From jayabarathi Wed Feb 17 21:13:57 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 5935 invoked by uid 7770); 18 Feb 1999 05:13:39 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by vault.findmail.com with SMTP; 18 Feb 1999 05:13:39 -0000
Received: from umlugghc ([202.188.69.209]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990218051322.HLFB26758@umlugghc>; Thu, 18 Feb 1999 13:13:22 +0800
Message-Id: <3.0.3.32.19990217065821.0087dd30@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 17 Feb 1999 06:58:21 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Anbumani. S" ,Palaniappan A
In-Reply-To: <36CB40A9.5A61867F@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Making of bronze idols ??
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 143

At 05:20 PM 2/17/99 -0500, you wrote:
>அகத்தியர்களுக்கு வணக்கம்,
>
>திரு. பழனியப்பன் அவர்கள் எழுதினார்:
>
>> உங்கள் கேள்விக்குப் பதிலாக இது அமையுமோ என்னவோ தெரியாது. ஆனால் நான் அனுபவத்தில் கண்டவற்றை
>> உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
>> நாட்டின் வளப்பத்தால் இங்கு சிங்கப்பூரில் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன,சில கோயில்கள்
புதிதாகக்>> கட்டப்பட்டன.

நாட்டின் வளப்பத்தால் சிங்கையில்பலகோயில்கள் திருப்பணி கண்டன;
அதிசயமில்லை; அற்புதமொன்றுமில்லை.
ஆனால் பொருளாதார வீழ்ச்சியில்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்த
வேலையிலும், அசராமல் பெரும் பெரும்திருப்பணிகளைச் சளைக்காமல்
மலேசியாவில் செய்துகொண்டிருக்கிறோமே! அதுதானய்யா பேரற்புதம்!
மலேசியத் தமிழனின் தனிப்பெரும் சாதனை! சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில்
மட்டுமே, 1998 பிற்பகுதியில் ஒரு பெரியதிருப்பணி கும்பாஷிஷேகம் நடைபெற்றது.
அடுத்து 1999 ஜனவரியில் இன்னொரு பெரிய திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகம்
நடந்து மண்டலாபிஷேகம் நடந்துவருகிறது. தற்சமயம் இரண்டாண்டுகளாக இன்னொரு
பெரிய கோயிலில் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் கும்பாபிஷேகம்
இருக்கும் என்று சூளுரைத்திருக்கிறார்கள்.திருப்பணி நடந்து கொண்டிருக்கும் அக்கோயிலில், திருவிழா
இல்லாத நிலையிலும், தைப்பூச வருமானம்ஒரு லட்ச ரீங்கிட்டை(மலேசிய டாலர்) எட்டிவிட்டதாக
அக்கோயிலின் நிர்வாகத்தினர் ஒருவர் சொல்லிவிட்டுப் போனார்.
இது போல நாடெங்கெனும் நடந்து வருகின்றன. நடந்தும் வரும்.


>அவற்றில் சிலவற்றின் கோயில் வரலாறுகளை எழுதும் பாக்கியம் எனக்குக் >கிடைத்ததுண்டு.


அந்த மாதிரி "பாக்கியம்" எனக்கும் நேர்வது உண்டு.
ஹூம்... ஆலயங்கள் சமுதாய மையங்களாகமாறுவதுதான் எப்போது?!
அதற்காகத்தானே ஆலயங்கள்? வெறும் சாமி மட்டுமே கும்பிடுவதற்கு ஏன்
அத்தனை பெரிய establishment and infrastructure? (சார், சார், மன்னிச்சுக்குங்குங்க.
இதை நீங்களே சற்று சிரமம் பாராமல்தமிழ்ப்படுத்திக்கொள்ளுங்களேன்.)


>> கோயிலின் திருப்பணி நடக்கும்போது ஸ்தபதியார்கள் சிலைகளை உருவாக்குவதையும் கண்டிருக்கிறேன்.
>
>தங்கள் விளக்கத்துக்கு நன்றி. ஆலய திருப்பணி எவ்வாறு நடந்தது என்பதைப்
>பற்றிமேலும் விவரங்கள் எழுதினால் அனைவரும் பயன்பெறுவரே.
>
>டாக்டர். ஜெ.பி எழுதினார்:
>
>> நீங்கள் குறிப்பிட்டுள்ளவை, இரண்டு தேவியர் புடைசூழ விளங்கும்
>> தெய்வச்சிலைகளாக இரூக்கும் என்றுஊகிக்கிறேன். அப்படித்தானே?
>
>ஆம். இதைத்தான் குறிப்பிட்டேன்.
>
>> இஸ்ரீதேவி-பூதேவி சமேத விஷ்ணு,வள்ளி-தேவசேனா சமேத முருகன்,
>> பூரணை-புஷ்கலை சமேத ஐயனார் போன்றசிலா உருவங்கள் அவை.
>> வள்ளி-தேவசேனா சிலைகளைப்பார்க்கும்போது உயரம் முதலிய
>> பரிமாணங்களில் ஒரே மாதிரியாகத் தோன்றக்கூடும். ஆனால் அவை
>> mirror image ஆக அமைந்திருக்கும்.
>.....
>
>மேலும் விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
>
>சரி, வெண்கலச் சிலை இம்மாதிரி செய்வர் என்றாயிற்று.
>
>கல்லில் வடிக்கும் போது . . . ?


Copying artist என்று இருக்கிறார்கள். இவர்கள்மேற்கத்திய நாடுகளில்
எப்போதுமே இருப்பார்கள். நல்ல திறமைமிக்கவர்கள். இவர்களை வைத்து புகழ்
பெற்ற, அரிதான, பெருமதிப்புள்ளஓவியங்கள்/சிலைகள்/கையெழுத்துப்பிரதிகள்
போன்றவற்றைப் பிரதி செய்யச் சொல்லும் வழக்கம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.
இந்தத் திறமையுடைய சிற்பிகள், ஓர் அசல் சிலையைப்போலவே இன்னொரு
சிலையைச் செதுக்கிவிடுவார்கள். நான்ஏற்கனவே கூறிய facsimile செய்முறையில்
கற்சிலைக்கும் mould அச்சு தயாரிக்கலாம்.ஆனால் அதைவைத்து மெழுகு, சிமெண்ட்,
பாப்பியே மாஷ்(papier mache) போன்றவற்றால்பிரதிகள் செய்யலாம். கல்லைபோலவே
தோற்றமளிக்கவும் செய்யலாம். பூச்சு, lightand shade போன்றவற்றால் இதைச்
சாதிக்கமுடியும். ஆனால் கல்லை அதில் பிரதி செய்யமுடியாது. கல் பிரதியைத்தனியாகத்தான் செய்யவேண்டும்.
இந்தியர்களில் copying artists இருக்கின்றனர்.
பல கோயில்களில் உள்ள பழமைமிக்கசிலைகளை, copying artistகளைக்
கொண்டு பிரதிகள் செய்வித்து, அவற்றைகோயில்களில் வைத்துவிட்டு, அசலைக்
கடத்திச்சென்று விற்றுவிடுகின்றனர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திரசோழரின் சிலை ஒன்று புகைப்
படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தை இன்றும் பல புத்தகங்களில் காணலாம். இப்போது அந்தக்
காட்சியகத்தில் இருக்கும் ராஜேந்திரசோழரின் சிலை வேறொன்று. அசல் என்ன ஆயிற்று என்பது
தெரியவில்லை.
நான் மிகவும் மதிப்புவைத்திருக்கும்Copying artist ஒருவரைப் பற்றி இன்னும்
சற்று நேரத்தில் சொல்கிறேன்.
அதற்கப்புறம் கல்லினுள் தேரைக்குப் போவோம்.
ஒரு நீளமான கதைக்கு வித்தூன்றியிருக்கிறார், அன்புமணி.

அன்புடன்

ஜெயபாரதி


>கல்லுக்குள் தேரை இருப்பதை எவ்வாறு கண்டறிவர் ?
>இதற்கு முன், பாறை/கருங்கல்லில் எவ்வாறுதேரை செல்கிறது ?
>["கல்லுக்குள் தேரைக்கும், கருப்பைக்குள்முட்டைக்கும் விருப்பொடு உணவளிக்கும்ஈசன்",
>எனும் ஒளவை வாக்கு எங்கோ படித்த நினைவு.]
>
>கல்லில் செதுக்கும்போது சிலையில் சிதிலம் ஏற்பட்டால் . . . ?
>
>
>அன்பு(டன்).
===================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com