From Krishnan Sun Feb 28 05:21:02 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 716 invoked by uid 7770); 28 Feb 1999 13:20:48 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by vault.findmail.com with SMTP; 28 Feb 1999 13:20:48 -0000
Received: from pop3.pacific.net.sg (pop3.pacific.net.sg [203.120.90.45]) by snoopy.pacific.net.sg with ESMTP id VAA03976; Sun, 28 Feb 1999 21:20:28 +0800 (SGT)
Received: from default (tns03335.singnet.com.sg [165.21.192.45]) by pop3.pacific.net.sg with SMTP id VAA07153; Sun, 28 Feb 1999 21:20:26 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990228211623.0079de50@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Sun, 28 Feb 1999 21:16:23 +0800
To: Tamil@...@everbestweb.com
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] thayaa muula thanmam # 1
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 155


திருநாவுக்கரசர் காட்டும்
தயா மூலம் தருமம் # 1
^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தயா மூல தன்மம் என்னும் சொற்றொடர்தயா, மூலம், தன்மம் என்னும் மூன்று சொற்களால் இணைந்த
ஒரு சொற்றொடர். இம்மூன்று சொற்களும்வடமொழி எனப்படும். முதலில் இவற்றின் பொருளைக்
காண்போம்.
தயா , தயை , தயவு என்னும் மூன்று சொற்களும் ஒரு பொருள் உணர்த்தும் ஒத்த நிலையுடைய
சொற்கள். இவைகள் அருள், கருணை, அன்பு,பக்தி, பரிவு, இரக்கம் என்னும் பொருளைஉணர்த்தும்
இயல்பின.
" தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான் " என்றும் ....
" நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே "என்பதையும்...
" தாயிற் சிறந்த தயா " என்பதையும்....
" பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து " ..... என்பதையும்
ஒப்பிட்டு நோக்கத் தக்கது. தயா என்பதுபரிவு, அன்பு,கருணை எனப் பொருள் தந்துநிற்பதையும் காண
முடிகிறது.
இறைவனைத் தாயிற் சிறந்த தயாவானதத்துவனாகத் கூறும் மாணிக்க வாசகர்தயாபரனகவும்
இறைவனை அழைக்கிறார். இறைவன் கருணைக் கடலாகக் காட்சி அளிப்பதை இவ்வரிகள் காட்டுகின்றன.

மூலம் என்பது அடி, வேர், கிழங்கு. ஆதி, வழி, வாயில்,பிரதானம், காரணம், என்று பல பொருள்
உணர்த்தும் ஒரு சொல்லாகும். சிறு பஞ்சமூலம் என்னும் பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக
விளங்கும் நூலின் பெயரில் மூலம் என்பதுவேர்கலைத் குறிக்க விளங்குகிறது.
" மூலவோலை மாட்சியிற் காட்ட...." என்னும் பெரிய புராணத்தொடரில் ஆதியானது என்று
பொருள் உள்ளது.
" இது அவன் மூலமாகக் கிடைத்தது.." என்னும் பேச்சு வழக்குத் தொடரில் மூலம் என்பது
வழி, வாயில் என்னும் பொருளுடன் விளங்குகிறது.
" மும்மை சால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை..." என்று வரும் கம்ப ராமாயணத் தொடரில்
மூலம் என்பது அடிப்படை , தலைமை என்னும்பொருளுடன் திகழ்கிறது.
" மூலமாகிய மும்மலம்.."
" மூல நோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்..." என்னும் தொடரில் மூலம் என்பது அடிப்படை,
காரணம் என்னும் பொருளில் அமைந்துள்ளது.

தொடரும்.......




------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com