From jayabarathi Wed Feb 17 05:34:57 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14143 invoked by uid 7770); 17 Feb 1999 13:34:21 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.findmail.com with SMTP; 17 Feb 1999 13:34:21 -0000
Received: from umlugghc ([202.188.69.212]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990217133404.BSZP3828@umlugghc>; Wed, 17 Feb 1999 21:34:04 +0800
Message-Id: <3.0.3.32.19990217040820.00882340@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 17 Feb 1999 04:08:20 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Anbumani. S"
In-Reply-To: <36C9E2E2.2203579@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Making of bronze idols ??
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 141

At 04:28 PM 2/16/99 -0500, you wrote:
>அகத்தியர்களுக்கு,
>
>http://www.tamilnation.org -ல் திரு. நடேசன் சத்யேந்திரா அவர்கள் தமிழர்களின்
>கலை பற்றிப் பல பக்கங்கள் இட்டு வைத்துள்ளார்.
-------------cut

- ஏனெனில்
>அம்மாதிரி ஒரே ஒரு சிலை மட்டுமேஇருக்கவேண்டும் என்பதற்காக.
>(காண்க: http://www.tamilnation.org/civilisation/cholabronze.htm)
>
>இப்போது என் கேள்வி - இப்படியாயின்,பிரதிபிம்பச் சிலைகளை எவ்வாறு ஒரே மாதிரி
>உருவாக்கினார்கள் ? அதாவது, (கோயில்களில்) வலது இடது பக்கங்களில் சிலைகள்
>இருந்தால் அவைகளை ஒரே மாதிரி இருக்குமாறு உருவாக்குவது எங்ஙனம் சாத்தியம் ?
>
>
>அன்பு(டன்).

நீங்கள் குறிப்பிட்டுள்ளவை, இரண்டு தேவியர் புடைசூழ விளங்கும்
தெய்வச்சிலைகளாக இரூக்கும் என்று ஊகிக்கிறேன். அப்படித்தானே?
இஸ்ரீதேவி-பூதேவி சமேத விஷ்ணு, வள்ளி-தேவசேனா சமேத முருகன்,
பூரணை-புஷ்கலை சமேத ஐயனார் போன்றசிலா உருவங்கள் அவை.
வள்ளி-தேவசேனா சிலைகளைப்பார்க்கும்போது உயரம் முதலிய
பரிமாணங்களில் ஒரே மாதிரியாகத்தோன்றக்கூடும். ஆனால் அவை
mirror image ஆக அமைந்திருக்கும். வள்ளி இடக்கையைத் உயர்த்தி, வலக்கையைத்
தொங்கவிட்டிருப்பாள்(குஞ்சித ஹஸ்தம்).தேவசேனா வலக்கையை உயர்த்தி இடக்கையைத் தொங்கவிட்டிருப்பாள்.
ஒன்று inverse என்றால், மற்றொன்று
obverse. மேலும் கிரீடம், கரத்தில் வைத்திருக்கும் மலர், ஆபரணங்கள்
ஆகியவற்றிலும் வேறுபாடுகள் விளங்கும்.
இவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகஇருந்தாலும்கூட,
lost-wax process என்னும் முறையில் செய்யப்படும்போது தனிதனியாகத்தான்
செய்யப்படும்.
ஒன்றைப்போல இன்னொன்றை அதே மாதிரியான ஒத்த
அமைப்பு, எழில், ஒயில், அளவை ஆகியவற்றை உடைய சிலைகளாகத்
தனிதனியாகச் செய்யமுடியும். அளவு, அமைப்பு முதலியவற்றை அப்படியே
copy செய்து இன்னொன்றை செய்துவிடுவார்கள். ஓர் ஓவியத்தைப்
போன்றே இன்னொன்றை பார்த்து வரைந்தே தயாரிக்கிறோமல்லவா?
அதுபோலத்தான். ஆனால், செய்யப்படும் copyபிரதிமை , lost-wax
process மூலம் செய்யப்படும்போது, புதிதாகமெழுகு proto-type,
களிமண் mould, உருக்கிய உலோக வார்ப்புஎன்று தனிப்படத்தான்
செய்யப்படும். Though it resembles the original in all aspects,the
copy itself, in actuality, would be an original in its own merits .
Facsimile என்பது வேறு. இந்த முறையில், ஒரிஜினல் சிலையின்மீது
மெழுகைப் பூசி, இறுகவிடுவார்கள். இவ்வாறு மெழுகிலேயே அச்சு mould
ஒன்றைத் தயாரிப்பார்கள். மெழுகு இறுகியதும் இதனைப் பகுதி பகுதியாக வெட்டிஎடுப்பார்கள். இவ்வாறு
வெட்டி எடுக்கப்பட்ட ஒவ்வொரு அச்சுப்பகுதிக்கும்
களிமண் அல்லது plaster பிரதி செய்வார்கள். பின்னர் இந்தப் பகுதிகளை
ஒன்றாகச் சேர்த்து முழு அச்சு ஒன்றைச்செய்து கொள்வார்கள். இதற்குள்
உலோகத்தை உருக்கி ஊற்றி வார்த்தெடுப்பார்கள். பின்னர் அந்த plaster
அல்லது களிமண் அச்சை உடைத்துவிட்டால்பிரதிமை உருவாகியிருக்கும்.
இதன்மூலம் ஒரு duplicate அல்லது போலி கிடைத்துவிடும். இது original
அளவுக்கு இராது. இதனை அராவி, செதுக்கி, தேய்த்து சுத்தப்படுத்த
வேண்டியிருக்கும். அப்போதும்கூட, நுணுகிப்பார்த்தால், அது ஒரு facsimile
model என்பது நன்கு தெரிந்துவிடும்.
Mould and dice செய்து, அதற்குள் metal-sheetஐ அழுத்திஎடுத்து,
mass-production செய்யும் முறையும் இப்போது இருக்கிறது. ஆனால் இதெல்லாம்
சொல்லப்போனால், சுஜாதா பாஷையில்"சப்கா ஊஊஷ்" வேலைதான்.
இந்த சிலைகளைத்தான் நாம் கலைப்பொருள் விற்பனைமையங்களில்
பார்க்கிறோம்.

அன்புடன்

ஜெயபாரதி

====================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com