From jayabarathi Fri Feb 19 02:45:56 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 9114 invoked by uid 7770); 19 Feb 1999 10:45:49 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by vault.findmail.com with SMTP; 19 Feb 1999 10:45:49 -0000
Received: from umlugghc ([202.188.69.79]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990219104534.IMKR26758@umlugghc>; Fri, 19 Feb 1999 18:45:34 +0800
Message-Id: <3.0.3.32.19990219185747.0089ac30@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 19 Feb 1999 18:57:47 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Anbumani. S"
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Making of bronze idols ??
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 145

>Date: Wed, 17 Feb 1999 06:58:21 +0800
>To: agathiyar@egroups.com
>From: jayabarathi
>Cc: "Anbumani. S" ,Palaniappan A
>Subject: [agathiyar] Re: Making of bronze idols ??
>
>At 05:20 PM 2/17/99 -0500, you wrote:
>>அகத்தியர்களுக்கு வணக்கம்,
>>
>>சரி, வெண்கலச் சிலை இம்மாதிரி செய்வர் என்றாயிற்று.
>>
>>கல்லில் வடிக்கும் போது . . . ?
>
>
> Copying artist என்று இருக்கிறார்கள். இவர்கள்மேற்கத்திய நாடுகளில்
>எப்போதுமே இருப்பார்கள். நல்லதிறமைமிக்கவர்கள். இவர்களை வைத்துபுகழ்
>பெற்ற, அரிதான, பெருமதிப்புள்ளஓவியங்கள்/சிலைகள்/கையெழுத்துப்பிரதிகள்
>போன்றவற்றைப் பிரதி செய்யச் சொல்லும் வழக்கம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.

>------------------------cut

> இந்தியர்களில் copying artists இருக்கின்றனர்.
> பல கோயில்களில் உள்ள பழமைமிக்கசிலைகளை, copying artistகளைக்
>கொண்டு பிரதிகள் செய்வித்து, அவற்றை கோயில்களில் வைத்துவிட்டு, அசலைக்
>கடத்திச்சென்று விற்றுவிடுகின்றனர்.
> ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திரசோழரின் சிலை ஒன்று புகைப்
>படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தை இன்றும் பல புத்தகங்களில் காணலாம். இப்போது
அந்தக்காட்சியகத்தில் இருக்கும் ராஜேந்திர சோழரின் சிலை வேறொன்று. அசல் என்ன ஆயிற்று
என்பதுதெரியவில்லை.
> நான் மிகவும் மதிப்புவைத்திருக்கும்Copying artist ஒருவரைப் பற்றி இன்னும்
>சற்று நேரத்தில் சொல்கிறேன்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி

இந்த நூற்றாண்டின் மிகப்புகழ்வாய்ந்தcopying artist ஒருவரை
உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
இது இரண்டாம் உலகயுத்தத்தின்போது நடந்த நிகழ்ச்சி.
ஐரோப்பாவின் பெரும்பகுதி நாட்ஸிஜெர்மனியின் ஆதிக்கத்திற்குள்
வந்துவிட்டது. மூன்றாம் ரைஃக் என்றழைக்கப்பட்ட இந்த ஜெர்மானியப்பேரரசின்
இரண்டாம் நிலை தலைமைத்துவத்தில், ரைஃக் மார்ஷல் என்னும் பதவியில்
ஹிட்லருக்கு அடுத்தபடியாக அதிகாரத்தில் இருந்தவர் ஹெர்மன் கெரிங்க்.
ஐரொப்பாவின் முக்கிய கலைப்போக்கிஷங்களைக் கைப்பற்றியோ,
விலைக்கு வாங்கியோ, வண்டிவண்டியாகஅள்ளிச்சென்று ஜெர்மனிக்கு அனுப்பிச்
சேர்த்து வைத்திருந்தார். உண்மையிலேயே "வண்டி வண்டியாக" என்று
சொல்வது மிகவும் பொருந்தும். யுத்தமுடிவின்போது கைப்பற்றப்பட்ட
ஒரு ரயில் வண்டியில் அது நிறைய கலைப்பொருள்கள் அகப்பட்டன. அவை தவிர
அவருக்குச் சொந்தமான பெர்க்டெஸ்காட்டன் மாளிகையில் நூற்றுக்கணக்கில்
அவை இருந்தன. இவைதான் அகப்பட்டவை.ஹெர்மன் கைப்பற்றியதாகச்
சொல்லப்படும் பலபொருள்கள் இதுவரைக்கும் கிடைக்கவேயில்லை.
Art dealers, agents, and art connoisseurs எனப்படும் கலைப்பொருள்
நுட்பநிபுணர்கள் முதலியோரை வைத்துபரிசீலனை செய்தே தன் மாளிகைக்கு
கலைப்பொருள்களை அனுப்பச்செய்வார்.
அவருடைய மாளிகையிலிருந்து கைப்பற்றப்பட்ட விலைமதிப்புள்ள
ஓவியங்களில் ஒன்று ஹாலந்தைச்சேர்ந்தயான் வெர்மீர் Jan Vermeer
வரைந்த ஓவியம். இவர் 17ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த சிறந்த ஓவியர்.
Interpol investigationsபோது அந்த ஓவியம் ஆம்ஸ்ட்டெர்டாமில்
ஒரு லட்சத்து எழுபதாயிரம் பவுன் ஸ்டெர்லிங்கிற்கு விற்கப்பட்டதாகத்
தெரிந்தது. அப்போதே ஒரு லட்சத்துஎழுபதாயிரம்....அதுவும் பவுன்!
கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
விற்ற ஆசாமி, வான் மீகரென் என்னும்இரவுவிடுதி உரிமையாளர்.
நாட்டின் கலைப்பொக்கிஷங்களை நாட்ஸிகளுக்கு விற்றதாக
ராஜத்துரோகக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, உள்ளே தள்ளப்பட்டார்.
முட்டிக்குமுட்டிதட்டிப்பார்த்ததில், மேலும்ஆறு வெர்மீர்களை அவரே
விற்றுள்ளதாகவும் தெரியவந்தது.
தன்னைச்சுற்றியும் வலை மேலும் மேலும்இறுகுவதைக்கண்ட
மீகரென், தான் நாட்ஸிகளுடன் எப்போதுமே ஒத்துழைக்கவில்லை
என்றும், தான் அவர்களிடம் விற்ற ஓவியங்கள் போலியானவை என்றும்
ஹெர்மனை அவ்வகையில் தான் ஏமாற்றியிருப்பதாகவும் சத்தியப்
பிரமாணம் செய்தார்.
டச்சு அரசாங்கமும் நீதித்துறையும் நம்பமறுத்தது.
கடைசிபட்சமாக நீதிபதியிடம் மீகரன் ஒரு வேண்டுகோள்
விடுத்தார். தனக்குச்சொந்தமான விசேஷ ஓவியக்கூடத்தில் நீதிதுறையினர்,
போலீஸ், அரசு அதிகாரிகள் முன்னிலையில் தானே ஒரு வெர்மீர்
ஓவியத்தை சிருஷ்டி செய்வதாகச் சொன்னார். ஏசுநாதர் தன் இளமைக்
காலத்தில் பெரிய படிப்பாளிகளை அயரவைத்த சம்பவம் ஒன்றை வெர்மீர்
ஏற்கனவே வரைந்து, அது ஒரு புகழ்பெற்றஓவியமாக விளங்கியது.
காப்பியடிப்பதற்கு அதையே மீகரென்தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
தத்ரூபமாக அதே போன்ற இன்னொரு ஓவியத்தை வரைந்தார்.
அத்துடன் வெர்மீரின் கையெழுத்தை அப்படியே அடியில் போட்டுவைத்தார்.
பின்னர், சில பக்குவப்படுத்தும் முறைகளைப் பயன்படுத்தி, அந்த
ஓவியத்தை முன்னூறு ஆண்டுகள் பழமையானதுபோல் தோன்றச்செய்தார்.
இந்த ஓவியத்தை, நிபுணர்களின் பரிசீலனைக்கு அனுப்பினார்கள்.
பாஸாகிவிட்டது.
மீகரென் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் மிண்டும் கைது
செய்யப்பட்டர். போலி ஓவியங்களைத்தயாரித்து அசல் என்று ஏமாற்றி
விற்றதாக forgery and fake குற்றச்சாட்டு. ஏனெனில் இன்னும்பல
போலி வெர்மீர்கள் ஆங்காங்கு கண்டுபிடிக்கப்பட்டதுதான் காரணம்.
கடைசியில் பன்னிரண்டு மாதங்கள்சிறைத்தண்டனைக்கு ஆளாகி,
சிறையிலேயே மாரடைப்பால் இறந்தார்.
இந்தப் போலி வேலையை பணத்துக்காகசெய்யவேயில்லை
என்று கடைசிவரை மீகரென் சாத்தித்தார்.
பணத்துக்காக இல்லையெனில் வேறு எதற்காகச் செய்தார்???

அன்புடன்

ஜெயபாரதி
>
>
>>கல்லுக்குள் தேரை இருப்பதை எவ்வாறு கண்டறிவர் ?
>>இதற்கு முன், பாறை/கருங்கல்லில் எவ்வாறுதேரை செல்கிறது ?
>>["கல்லுக்குள் தேரைக்கும், கருப்பைக்குள்முட்டைக்கும் விருப்பொடு உணவளிக்கும்ஈசன்",
>>எனும் ஒளவை வாக்கு எங்கோ படித்த நினைவு.]
>>
>>கல்லில் செதுக்கும்போது சிலையில்சிதிலம் ஏற்பட்டால் . . . ?
>>
>>
>>அன்பு(டன்).
>===================================


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com