From jayabarathi Mon Mar 22 05:06:22 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 21666 invoked by uid 7770); 22 Mar 1999 13:06:19 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 22 Mar 1999 13:06:19 -0000
Received: from umlugghc ([202.188.69.150]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990322130613.BGTL7770@umlugghc>; Mon, 22 Mar 1999 21:06:13 +0800
Message-Id: <3.0.3.32.19990319024755.007ca4d0@...>
X-Sender: jaybee@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 19 Mar 1999 02:47:55 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Mani M. Manivannan" , "N. Swaminathan" , Ram Ramachandran
In-Reply-To: <005d01be7314$e3244de0$74ae5ccf@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Pazhaiyarai Monuments
Content-Type: text/enriched; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 182

At 01:01 PM 3/20/99 -0800, you wrote:

>தஞ்சை மண்ணிலே ஓராயிரம் ஆயிரம்ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் கட்டிய

>கோவில்கள், தமிழ் நாட்டின் ஒப்பற்றபண்பாட்டுச் சின்னங்களாக இன்றும்

>இருக்கின்றன. ஆனால், இந்தப் பழையகோவில்களில் பெரும்பாலானவை

>நலிந்து சிதைந்து கொண்டிருக்கின்றன. பழையாறையில் இருக்கும் கோவில்களைப்

>பற்றி ராஃபாயில் இந்து நாளேட்டில் எழுதிய கட்டுரையின் முகவரி:

>

><

>

>அன்புடன்,

>

>மணி மு. மணிவண்ணன்

>பிரிமான்ட், கலி., அ.கூ.நா.



அன்புள்ள நண்பர்களே,


right,right,right,right மணிவண்ணன்அனுப்பிய மடலைப்
பற்றி சில கருத்துக்கள் கூறத்தான் வேண்டும்.

அதற்கு முன்னர், பழையாறையைப் பற்றிசிலவிபரங்களைச் சொன்னால் நல்லது என்று நினைத்தேன்.
ஏனெனில் அந்தப் பக்கத்து ஆட்கள் நம்மிடையே இருக்கிறார்களே. மேலும் பழையாறையைப் பற்றிய வரலாறு
கொஞ்சம் வித்தியாசமானதுதான்.

சொல்கிறேன்.

இப்போது மிகச்சிறிய சிற்றூராக"பழையாறு" என்று அழைக்கப்பட்டுக்

கொண்டிருக்கும் அந்த ஊர் இருக்கிறதே...........

நாம் ஆரம்பத்தின் தொடக்கத்திற்கேசென்றுவிடுவோம்.

சோழர்களுக்குத் தலைநகராக வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு

நகரங்கள் இருந்தன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சங்ககாலத்தில், திருச்சிக்கு அருகில் இருக்கும் உறையூர் தலைநகராக
இருந்தது. திருவாரூரும், காவிரிப்

பூம்பட்டினமும் துணைக்கோநகர்களாகவிளங்கியிருக்கின்றன.

பின்னர் களப்பிரர், பல்லவர் ஆட்சியின் கீழ் தமிழகத்தின் வடபகுதியின்பெரும்பான்மை வந்தது.
அப்போது அவர்களின்கீழ் சோழர்கள்சிற்றரசர்களாக விளங்கினர். தஞ்சாவூர் முத்தரையர்களின்
தலைநகராக இருந்தது.

அப்போது பழையாறை சோழர்களின்கோநகராக விளங்கியது.

அப்பரடிகள் 620கி.பி. சமயத்தில் இருந்தவர். அவர் பழையாறைக்கு

வந்தார். அங்கு "பழையாறை வடதளி" என்னும் சிவாலயம் இருந்தது. ஆனால்

அதில் உள்ள சிவலிங்கத்தை சமணர்கள்மறைத்துவைத்திருந்தனர். இது

அப்பருடைய காலத்துக்கும் முன்னாலேயேபல்லாண்டுகளுக்கு முன்னரேயே

நடந்திருக்கவேண்டும்.

அக்கோயிலை மீட்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அப்பரடிகள்

உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் இருந்தார். அதை அறிந்த சோழமன்னன்

அப்பரின் நோக்கப்படி சிவாலயத்தைமீட்டு, சிவலிங்கத்தை மீண்டும் தோன்று

மாறு செய்து, பல திருப்பணிகளையும் செய்தான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியதிருஞானசம்பந்தரைப்

பாண்டிய நாட்டுக்கு வரவழைத்த பாண்டியப்பேரரசி மங்கையர்க்கரசி ஒரு

சோழ இளவரசிதான். ("மங்கையர்க்கரசி, வளவர்கோன் பாவை").

ஆக, அவர்களுக்கெல்லாம் பல காலத்துக்குமுன்னரேயே பழையாறை

இருந்திருக்கிறது.


இன்னும் இருக்கிறது...............


அன்புள்ள


ஜெயபாரதி


=======================================