From Subramanian Thu Mar 4 00:31:41 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30385 invoked by uid 7770); 4 Mar 1999 08:31:23 -0000
Received: from gatekeeper.wipsys.soft.net (164.164.90.8) by vault.findmail.com with SMTP; 4 Mar 1999 08:31:23 -0000
Received: by gatekeeper.wipsys.soft.net (SMI-8.6/SMI-SVR4) id OAA17953; Thu, 4 Mar 1999 14:03:15 -0500
Received: from kmglmail(164.164.26.11) by gatekeeper via smap (V2.0) id xma017942; Thu, 4 Mar 99 14:03:05 -0500
Received: from nortelgw.wipsys.soft.net by kmglmail.wipsys.soft.net (SMI-8.6/SMI-SVR4) id OAA11205; Thu, 4 Mar 1999 14:01:08 +0530
Received: by nortelgw.wipsys.soft.net; id OAA26843; Thu, 4 Mar 1999 14:09:09 +0530 (IST)
Date: Thu, 4 Mar 1999 14:09:09 +0530 (IST)
Message-Id: <199903040839.OAA26843@...>
Received: from unknown(192.219.223.59) by nortelgw.wipsys.soft.net via smap (4.0a) id xma026809; Thu, 4 Mar 99 14:08:34 +0530
Received: from bnr-2c51.wipsys.soft.net (R.R.SUBRAMANIAN [164.164.24.115]) by wslexch.wipsys.soft.net with SMTP (Microsoft Exchange Internet Mail Service Version 5.5.2232.9) id G2JHAVD0; Thu, 4 Mar 1999 14:03:30 +0530
X-Sender: rrsubram@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: Subramanian
Subject: [agathiyar] Pazham-O-Pazham
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 159

அகத்திய நண்பர்களே..!

சமீபத்தில் வலையில் கண்ட விஷயம் இது. இதில் கூறப்பட்டுள்ள பல பழங்களை நான்
கண்டதும் இல்லை ; விண்டதும் இல்லை .!

பலாப்பழமும் இருக்கு ; 'பலான' பழமும் இருக்கு. 'பழம்' போன்ற பலர் நிறைந்தஇவ்விணையத்தில்
கீழ்காணும் பழங்களைக் கண்டவர்கள், விண்டவர்கள், ருசித்தவர்கள்
கூறப்பட்டுள்ள விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்று எழுதவும்.

நன்றி..!

-------------------------------------------------------------
1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*
நறுவிலிப் பழத்தைத் தினசரியோஅல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல்
அற்றுப் போகும்.

2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*
காய்ச்சல் வந்தபின் நாக்கு ருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும்.அப்போது,
ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும்.
காய்ச்சல் விலகும்.

3. இளமை தரும் *தக்காளி*
இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம்செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும்
போக்கும்.

4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*
எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2நாளில்
பேதி நின்றுவிடும்,

5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*
இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப்போட்டுத் தேன்
கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*
கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டுவர விக்கல் வராது. இரைப்பை வலிமைபெறும்.

7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*
களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம்
குறையும்.

8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*
மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர,கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு
வராது.

9. வாய்வு க்கும் *நாரத்தம் பழம்*
நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்றுஉப்புசம் விலகும்.

10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*
கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*
கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக்
குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணைகலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது
தேய்த்துவர அவை மறையும்.

12. கார நோய்க்குத் *தூதுளம் பழம்*
தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். சுபம்
விலகும்.

13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*
பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள்வலிமை பெறும்.
அதிகம் சாப்பிட்டால் உஷ்ணம் ஆகும்.

14. பசியைத் துண்டும் *இலந்தைப் பழம்*
பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம்சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி
மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

15. தாது விருத்தி தரும் *திராட்சை*
உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன்
சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும்.தாது விருத்தி பெறும்.

16. *பப்பாளிப் பழம்*
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர,
வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமைசேர்க்கும்.

17. *வாழைப்பழம்*
மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழைமூளையின்
ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

18. *வில்வப் பழம்*
பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு
செயல்படும்.

19. *அரசம் பழம்*
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில்
அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

20. *சீமை அத்திப்பழம்*
மூட்டு வலியைப் போக்கி இரத்தச்சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக
உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிடமூட்டுவலி போகும்.
இரத்தச் சோகை விலகும்.

21. *பேரீச்சம் பழம்*
இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத்தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன்
சாப்பிடுங்கள்.

22. *தர்பூசணிப் பழம்*
கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழம் சிறிது
தேன்கலந்து சாப்பிடலாம்.

23. *முலாம் பழம்*
மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'வெயிட்' போட
இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

24. *விளாம்பழம்*
பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்
விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்துசாப்பிட, பித்தம்
தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

25. *அன்னாசிப் பழம்*
குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக்கரைத்துச்
சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப்பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர,
தொண்டைக்கட்டு ங்கும்.

பல்வேறு பழங்களைச் சாப்பிட்டே பலநோய்களிலிருந்து விடுபடலாம்.
-------------- http://www.intamm.com/mooligai/ -----------------------
(அட, பழம் மௌனத்தைக் கூட கலைக்கிறதே..! )


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com