From Krishnan Thu Mar 4 06:03:48 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29604 invoked by uid 7770); 4 Mar 1999 14:03:00 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by vault.findmail.com with SMTP; 4 Mar 1999 14:03:00 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id WAA24189; Thu, 4 Mar 1999 22:02:37 +0800 (SGT)
Received: from default (ppp115.dyn76.pacific.net.sg [210.24.76.115]) by pop1.pacific.net.sg with SMTP id WAA00707; Thu, 4 Mar 1999 22:02:35 +0800 (SGT)
Message-Id: <3.0.5.32.19990304215625.0079fbe0@...>
X-Sender: kisna@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Thu, 04 Mar 1999 21:56:25 +0800
To: Tamil-Hinduism@...
From: Krishnan
Cc: agathiyar@egroups.com, tamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] thayaa muula thanmam # 5
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 161




திருநாவுக்கரசர் காட்டும்
தயா மூலம் தருமம் # 5
**********************

சைவ சம்யச் சான்றோராகிய நாவுக்கரசர் கண்ட தயா மூல தன்மம் என்பது எல்லாஉயிர்களிடத்தும்
கருணை செலுத்துவது. அருள் தோன்றுவதற்குஅடிப்படையான இறைவனுடைய திருவருளையும்
இணைத்துப் பேசும். மன்னுயிர் அனைத்தையும் தன் உயிராகக் காண்கின்ற மாண்புக்குமூலமாக
இருப்பது இறைவனது திருவருளே என்று கருதும் மாண்பினர் சான்றோர்.

எனவேதான் தாயுமானோர் :
" எவ் உயிர் என் உயிர்போல் எண்ணி இரங்கவும்
தெய்வ அருட் கருணை செய்யாய் பராப்ரமே ..." என்று வேண்டுகிறார்,
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய இராமலிங்க அடிகளாகும். " அருட்பெருஞ் சோதி
தனிபெருங்கருணை.." எனக் கொள்கை முழக்கஞ் செய்தது இதன் விளைவினால் ஏற்பட்டஒன்றே
ஆகும்.
இறைவனின் திருவருட் பயன்தான் எல்லாஉயிர்களிடத்திலும் பெருங்கருணை செலுத்த
வைக்கும் இயல்பினது.இதனை விளக்குவதுதான் தயா மூல தன்மம் என்னும் தத்துவம். இதனைத்தான்
சிவபெருமான் நாவுக்கரசருக்கு நல்கிஅருளினார். இவ்வழியன்றி கொல்லாமையும் மறைந்தொழுகுவது
மனிதப் பண்பாகும்.
தயா மூல தன்மம் என்னும் தொடரில் தயா" சுட்டும் திருவருள் " எனக் காட்டுகிறது.
இறைவன் படைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் நிகழ்த்துவதற்கு அடிப்படைக்
காரணம் அவன் ஆன்மாக்கள் பால் கொண்டபெருங்கருணை என்னும் சித்தாந்தக் கோட்பாட்டையும்
இத்தொடருடன் இணைத்துக் காண இயலும். "அருளது சக்தியாலும் " என்றும் சிவஞானசித்தியார்
தொடருடன் இணைத்துப் பார்க்கும்போது உலக தோற்றத்துக்கு அடிப்படையே ஆண்டவனின்
தயா - அருள்தான் என்பதையும் உணரலாம்.

தொடரும்....





------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com