From jayabarathi Tue Feb 23 22:40:32 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20611 invoked by uid 7770); 24 Feb 1999 04:50:19 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.findmail.com with SMTP; 24 Feb 1999 04:50:19 -0000
Received: from umlugghc ([202.188.69.29]) by cgi2.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990224045003.CHBA3765@umlugghc>; Wed, 24 Feb 1999 12:50:03 +0800
Message-Id: <3.0.3.32.19990224125958.007a73f0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 24 Feb 1999 12:59:58 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Anbumani. S"
In-Reply-To: <36CB40A9.5A61867F@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Toad in Stone(Was Making of bronze idols ??)
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 150

At 05:20 PM 2/17/99 -0500, you wrote:
>அகத்தியர்களுக்கு வணக்கம்,
>
அன்பு நண்பர்களே,
>
>கல்லில் வடிக்கும் போது . . . ?
>
>கல்லுக்குள் தேரை இருப்பதை எவ்வாறு கண்டறிவர் ?
>இதற்கு முன், பாறை/கருங்கல்லில் எவ்வாறுதேரை செல்கிறது ?
>["கல்லுக்குள் தேரைக்கும், கருப்பைக்குள்முட்டைக்கும் விருப்பொடு உணவளிக்கும்ஈசன்",
>எனும் ஒளவை வாக்கு எங்கோ படித்த நினைவு.]

எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடியபாட்டும் இருக்கிறது.
அசோக் குமார் என்னும் படத்திலுள்ளது.

"கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்......."

முழுப்பாட்டு........(முடிந்தால் பாடிப்பாருங்கள்)

சத்வகுண போதன் - சரணமிருக்க - (சத்வ)
சித்தமும் வீணே....... கலங்குவதேனோ?'-(சத்வ)

கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் --(சத்வ)

கண்ணிழந்தாலென்ன? கடவுள்க்கும் என்ன?
கண்ணைல்லையோ நம்மைக் காக்கும் தயாளன்! -(சத்வ)

பாபநாசம் சிவன் எழுதிய பாடல் என்றுதோன்றுகிறது. அவர்தான்
வி.என்.ஜானகியின் சிற்றப்பா. மறந்துவிட்டீர்களா? அதற்குள்ளாகவா?
தமிழக முதலமைச்சராக இருந்தாரே?

கல்லினுள் தேரை, அதன் விளைவுகள் முதலியவை ஒன்றுக்கும் மேற்பட்ட
கதைகளும் கட்டுரைகளும் சம்பந்தப்பட்டவை. அவை தொடர்பான படங்களும்
இருக்கின்றன. மேலும் ஒரு படத்தை reconstituteசெய்து முழுத்தோற்றம்
கொடுக்கவேண்டும். இதையெல்லாம் வெப்ஸைட்டில் போட்டால்தான்
விரிவாகவும் விளக்கமாகவும் விளங்கும்.
இங்கேயும் நம்ம பழைய ஹீரோ திருமலை நாயக்கர் வருகிறார்.

>
>கல்லில் செதுக்கும்போது சிலையில் சிதிலம் ஏற்பட்டால் . . . ?

கல்லில் செதுக்கும்போது சிதிலம் ஏற்பட்டால், பெரும்பாலும்
ஒதுக்கிவிட்டு, வேறு செய்வார்கள்.
சில சந்தர்ப்பங்களில் ஒரு வகையானபொடியை வைத்து உருக்கி,
இறுக விட்டு, செப்பம் செய்துவிடுவார்கள். இந்தப் பொடியின் ஃபார்முலா
இப்போது இல்லை. அதுபோலவே கல்லையும்கரைக்கும் ஒரு
சேர்க்கை மருந்து வைத்திருந்தார்கள். அதில் "சிலா ஜீத்" என்னும் பொருளும்
சேர்ந்திருந்ததாம். அந்த ஃபார்முலாவும்போச்சு.
சிறுநீர்க் கல்லைக் கரைக்கச் செய்யும்சில ஆயுர்வேத மருந்துகளில்
இன்றும் சிலா ஜீத் சேர்க்கப்படுகிறது. (இந்திரஜித் = இந்திர+ஜித்-இந்திரனை
ஜெயிப்பவன்; சிலா ஜீத் = சிலா+ஜீத்;சிலா என்றால் கல். ஆகவே கல்லை
வெல்வது சிலாஜீத்).
கற்சிலை செய்யும்போது சிதிலம் ஏற்பட்ட கதை ஏற்கனவே
சொல்லப்பட்டுவிட்டதே? திருமலைநாயக்கர், அரசி, அமைச்சர் நீலகண்ட
தீட்சிதர்....நினைவுக்கு வருகிறதா?

அன்புடன்

ஜெயபாரதி
>
>
>அன்பு(டன்).
========================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com