From jayabarathi Thu Mar 4 01:09:36 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11066 invoked by uid 7770); 4 Mar 1999 09:08:47 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.findmail.com with SMTP; 4 Mar 1999 09:08:47 -0000
Received: from umlugghc ([202.188.69.148]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990304090826.AJJ18369@umlugghc>; Thu, 4 Mar 1999 17:08:26 +0800
Message-Id: <3.0.3.32.19990304164356.008c7930@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 04 Mar 1999 16:43:56 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: Subramanian
In-Reply-To: <199903040839.OAA26843@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Pazhamum Pinjum
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 160

At 02:09 PM 3/4/99 +0530, you wrote:
>அகத்திய நண்பர்களே..!
>
>சமீபத்தில் வலையில் கண்ட விஷயம் இது. இதில் கூறப்பட்டுள்ள பல பழங்களை நான்
>கண்டதும் இல்லை ; விண்டதும் இல்லை .!


அன்பர்களே,

"பழம்" என்றதும் நினைவுக்கு வந்தது.
பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலரைப் பற்றியது. பிறந்து
சில மாதங்களிலேயே கண்களை இழந்துவிட்டார். ஆனால்
மற்ற உணர்வுகள் கூர்மையாகிவிட்டன. தன் முதுகின்மீது
எழுத்துக்களை விரலால் எழுதச்செய்து,எழுத்துக்களின் வடிவங்களை
நன்கு அறிந்து, அதன்பின்னர் ஓலையில்எழுத்தாணியால் எழுதப்
பயின்றார். காதால் கேட்கும் எதனையும்அப்படியே நினைவில்
இருத்திக்கொள்ளும் ஆற்றலும் அவருக்கிருந்தது.
பிற்காலத்தில் அவர் ஒரு முறை ராமநாதபுரத்திற்கு, சேதுபதி
மன்னரின் அழைப்பின்பேரில் சென்றார்.ஒரு பிரபந்தத்தை அரங்கேற்றினார்.
அதற்காக சேதுபதி மன்னர் அவருக்குப்பொன்னாடை போர்த்தினார்.
அதைத் தன் கையால் தடவியும் நெருடியும்புலவர் பார்த்தார்.

பிறகு அரசரைப் பார்த்து,
"அரசே! அருமையான பொன்னாடை!'"
"ஆமாம். மதுரையில் நெய்தது."
"பட்டிலேயே ஜரிகை வேலை மிளிர்கிறது"
"ஆம். அதற்கு அரண்மனையிலிலிருந்தேபொன் கொடுத்தோம்".
"அழகிய சித்திரவேலையை உணரமுடிகிறது. மாம்பழ வடிவில்
அமைந்துள்ளன".
"சரியாகச் சொன்னீர்கள், புலவரே!உங்களுக்காகவே
உங்கள் பெயருக்கேற்றபடிக்கு செய்திருக்கிறோம்."
"மகிழ்ச்சி. பழம் தெரிகிறது!"
"ஆமாம்."
"சற்று சிறியவையாய் இருப்பவை காய்கள் போலும்?"
"அப்படித்தான், புலவரே!"
"இலைகளும் வளைந்து செல்கின்றன?"
"ஆமாம்."
"ஓரிடத்தில் சிறிது 'பிஞ்சும்' இருக்கிறது," என்று கூறி
புலவர் பொன்னாடையின் ஓரிடத்தில் நெருடிக்கொண்டிருந்த
தன் கையை நிறுத்தினார்.
அங்கே பார்த்த மன்னர் திடுக்கிட்டு, பிறகு அசடு வழிந்தார்.
அந்த இடத்தில் பிய்ந்திருந்தது.

அன்புடன்

ஜெயபாரதி
>
>பலாப்பழமும் இருக்கு ; 'பலான' பழமும் இருக்கு. 'பழம்' போன்ற பலர் நிறைந்தஇவ்விணையத்தில்
>கீழ்காணும் பழங்களைக் கண்டவர்கள்,விண்டவர்கள், ருசித்தவர்கள்
>கூறப்பட்டுள்ள விஷயம் எவ்வளவு தூரம் உண்மை என்று எழுதவும்.
>
>நன்றி..!
>
>-------------------------------------------------------------
>
> பல்வேறு பழங்களைச் சாப்பிட்டே பலநோய்களிலிருந்து விடுபடலாம்.
>-------------- http://www.intamm.com/mooligai/ -----------------------
>(அட, பழம் மௌனத்தைக் கூட கலைக்கிறதே..! )
>
=======================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com