From Krishnan Wed Mar 3 18:28:57 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7491 invoked by uid 7770); 3 Mar 1999 11:03:49 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 3 Mar 1999 11:03:49 -0000
Received: from pop3.pacific.net.sg (pop3.pacific.net.sg [203.120.90.45]) by sunny.pacific.net.sg with ESMTP id TAA28507; Wed, 3 Mar 1999 19:03:27 +0800 (SGT)
Received: from default (hs06172.singnet.com.sg [165.21.198.207]) by pop3.pacific.net.sg with SMTP id TAA27764; Wed, 3 Mar 1999 19:03:24 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990303185855.007e7710@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Wed, 03 Mar 1999 18:58:55 +0800
To: agathiyar@egroups.com
From: Krishnan
Cc: tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] thayaa muula thanmam # 4
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 158


திருநாவுக்கரசர் காட்டும்
தயா மூலம் தருமம் # 4
**********************



தயா மூல தனமம் என்னும் தொடரில் முதன்மையாக இருப்பது அருள்
என்பதே ஆகும். பாரதியார் பாடியது போல் " காக்கையும் குருவியும் எங்கள் சாதி"
என்று கருதி எல்லா உயிர்களுக்கும் ஓம்பி நிற்பது இந்த அன்பு.அருள் தருகின்ற
செல்வம் தன் செல்வத்துட் செல்வமாக கருதப்படும் . பல வழிகளில் ஆராய்ந்து
பார்த்தால் அருள்தான் ஒருவனுக்கு உற்ற துணை என்பது வள்ளுவர் கண்ட முடிவு.

` அருளுடையார் மருளுடைய நகர் புகார்;மன்னுயிர் ஓம்பி அருள்பவர்க்கு
தன்னுயிர் அஞ்சும் தீவினைகள் இல்லை. மேலும் அல்லல் என்பதே அருளாளர்க்கு
இல்லை. இதற்கு உலகம் சான்று பகரும் என்பார் திருவள்ளுவர்.பொதுவாக,
அருளாளர்கள் என்று சொல்லும்போது இருவகைப் பொருள் சொல்லலாம்.

அருள் என்னும் கருணைப் பண்பினைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து
ஒழுகுகின்ற சான்றோர்கள் என்பது ஒருபொருள்.இறைவனின் பெருங்கருணைத்
திறமாகிய அருள் - திருவருள் பெற்றசான்றோர்கள் என்பது மற்றொரு பொருள்.

" அல்லல் என் செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினை தொந்தந்தின்என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லையில்லாதோர் அடிமை பூண்டேனுக்கே.. "
என்னும் அப்பர் பெருமானின்திருமுறைப் பாடல் அருளாளர்கள் துன்பம்
போக்கி எந்நாளும் இன்பமுடன் இருக்கும்இயல்பினர் என்பதைக் கூறுகின்றது.

அருளுடையார் வீடு பேறு பெறுவர்.
" அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு " என்னும்
குறள் வாயிலாக இது வலியுறுத்தப் பெறுகின்றது. அருளில்லார்க்கு உய்தி என்பதே
இல்லை.அருளில்லாமல் செய்யப்படுகின்றஅறம் ஞானமில்லாதவன் மெய்ப்
பொருள் காண்பதை ஒத்தாகும்.

எனவே , அருள் வழி என்பது அல்லவை நீக்க உதவுவது ; துன்பம் போக்கி
இன்பம் தருவது ; வீட்டு இன்பத்தையும் வழங்குவது - இத்தகைய அருள் நெறியே
தயா மூல தன்மம் என்னும் தகைமை நெறி.

தொடரும்...





------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com