From jayabarathi Sun Feb 21 02:51:12 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 553 invoked by uid 7770); 21 Feb 1999 10:51:09 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.findmail.com with SMTP; 21 Feb 1999 10:51:09 -0000
Received: from umlugghc ([202.188.69.180]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990222025359.KVVP507@umlugghc>; Sun, 21 Feb 1999 18:53:59 -0800
Message-Id: <3.0.3.32.19990221190056.0089fcf0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 21 Feb 1999 19:00:56 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "N. Swaminathan"
In-Reply-To: <00a001be5c6c$af898040$e364b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: suvadis
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 149

At 08:02 PM 2/19/99 -0500, you wrote:
>அன்புள்ள ஜெயபாரதி:
>
>தமிழ்நாட்டில் பழைய ஓலைச்சுவடிகள் அதிகம் இருக்காது என்று நினைக்கிறேன்.
>மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய இடங்களில் இதுவரை கிடைக்காத
>சுவடிகள் இருக்க வாய்ப்புண்டா?

அன்புள்ள சுவாமிநாதன்,

மலேசிய, சிங்கை ஆகிய நாடுகளுக்குபழங்காலத்தில் வந்த
தமிழர்கள் விட்டுச்சென்ற சுவடிகள் ஏதும்இல்லை.; தமிழ்மொழியில்
உள்ள கல்வெட்டுக்களேகூட மூன்றுதான் இருப்பதாகத் தெரிகின்றது.
இப்போதிருக்கும் தமிழர்கள் இந்நாடுகளுக்கு சென்ற
நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்தவர்கள். இவர்களில் சிலரிடம்
தனிப்பட்ட முறையில் சுவடிகள் ஏதேனும்இருக்கலாம்.
இன்னது என்று தெரியாமலேயே ஒரு செல்வந்தர்
தமிழகத்திலிருந்து சுவடிக்கட்டுகளைவாங்கிவந்திருக்கிறார்.
அவை "அகத்திய நாடி சோதிட"த்தின் சில பகுதிகள் என்று தமிழக
ஜோதிடர் ஒருவரால் கண்டறியப்பட்டது.பின்னர் அவற்றை அந்த
சோதிடரே மீண்டும் தமிழகத்துக்குஎடுத்துச்சென்றுவிட்டார்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் பக்கத்து ஊரில் இருக்கும்
ஆசிரியர் ஒருவர் ஐந்து சுவடிக்கட்டுகளைத் தந்து, படித்துச்
சொல்லச்சொன்னார். ஆனால் அவை அனைத்துமே ஏதோ ஒரு
தலபுராணத்து ஏடுகள். திருப்பி எடுத்துச்சென்றார்.
சில சுவடிகளை அழிவிலிருந்து பாதுகாத்து, எடுத்து
காப்பாற்றியுள்ளேன். அவை வரலாற்றுச்,சிறப்பு மிக்கவை. அவற்றில்
ஒரு பகுதியை என்னுடன் இங்கு(மலேசியா)வைத்திருக்கிறேன்.
மீதி, தமிழகத்தில், பத்திரமான இடத்தில் இருக்கிறது.
இதைப்போலவே வேறு சிலரும் வைத்திருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்னும் சுவடிகள் லட்சக்கணக்கில்
இருக்கின்றன. வெவ்வேறு காப்பகங்களில்உள்ள சுவடிகளும்
ஏராளமாக இருக்கின்றன. அவற்றில்பெரும்பாலானவை இன்னும்
படிக்கப்படவே இல்லை.
உ.வே.சா. அவர்கள் ஏடு தேடியதைஅறிந்திருப்பீர்கள்.
ஆனால் அவருக்குப் பின்னர் யாரும் ஏடுகள்தேடியதில்லை.
அவர் காலத்திலும்கூட அவரால் அனைத்துஇடங்களிலும் தேடவும்
முடியவில்லை; வசதிகள் குறைவு. ஊற்றுமலையில் தேடியிருக்கிறார்.
ஆனால் சேற்றூரில் தேடவில்லை. இன்னும்இரண்டு மறவர் ஜமீன்கள்
அந்தப் பக்கத்தில் உண்டு. இந்தத் தென்பாண்டி ஜமீன்கள்,
பழைய பாண்டியமன்னர்களின் வழியில்வந்தவர்கள்.
சமீபத்தில், ஊற்றுமலை ஜமீன்தாரின்உதவியோடு அவருடைய
அரண்மனையிலிருந்த, காவடிச்சிந்துஅண்ணாமலை ரெட்டியார்
பாடல்களைத் தேடி எடுத்து, ஒரு வரலாற்றுநூல் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆகவே, தமிழகத்திலேயே தேடவேண்டியதும், படிக்க
வேண்டியதும், தொகுக்க வேண்டியதும்,பதிப்பிக்கவேண்டியதும், பிரதியெடுக்கவேண்டியதும் நிறையவே
இருக்கின்றன.
வெளிநாடுகளில் பல சாசனங்களும் சுவடிகளும் இருக்கின்றன.
இவற்றில் எத்தனை தனியாரிடம் இருக்கின்றன என்பது வெளியில்
அறியப்படமுடியாதது. சிறு சிறு ஊர்களில், முக்கியத்துவம்
தெரியாமலேயே மறைந்து இருப்பன ஏராளம்.
தரங்கம்பாடியில் வெளியிடப்பட்ட"தம்பிரான் வணக்கம்"தான்
தமிழில் முதன்முதலில் வெளியிடப்பட்டதாக பொதுவாக நினைத்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் போர்ச்சுகல்நாட்டிலுள்ள சிற்றூர் ஒன்றில்
ஒரு தமிழ் அச்சுப்பிரதி கிடைத்தது.இதுதான் தமிழில் முதலில்
அச்சில் வெளியான சங்கதி.
தேடவேண்டும். தமிழர்கள் அதையெல்லாம் செய்வதில்லை.
சில்வியா விஞாத்தோ என்னும் பாரிஸ்வாசி, சில கிராமியக்கோயில்
வழிபாடுகள் சம்பந்தமாக ஆய்வு செய்யவந்திருந்தார். நான் செய்த
உதவிக்குப் பிரதியுபகாரமாக, பாரிஸில் "பிப்லியோலிதிக் ஃப்ரான்ஸே"யில்
தமிழ் ஏடுகள் இருக்கும் விபரம் அனுப்புமாறு கேட்டிருந்தேன். அந்த
விபரத்தையும் அனுப்பிவைத்தார், அந்தப்பெண்மணி.
தேடவேண்டும். வேறுவழியில்லை.
அதர்வ வேதத்தின் சில பகுதிகள் அழியும் தறுவாயில்
இருந்ததைக் கண்டு கவலையுற்ற காஞ்சிபெரியவர்கள், தேடச்செய்தார்.
குஜராத்தில் ஒருவர் அதை அறிந்துவைத்திருப்பதாகத் தெரிந்து,
இரண்டு வேதவித்துக்களை அனுப்பி, அவற்றைக் கற்றுவரச்செய்தார்.
வெளிநாடுகளில் நிச்சயமாக சுவடிகள்முதலியவை
இருக்கின்றன.

அன்புடன்

ஜெயபாரதி


சமீபத்தில் தொல்பொருள் ஆய்வாளர்நாகசாமி
>டச்சு அருங்காட்சியகத்திலிருந்து ஒருகடிதத்தை நகல் எடுத்து வந்தார். டச்சுக்காரர்கள்
>தமிழகத்தில் வர்த்தகம் செய்ய தமிழகமன்னர் கொடுத்த அனுமதியே அது. தமிழ்நாட்டில்
>ஏழ்மை, அறியாமையால் பல சுவடிகள்அழிந்துவிட்டன. தமிழர் சென்ற மற்றநாடுகளிலாவது
>இவை பத்திரமாக இருக்கலாமல்லவா?
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
===============================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com