From Krishnan Mon Mar 1 03:20:02 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 3825 invoked by uid 7770); 1 Mar 1999 11:19:43 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 1 Mar 1999 11:19:43 -0000
Received: from pop3.pacific.net.sg (pop3.pacific.net.sg [203.120.90.45]) by sunny.pacific.net.sg with ESMTP id TAA18839; Mon, 1 Mar 1999 19:19:22 +0800 (SGT)
Received: from default (tns03239.singnet.com.sg [165.21.191.229]) by pop3.pacific.net.sg with SMTP id TAA05526; Mon, 1 Mar 1999 19:19:20 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990301191516.007e3d30@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Mon, 01 Mar 1999 19:15:16 +0800
To: tamil@...
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, Tamil@...@everbestweb.com
Mime-Version: 1.0
Subject: [agathiyar] thayaa muula thanmam # 2
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 156


திருநாவுக்கரசர் காட்டும்
தயா மூலம் தருமம் # 2 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^


தன்மம் என்னும் சொல் தர்மம் எனப்பொருள்படும் அறத்தையும் குறிக்கும்
தயா மூல தன்மம் என்னும் சொற்றொடர் தமிழ் உலகுக்கு முதன்முதலாக அறிமுகப்
படுத்திய பெருமை அப்பரடிகளாரைச் சாரும். அவர் தம் திருத்தாண்டகத்தில் இத்
தொடரை இருமுறை கையாளுகிறார்.திருமழபாடித் திருத்தாண்டகத்தில்
ஆறாவது பாடலாக வருகிறது..

" பொறியிலியேன் தனைப் பொருளா ஆண்டு கொண்டு
தனந்திருத்து மவர் திறத்தை ஒழியப்பாற்றித்
தயாமூல தன்ம வழி என்க்கு நல்கி... "
இப்பாட்டில் தயா மூல தன்ம வழியை இறைவன் தமக்கு தந்து மனந்திருத்தினான்
என்று திருநாவுக்கரசர் கூறுகிறார்.
வஞ்சனை நீக்கித் தயா மூல தன்மம் என்னும் தத்துவத்தை வழங்கும்
வள்ளலாக இறைவன் இருப்பான் என்பதைநாவுக்கரசர் இங்கே கூறுகிறார். இந்த
இரு பாடல்கள் மூலம் நாம் உணர்வது தயா மூல தன்மம் என்பது ஒரு தத்துவ நெறி-
என்பதையும் அந்நெறி ஆண்டவனால் அப்பர்பெருமானுக்கு நல்கப்பட்ட ஒன்று
என்பதையும் அவ்வழி நின்று வணங்குபவர்எல்லா நலனும் பெறுவார் என்பதை
அறிந்துக்கொள்கிறோம்.
திருப்பனந்தாள் மடத்தின் பதிப்பானதிருநாவுக்கரசு தேவாரம் என்னும்
நூலில் ,
" தயா மூல தன்ம வழி - தருமங்களுக்கெல்லாம் மூலமாகிய
அன்பு என்னும் அறம் " என்று அடிகுறிப்பு உள்ளது.
அறங்களுக்கு எல்லாம் ஆணி வேராக இருப்பது அன்பு என்பதை தயா மூல தன்மம்.

மனிதனாக பிறந்த நாம் அன்பும், அறமும்கொண்டு வாழ்ந்து உயரவேண்டும்.
அவ்வாழ்வினை அடையும் நெறியே இந்ததயா மூல தன்ம வழி.
தொடரும்....




------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com