From Krishnan Tue Mar 2 03:31:26 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 447 invoked by uid 7770); 2 Mar 1999 11:31:20 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 2 Mar 1999 11:31:20 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id TAA23433; Tue, 2 Mar 1999 19:30:58 +0800 (SGT)
Received: from default (tns00237.singnet.com.sg [165.21.184.107]) by pop1.pacific.net.sg with SMTP id TAA23473; Tue, 2 Mar 1999 19:30:56 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990302192521.0079e560@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Tue, 02 Mar 1999 19:25:21 +0800
To: Tamil@...@everbestweb.com
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] thayaa muula thanmam # 3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 157


திருநாவுக்கரசர் காட்டும்
தயா மூலம் தருமம் # 3
**********************

மனிதர்களாகப் பிறந்த நாம் அன்பும்,அறமும் கொண்டு உயந்தால் அதுதான் சீரிய வாழ்க்கை.
அவ்வாழ்வினை அடையும் நெறியே இத்தயா மூல தன்மையில் அடங்கி இருக்கிறது.உலகம், இந்நெறி
நின்றால் இத்தனை பூசல் ஏது ? அமைதி அல்லவா நிலவும்.
அந்த அமைதி உலக மாந்தரை வாழ்விக்கும் மெய்மருந்து.அன்பும், அறமும் ஆகியபண்புகள்தான்
இதன் தத்துவம்.இரக்கமே அடிநிலை அறம்என்னும் உண்மை,

இவற்றை எல்லாம் நோக்கும் போது தயாமூல தன்மம் என்பது அன்பு, அருள், அறம் ஆகியவற்றுடன்
தொடர்புடைய ஒன்று என்று சொல்லவேண்டியிருக்கிறது.

அறத்தை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுத்து இல்லறத்திற்கு இன்றியமையாதபண்பு,
அன்பு என்றும் துறவறத்திற்கு விழுத்துணையாகும். பண்பு , அருள் என்றும் கூறிய வள்ளுவர்அருள் என்பது
அன்புத்தாய் பெற்ற குழந்தை என்றும் தெளிவுபடுத்திக் காண்பர். அன்பு என்பது தொடர்பு உடைய
எல்லாரிடத்தும் கொள்ளும் காதல் என்றும், அருள் என்பது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள்
மேலும் செல்வதாகிய கருணை என்றும் பிரித்துக் காண்பார் பரிமேலழகர்.

மக்கள் அறநெறி நின்று வாழவேண்டும்.இல்லற நெறி நின்று துறவற நெறிக்குசெல்லவேண்டும்.
இல்லற நெறியில் நிற்கும்போது அன்பைக் கடைப்பிடித்து வாழ்தல் வேண்டும். பின்பு படிப்படியாக
மன்னுயிர் அனைத்தும் தன்னுயிராக கருதும்மாண்பினை பெற வேண்டும். இத்தகைய நெறி கடைப்
பிடித்தவர் நீடு வாழ்தலாகிய வீடுபேறினை பெறுவர்.

தொடரும்.....



------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com