From Palaniappan A Wed Feb 17 02:51:43 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20723 invoked by uid 7770); 17 Feb 1999 10:51:32 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 17 Feb 1999 10:51:32 -0000
Received: from pop3.pacific.net.sg (pop3.pacific.net.sg [203.120.90.45]) by sunny.pacific.net.sg with ESMTP id SAA14316 for ; Wed, 17 Feb 1999 18:51:19 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (dyn74ppp210.pacific.net.sg [210.24.74.210]) by pop3.pacific.net.sg with SMTP id SAA01131 for ; Wed, 17 Feb 1999 18:51:17 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990217184521.007f5770@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Wed, 17 Feb 1999 18:45:21 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <36C9E2E2.2203579@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Making of bronze idols ??
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 140

அன்பு(மணி),
வணக்கம்.
உங்கள் கேள்விக்குப் பதிலாக இது அமையுமோ என்னவோ தெரியாது. ஆனால் நான்அனுபவத்தில் கண்டவற்றை
உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
நாட்டின் வளப்பத்தால் இங்கு சிங்கப்பூரில் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன,சில கோயில்கள் புதிதாகக்
கட்டப்பட்டன. அவற்றில் சிலவற்றின் கோயில் வரலாறுகளை எழுதும் பாக்கியம்எனக்குக் கிடைத்ததுண்டு.
கோயிலின் திருப்பணி நடக்கும்போதுஸ்தபதியார்கள் சிலைகளை உருவாக்குவதையும் கண்டிருக்கிறேன். அவர்கள்
செய்ததைப் பார்த்துப்பார்த்துத்தான் மற்றதைச் செய்தின்றனர். ஆனால் பஞ்சலோகத்தில் ஒரே உருவத்தை எப்படிச்
செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சன்னிதானத்தில் துபார பாலகர்களைஅவர்கள் எவ்வித வார்ப்பும்
-அச்சும் -இல்லாமல் தனித்தனியாக ஒரேமாதிரியாகச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
இப்போது வரும் இளைய ஸ்தபதியார்கள்பென்சிலால் sketch செய்து கொண்டு சுதைவேலையில்
ஈடுபடுகின்றனர்.
நட்புடன்
பழனி


At 04:28 PM 2/16/99 -0500, you wrote:
>அகத்தியர்களுக்கு,
>
>http://www.tamilnation.org -ல் திரு. நடேசன் சத்யேந்திரா அவர்கள் தமிழர்களின்
>கலை பற்றிப் பல பக்கங்கள் இட்டு வைத்துள்ளார்.
>
>அதில் சோழர் கால பஞ்சலோக சிலைகள் பற்றி டாக்டர் ஜெ.பி.-யும் எழுதியுள்ளார்.
>சுருக்கமாக சொன்னால் - சோழர் காலத்தில் பஞ்சலோக சிலைகளை மெழுகும்,குங்கிலியமும்
>எண்ணையில் கலந்து முதலில் உருவத்தைசெய்வார்களாம். பின்னர் எறும்புப் புற்றின் மண்ணை
>எடுத்து இம்மெழுகு உருவத்தின் மேல் பூசுவார்களாம். இப்பூச்சு எவ்வளவு கனம் தேவையோ
>அந்த அளவு வந்தபிறகு, எருமுட்டையில்(வெறட்டி) சுடுவாரகளாம். இதில் மெழுகுஉருவம்
>உருக, மண்பூச்சில் அவ்வுருவம் தங்கிவிடும் - அச்சுக்கள் போல. இவ்வச்சுக்களில் உருகிய
>பஞ்சலோகத்தை ஊற்றி எடுத்தால், வருவதே நாம் இன்று பார்க்கும் பஞ்சலோகச்சிலைகள்.
>(பிள்ளையார் சதுர்த்தியின் போது மண்பிள்ளையார் செய்வார்களே ? அது மாதிரி)
>இச்சிலைகளை வார்த்தபின் அம்மண் அச்சுக்களை உடைத்துவிடுவார்களாம் - ஏனெனில்
>அம்மாதிரி ஒரே ஒரு சிலை மட்டுமேஇருக்கவேண்டும் என்பதற்காக.
>(காண்க: http://www.tamilnation.org/civilisation/cholabronze.htm)
>
>இப்போது என் கேள்வி - இப்படியாயின்,பிரதிபிம்பச் சிலைகளை எவ்வாறு ஒரே மாதிரி
>உருவாக்கினார்கள் ? அதாவது, (கோயில்களில்) வலது இடது பக்கங்களில் சிலைகள்
>இருந்தால் அவைகளை ஒரே மாதிரி இருக்குமாறு உருவாக்குவது எங்ஙனம் சாத்தியம் ?
>
>
>அன்பு(டன்).
>
>------------------------------------------------------------------------
>Why are most stock sites so slow and annoying to use? StockMaster.com
>is fast, easy, powerful, and free! Use company names, not ticker
>symbols. Track your portfolio. Visit: http://stockmaster.com/?aய்
>
>eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
>Free Web-based e-mail groups by eGroups.com
>
>
>


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com