From jayabarathi Wed Feb 24 09:10:26 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 21204 invoked by uid 7770); 24 Feb 1999 12:29:54 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by vault.findmail.com with SMTP; 24 Feb 1999 12:29:54 -0000
Received: from umlugghc ([202.188.69.141]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990224122937.MBWC26758@umlugghc>; Wed, 24 Feb 1999 20:29:37 +0800
Message-Id: <3.0.3.32.19990224143927.00897900@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 24 Feb 1999 14:39:27 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "N. Swaminathan"
In-Reply-To: <004801be5fb5$3d405c60$7237b3d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Toad in Stone
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 153

At 12:19 AM 2/24/99 -0500, you wrote:
>
>
>(டாக்டர் ஜெயபாரதி எழுதினார்)
>
>> கல்லினுள் தேரை, அதன் விளைவுகள் முதலியவை ஒன்றுக்கும் மேற்பட்ட
>>கதைகளும் கட்டுரைகளும் சம்பந்தப்பட்டவை. அவை தொடர்பான படங்களும்
>>இருக்கின்றன. மேலும் ஒரு படத்தை reconstituteசெய்து முழுத்தோற்றம்
>>கொடுக்கவேண்டும். இதையெல்லாம் வெப்ஸைட்டில் போட்டால்தான்
>>விரிவாகவும் விளக்கமாகவும் விளங்கும்.
>
>
>உங்களிடம் இருக்கும் படங்களையும் செய்திகளையும் அவசியம் போடுங்கள்.
>
> ஒரு ஸர்ச் போட்டதில் ஒரு வெப்சைட் இருப்பது தெரிந்தது !
>அதன் உரல்: http://www.kent.net/paranormal/main.html
>
>இதில் கல்லுக்குள் horned lizard (ஓணான் ?), தேரை, pterodactyl (டைனசோர்?) பற்றி
>சொல்கிறார்கள்.
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்

நானும் முதலில் இதை ஒரு legend என்றுதான்சந்தேகப்பட்டேன்.
தேரை விழுந்த குழந்தை என்று வற்றலும்தொத்தலுமாக இருக்கும்
குழந்தைகளைச் சொல்வார்கள். அதுபோலஏதேனும் இது ஒரு metaphor
மாதிரி என்றும் நினைத்தேன். அல்லது வேறு அர்த்தமும் அந்தச்சொல்லுக்கு
இருக்கலாமோ என்றும் ஓர் எண்ணம். குழந்தை நோய் போல கல்லில்
காணப்படும் குறைப்பாடு/குற்றவகையில்ஒன்றாகவும் இருக்கலாமல்லவா?
அதாவது கல்லுக்குரிய நோய்(?).
கடைசியில் Arthur C. Clarke க்குடைய Mysterious Worldபுத்தகத்தில்
தேரை உள்ள கல்லின் படத்தைப் பார்த்தபின்னரே இதில் ஏதோ விஷயம்
இருக்கு என்று முடிவுக்கு வந்தேன். ஆர்தர் க்லார்க் அப்படியெல்லாம்
ஏப்பை சாப்பையான ஆளில்லை. சும்மா புருடா மாஸ்டரும் அல்ல. டானிக்கனின்
சீடர்களில் பலர் சரடுவிடுவதையும்கயிறுதிரிப்பதையும் பார்த்திருக்கிறேன்.
ஆர்தர் க்லார்க் நிச்சயம் அப்படிப்பட்டவரல்லர்.
Fossilised specimen என்பது அதுவே கல்லாக மாறியிருக்கும்.
டைனோசார்களின் எலும்பு, பற்கள் அவ்வாறு கல்லாக மாறியவைதான்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் டீரோடாக்ட்டைல் அவ்வகையினதான்.
Horned Lizard என்பது உங்கள் பக்கத்தில் அரிஸோனா, கோலராடோ
பக்கங்களில் திரியும் Gila Monsterருடையமுப்பாட்டனுக்குச்
சித்தப்பா. பாவம்! போதாத காலம். Exinctஆகிவிட்டது.
ஆனால் இந்த "கல்லுக்குள் தேரை" வேறாகஅல்லவா இருக்கிறது?
அந்த reconstitution வேலைதான் டங்குவார் அந்துபோகும்.
மற்றதெல்லாம் டைப் அடித்தல், ஸ்கான் செய்தல், வலையேற்றந்தானே.
விரைவில் செய்யமுயல்கிறேன்.

அன்புடன்

ஜெயபாரதி

=================================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com