் மண்ணை
எடுத்து இம்மெழுகு உருவத்தின் மேல் பூசுவார்களாம். இப்பூச்சு எவ்வளவு கனம் தேவையோ
அந்த அளவு வந்தபிறகு, எருமுட்டையில் (வெறட்டி) சுடுவாரகளாம். இதில் மெழுகு உருவம்
உருக, மண்பூச்சில் அவ்வுருவம் தங்கிவிடும் - அச்சுக்கள் போல. இவ்வச்சுக்களில் உருகிய
பஞ்சலோகத்தை ஊற்றி எடுத்தால், வருவதே நாம் இன்று பார்க்கும் பஞ்சலோகச் சிலைகள்.
(பிள்ளையார் சதுர்த்தியின் போது மண்பிள்ளையார் செய்வார்களே ? அது மாதிரி)
இச்சிலைகளை வார்த்தபின் அம்மண் அச்சுக்களை உடைத்துவிடுவார்களாம் - ஏனெனில்
அம்மாதிரி ஒரே ஒரு சிலை மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்காக.
(காண்க: http://www.tamilnation.org/civilisation/cholabronze.htm)

இப்போது என் கேள்வி - இப்படியாயின், பிரதிபிம்பச் சிலைகளை எவ்வாறு ஒரே மாதிரி
உருவாக்கினார்கள் ? அதாவது, (கோயில்களில்) வலது இடது பக்கங்களில் சிலைகள்
இருந்தால் அவைகளை ஒரே மாதிரி இருக்குமாறு உருவாக்குவது எங்ஙனம் சாத்தியம் ?


அன்பு(டன்).

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com