From jayabarathi Thu Feb 18 01:29:39 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30873 invoked by uid 7770); 18 Feb 1999 09:29:28 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.findmail.com with SMTP; 18 Feb 1999 09:29:28 -0000
Received: from umlugghc ([202.188.69.171]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990219013221.HYHN507@umlugghc>; Thu, 18 Feb 1999 17:32:21 -0800
Message-Id: <3.0.3.32.19990218173930.00882b60@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 18 Feb 1999 17:39:30 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Kandiah Jey, 2LS-PD, NWW"
In-Reply-To: <36C97E7D.E450545@...>
References: <3.0.3.32.19990216195935.00898c30@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Doubt ?
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 144

At 09:19 AM 2/16/99 -0500, you wrote:
>jayabarathi wrote:
>>
>> At 10:31 PM 2/15/99 -0500, you wrote:
>> >>விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை
>> >தபுதாரன் என்று ஞாபகம்.
>> >அன்புடன்,
>> >fயா.
>> >At 02:20 PM 2/14/99 -0800, Mani M. Manivannan wrote:
>> >>>>விதவை என்ற பதத்துக்கு ஆண்பால் இல்லை.
>> >>>
>> >>> இருக்கிறது. ஆனால் இப்போது நினைவுக்கு வரவில்லை.
>> >>
>> >>கழகத் தமிழ் அகராதியில் 'மனையிலி' என்ற சொல் காணப்படுகிறது.
>> >>அது உவிடோவர் (Widower) என்ற ஆங்கிலச்சொல்லுக்குப் பொருள்
>> >>என்று வழங்கப்படுகிறது. இந்த சொல்லைப் பற்றியா குறிப்பிட
>> >----நறுக்-----
>> >
>>
>> "தபுதாரன்" என்ற சொல்லும் பழையவழக்கில் இருந்தது.
>> "மனையிலி" என்பது பழைய வழக்கில்இருந்ததாகத் தெரியவில்லை.
>> Acronym என்ற சொல்லுக்கு "முதலெழுத்துச் சுருக்கம்" என்ற சொல்
>
>மனையிலி என்பது மனை இல்லாதவர் என்பது போல் உள்ளது.
>அ-து வீடற்றவர்.
>மனைவியிலி என்பது மருவி மனையிலிஆகியுள்ளதோ?
>தபுதாரன் என்பது இப்பவும் ஈழத்தில் வழக்கில் உள்ள சொல்.
>
>நன்றி,
>அன்புடன்,
>ஜெயா.

"மனை" என்ற சொல்லே இல்வாழ்க்கையைக்குறிக்கும்
சொல்தான். குடியும் குடித்தனமும் என்று இப்போது சொல்கிறோமல்லவா?
வீட்டையும் குறிக்கும். மனைவியையும்குறிக்கும்.

"மங்கலம் என்ப மனைமாட்சி..."
"மனைத்தக்க மாண்புடையள்...."

ஆகிய குறட்பாக்களில் இச்சொல்லைஇப்பொருளில் காணலாம்.
"மனைவி" என்பதைக் குறிப்பாக இச்சொல் உணர்த்துவதை
"பிறன் இல் விழையாமை"யில் ஒரு குறட்பாவில் காணலாம்.

"பிறன்மனை நோக்காத பேராண்மைசான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற ஒழுக்கு"

இக்கால வழக்குக்கு, நீங்கள் சொன்னாப்போல "வீடற்றவன்"
என்ற அர்த்தத்தையும் தரும். widower என்பதற்குரிய
பொருளை மட்டுமே குறிப்பிட்டு இச்சொல் உணர்த்தமாட்டதுதான்.
மனைவியால் கைவிடப்பட்ட கணவன்மார்கள், மனைவியைத்
தள்ளிவைத்த கணவன்மார்கள் , மணவிலக்குப்பெற்ற ஆண்கள்
ஆகிய divorcee ஆகியோரையும் சேர்த்துபொதுவாகத்தான்
இந்தச் சொல் குறிக்கும் .
தபுதாரன் என்பது widower என்பதற்கு உரியசொல்லாக
ஈழத்தில் இன்றும் பயன்படுகிறது என்பதுபயனுள்ள செய்தி.
பழந்தமிழ்ச்சொற்களின் சிதைவுகள்கேரளத்தில் இன்றும் காணப்
படுவதாகச்சொல்வார்கள். ஈழத்தில் என்னென்ன சொற்கள்
இன்றும் இருக்கின்றன என்று அறிதல் பயனுள்ளதாகும்.
எங்கள் ஊரின் அருகில் "தாயிலிக் கண்மாய்" என்றொரு
சிறு ஏரி இருக்கிரது. "இதென்ன வேடிக்கையான பெயர். கெட்டவார்த்தைபொலத்தோன்றுகிறதே?" என்று
ஆரம்பத்தில்
நினைத்தேன். ஊர்க்காரர்களில் சிலருக்கு "சேம்ராஸ்" என்ற பெயர்
இருந்தது. ஒர் ஆளுக்குப் பெயர் "பொரியாக்குஞ்சு அம்பலக்காரன்".
கல்வெட்டு ஆராய்ச்சிதான் முடிச்சை அவிழ்த்தது.
எங்கள் ஊரின் சிவபெருமானின் பெயர்"தான்தோன்றீசர்"
(தான் தோன்றி ஈசர்). சிவன் கோயிலுக்குப் பெயர் "தான்தோன்றீஸ்வரம்".
அங்கிருப்பது இயற்கையில் அமைந்துள்ளலிங்கம். சுயம்பு லிங்கம்.
வடமொழியில் "ஸ்வயம் ப்ரகாச நாதர்".சுருக்கமாக சுயம்பிரகாஷ்.
இதைத்தான் சேம்ராஸ், சோம்ராஸ் என்றெல்லாம் உச்சரித்திருக்கிறார்கள்.
பாவம். அந்த ஆசாமி. அவர் ஒரு பழையதி.மு.க. ஆள்.
பெயரின் மூலம் தெரிந்திருந்தால் பெயரையே மாற்றியிருப்பார்.
முட்டை தோன்றி, அதிலிருந்து பொரிந்து வருவது சாதாரண
குஞ்சு. தாய்ப்பறவைதான் அந்த முட்டையைஇடும்.
தாய் இட்ட முட்டை என்ற பேச்சுக்கே இடமில்லாமல்
தானாகவே தோன்றியது "பொரியாக்குஞ்சு".
ஆகவே இதுவும் "தான்தோன்றியீசரை"க்குறிப்பதுதான்.
மனையில்லாதவன் மனை இலி;
தாயே இல்லாதவன் "தாய் இலி".
இதுவும் "தான்தோன்றி நாதரு"க்கு உரியசொல்தான்.

தபுதாரன் என்னும் சொல்லை (பெரிய)காஞ்சிப்பெரியவர்கள்
ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்."தெய்வத்தின் குரல்" என்று
நினைக்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி
======================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com