From jayabarathi Fri Feb 26 03:04:45 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14846 invoked by uid 7770); 26 Feb 1999 11:04:33 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.findmail.com with SMTP; 26 Feb 1999 11:04:33 -0000
Received: from umlugghc ([202.188.69.194]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990227030718.SKXL507@umlugghc>; Fri, 26 Feb 1999 19:07:18 -0800
Message-Id: <3.0.3.32.19990226191642.007b9100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 26 Feb 1999 19:16:42 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Anbumani. S"
In-Reply-To: <3.0.3.32.19990224125958.007a73f0@...>
References: <36CB40A9.5A61867F@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Toad in Stone(Was Making of bronze idols ??)
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 154


அன்பு நண்பர்களே,

அன்பு மணி கேட்டிருந்தார்: கல்லில்சிலவடிக்கும்போது சிதிலம்
ஏற்பட்டால் என்னெ செய்வது என்று.

>
>>கல்லில் செதுக்கும்போது சிலையில்சிதிலம் ஏற்பட்டால் . . . ?

அதற்கு:
>
> கல்லில் செதுக்கும்போது சிதிலம் ஏற்பட்டால், பெரும்பாலும்
>ஒதுக்கிவிட்டு, வேறு செய்வார்கள்.
> சில சந்தர்ப்பங்களில் ஒரு வகையானபொடியை வைத்து உருக்கி,
>இறுக விட்டு, செப்பம் செய்துவிடுவார்கள். இந்தப் பொடியின் ஃபார்முலா
>இப்போது இல்லை.

என்று பதில் தந்திருந்தேன்.

இது சம்பந்தமாக ஒரு உண்மை சம்பவத்தின் விபரம் கிடைத்தது.
மயிலாப்பூர் ஒரு காலத்தில் தனியூராகஇருந்தது. இன்னும் பழமையான
காலத்தில் அங்கு துறைமுகமும்கூட இருந்திருக்கிறது. பல்லவர்களின் முக்கிய
துறைமுகங்களில் கடல் மல்லையும்(மஹாபலிபுரம்/மாமல்லபுரம்) மயிலையும்
இருந்தன.
அவ்வாறு தனியாக விளங்கியபோது, அதன் எல்லைப்புறத்துக் காவல்
தெய்வமாக விளங்கியவள் ஒரு பத்ரகாளியம்மன். அவளுடைய கோயில் இன்றும்
இருக்கிறது. இப்போது கோலவிழியம்மன் என்ற பெயரில் அந்தக்காளி
விளங்குகிறாள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரையில் அக்கோயில் சிறப்பின்றி,
போவாரின்றி இருந்தது.
அங்கு ரௌடிகள் சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருந்தது; சட்டவிரோத
சூதாட்டம், சாராயம்காய்ச்சுதல், முதலியவற்றுடன் குடிகாரர்களின்
தங்குமிடமாகவும் விளங்கியது. கோயிலைச்சுற்றிலும் நெருக்கிக் குடிசைகள்
போட்டிருந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு நாள், ஓர் அற்புதக்காட்சி
அங்கு தோன்றியதாம். அன்றிலிருந்து ரௌடி ராஜ்யமும் அழிந்து, குடிசைகள்
அகன்று விளங்கலாயிற்றாம்.
பின்னர், இந்து அறநிலைய ஊழியர் ஒருவரிடம் இவ்வாறு
ஒரு பழைமையான கோயில் மயிலையில்கவனிப்பாரற்று இருப்பதை
இன்னொருவர் சொல்லியிருக்கிறார்.
அவ்வூழியர் அக்கோயிலுக்குச் சென்றுபார்த்து, சிறிது சுத்தம்
செய்து கற்பூரம் காட்டிவிட்டு வந்துவிட்டார்.
அன்று இரவில் ஒரு தத்ரூபமான கனவு வந்தது.
ஒரு வாட்டசாட்டமான அம்மாள் வந்து, தன்னுடைய கால் வெட்டுண்டிருப்பதாகவும் அதை ஏன்
கவனிக்கவில்லையென்றும் கேட்டிருக்கிறாள்.
அடுத்தநாள் அவர் கோயிலுக்குச்சென்றுபார்த்தபோது கனவில் அந்த அம்மாள்
காட்டிய இடத்தில் சிலையின் கால்உடைந்திருந்ததைக் கண்டார்.
பிறகு திருவேற்காடு கருமாரிதாசர்ராமதாசர் வந்து அதனை சரி
செய்ய ஏற்பாடு செய்து, வழிபாடுகளையும் நெறிப்படுத்திக் கொடுத்தாராம்.
ஆகவே கற்சிலையை செப்பனிடும் வேலைஇக்காலத்திலும்
நடந்திருக்கிறது. ஆனால் அதை எப்படிசெய்தார்கள் என்பது தெரியவில்லை.
ஒரு கொசிறு தகவல்: தென்னாப்பிரிக்காவைச்சேர்ந்த முன்பின்
தெரியாத ஒருவருக்குப் பெருஞ்சிக்கல்; அவர் சென்னை வந்த சமயத்தில்
இந்த அம்மாள் தீர்த்துவைத்தாளாம். கடல்கடந்தும் அதன்மூலம் புகழ்பெற்றாள்
என்றும் சொல்லப்படுகிறது.

அன்புடன்

ஜெயபாரதி

======================================







>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>>


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com