From jayabarathi Tue Feb 23 23:27:44 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29040 invoked by uid 7770); 24 Feb 1999 06:28:53 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.findmail.com with SMTP; 24 Feb 1999 06:28:53 -0000
Received: from umlugghc ([202.188.69.220]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990224062837.CDWN14715@umlugghc>; Wed, 24 Feb 1999 14:28:37 +0800
Message-Id: <3.0.3.32.19990224133530.008b0100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 24 Feb 1999 13:35:30 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Toad in Stone(Was Making of bronze idols ??)
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 151

>Date: Wed, 24 Feb 1999 12:59:58 +0800
>To: agathiyar@egroups.com
>From: jayabarathi
>Subject: Re: [agathiyar] Toad in Stone(Was Making of bronze idols ??)
>Cc: "Anbumani. S"
>In-Reply-To: <36CB40A9.5A61867F@...>
>
>At 05:20 PM 2/17/99 -0500, you wrote:
>>அகத்தியர்களுக்கு வணக்கம்,
>>
>அன்பு நண்பர்களே,
>>
>>கல்லில் வடிக்கும் போது . . . ?
>>
>>கல்லுக்குள் தேரை இருப்பதை எவ்வாறு கண்டறிவர் ?
>>இதற்கு முன், பாறை/கருங்கல்லில் எவ்வாறுதேரை செல்கிறது ?
>>["கல்லுக்குள் தேரைக்கும், கருப்பைக்குள்முட்டைக்கும் விருப்பொடு உணவளிக்கும்ஈசன்",
>>எனும் ஒளவை வாக்கு எங்கோ படித்த நினைவு.]
>
> எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடியபாட்டும் இருக்கிறது.
> அசோக் குமார் என்னும் படத்திலுள்ளது.
>
> "கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
> புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்......."
>
> முழுப்பாட்டு........(முடிந்தால் பாடிப்பாருங்கள்)
>
> சத்வகுண போதன் - சரணமிருக்க - (சத்வ)
> சித்தமும் வீணே....... கலங்குவதேனோ?'-(சத்வ)
>
> கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும்
> புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் --(சத்வ)
>
> கண்ணிழந்தாலென்ன? கடவுள்க்கும் என்ன?
> கண்ணைல்லையோ நம்மைக் காக்கும் தயாளன்! -(சத்வ)
>
> பாபநாசம் சிவன் எழுதிய பாடல் என்றுதோன்றுகிறது. அவர்தான்
>வி.என்.ஜானகியின் சிற்றப்பா. மறந்துவிட்டீர்களா? அதற்குள்ளாகவா?
>தமிழக முதலமைச்சராக இருந்தாரே?
>
> கல்லினுள் தேரை, அதன் விளைவுகள் முதலியவை ஒன்றுக்கும் மேற்பட்ட
>கதைகளும் கட்டுரைகளும் சம்பந்தப்பட்டவை. அவை தொடர்பான படங்களும்
>இருக்கின்றன. மேலும் ஒரு படத்தை reconstituteசெய்து முழுத்தோற்றம்
>கொடுக்கவேண்டும். இதையெல்லாம் வெப்ஸைட்டில் போட்டால்தான்
>விரிவாகவும் விளக்கமாகவும் விளங்கும்.
> இங்கேயும் நம்ம பழைய ஹீரோ திருமலை நாயக்கர் வருகிறார்.
>
>>
>>கல்லில் செதுக்கும்போது சிலையில்சிதிலம் ஏற்பட்டால் . . . ?
>
> கல்லில் செதுக்கும்போது சிதிலம் ஏற்பட்டால், பெரும்பாலும்
>ஒதுக்கிவிட்டு, வேறு செய்வார்கள்.
> சில சந்தர்ப்பங்களில் ஒரு வகையானபொடியை வைத்து உருக்கி,
>இறுக விட்டு, செப்பம் செய்துவிடுவார்கள். இந்தப் பொடியின் ஃபார்முலா
>இப்போது இல்லை. அதுபோலவே கல்லையும் கரைக்கும் ஒரு
>சேர்க்கை மருந்து வைத்திருந்தார்கள். அதில் "சிலா ஜீத்" என்னும் பொருளும்
>சேர்ந்திருந்ததாம். அந்த ஃபார்முலாவும்போச்சு.
> சிறுநீர்க் கல்லைக் கரைக்கச் செய்யும்சில ஆயுர்வேத மருந்துகளில்
>இன்றும் சிலா ஜீத் சேர்க்கப்படுகிறது. (இந்திரஜித் = இந்திர+ஜித்-இந்திரனை
>ஜெயிப்பவன்; சிலா ஜீத் = சிலா+ஜீத்; சிலா என்றால் கல். ஆகவே கல்லை
>வெல்வது சிலாஜீத்).
> கற்சிலை செய்யும்போது சிதிலம் ஏற்பட்ட கதை ஏற்கனவே
>சொல்லப்பட்டுவிட்டதே? திருமலைநாயக்கர், அரசி, அமைச்சர் நீலகண்ட
>தீட்சிதர்....நினைவுக்கு வருகிறதா?
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>>
>>
>>அன்பு(டன்).
>========================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com