From jayabarathi Mon Mar 22 14:58:12 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 18523 invoked by uid 7770); 22 Mar 1999 22:58:09 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 22 Mar 1999 22:58:09 -0000
Received: from umlugghc ([202.188.69.13]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990323150046.FSXE6126@umlugghc>; Tue, 23 Mar 1999 07:00:46 -0800
Message-Id: <3.0.3.32.19990319033326.007f7520@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 19 Mar 1999 03:33:26 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Mani M. Manivannan"
In-Reply-To: <005d01be7314$e3244de0$74ae5ccf@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Pazhaiyarai #2
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 183


அன்புள்ள நண்பர்களுக்கு,

சங்க காலம் சுமார் 300கி.பி.யில் முடிந்தது என்று கொண்டோமானால், அதன்
பின்னர் 846கி.பி. வரை மிக நீண்ட இடைவெளி. இக்காலத்தில் சோழர்களில் சிலரைப்
பற்றி நேர்முகமில்லாக்குறிப்புகள்கிடைக்கின்றனவேயொழிய பாண்டியர்களைப்
போன்று வரலாற்றுப்பாத்திரங்களை நாம் சந்திப்பதில்லை. மங்கையர்க்கரசிபோன்ற
அத்திப்பூக்கள் ஒன்றிரண்டு. அவ்வளவே.
பல்லவர்கள் பேரரசை வைத்துக்கொண்டுசிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.
சாளுக்கியர்-திரும்பத் திரும்பப்படையெடுத்தனர்; அவர்களைத் தள்ளிவிட்டு வந்த
இரட்டர்; தெற்கே பாண்டியர்கள். இந்தலட்சணத்தில் ஆட்சிப்போட்டிகள் வேறு.
பல்லவர்களின் கடைசிக்காலத்தில் இருந்த பாண்டியன் ஸ்ரீமாறஸ்ரீவல்லபன்
மூன்று முறை பல்லவர்களுடன் போரிட்டார்.பின்னர் அடுத்த தலைமுறையிலும்
இரு போர்கள். இவற்றால் பாண்டிய பல்லவநாட்டின் மக்கள்தொகை, வளம்,
பொருளாதாரம் பெருமளவிற்கு வீழ்ச்சியுற்றது.
இப்போர்களில் பல்லவர்களுக்கு சிற்றரசர்களின் துணை வேண்டியிருந்தது.
அந்த உதவியை பழையாறைச் சோழர்கள்கொடுத்தனர்.
ஆனால் அந்த உதவிக்கு ஒரு பெரும்விலையைப் பல்லவர்கள் கொடுக்க
வேண்டியதிருந்தது.
விஜயாலயச்சோழர் பலபோர்களில்வெறியுடன் பங்கு கொண்டவர்; அவர்
உடலில் இருபத்து நான்கு விழுப்புண்கள்இருந்தனவாம். அக்காலத்தில் ப்லாஸ்ட்டிக்
ஸர்ஜரி இருந்தது; ட்ராமா ட்ரீட்மெண்ட்இருந்தது. ஆகவே விஜயாலயர் பிழைத்ததோடு
அல்லாமல் ஒரு பேரரசைக் கவிழ்க்கவும்செய்துவிட்டார்.
தட்டிக்கேட்க ஆளில்லை; ஆகவே விஜயாலயர் சண்டப்பிரசண்டர் ஆனார்.
முதலில் தஞ்சாபுரியிலிருந்து முத்தரையர்களை விரட்டிவிட்டார். தஞ்சாபுரியை மேலும்
பலப்படுத்தி அதனை கோநகராக்கிக்கொண்டார். பழையாறை உறையூரைவிட அது
பல்லவர்கள், இரட்டர் ஆகியோரிடமிருந்து இன்னும் பாதுகாப்பானது. நடுவில்
பல ஆறுகளைக் கடக்கவேண்டுமே? அதிலிருந்துதான் தஞ்சைக்கும் சோழர்களுக்கும்
தொடர்பு ஏற்பட்டது. அதை மேலும்விரிவாக்கிக்கொண்டார்.
இருப்பினும் பழையாறை ஒரு Royal City என்னும்சிறப்புத்தகுதியுடன் அரசு
நகராகவேயிருந்தது. இதே தகுதி அதற்குஇன்னும் பல காலத்துக்குத் தொடர்ந்து
இருந்தது. அரசகுடும்பத்தின் முக்கியமானவர்கள் அங்கும் இருந்தனர்.
"ஆயிரத்தளி" என்ற பெயரில் ஒரு பெரும்அரண்மனை இருந்தது.
ஆயிரத்தளி என்றால் ஆயிரம் கோயில்கள் என்று பொருள். கோயில் என்பதற்குஅரண்மனை என்றும் அர்த்தம்
உண்டு அல்லவா? "City of Ten Thousand Buddhas"
என்று லாஸ் ஏஞ்சலிஸை அழைப்பதுபோல்இதையும் "City of Thousand Palaces"
என்று அழைத்திருப்பார்கள். "மிகைப்படக்கூறல்" என்பதுவும் அணியிலக்கணத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்குதானே.
ஜாவாவில் உள்ள லோரா ஜோங்க்ராங்கையும் ஆயிரம் கோயில்கள் என்று
அழைப்பார்கள். ஆனால் அது வேறு கதை.சுவாமிநாதன் மாதிரி கவிஞர்களுக்கு
அது பிடிக்கும்(பொடி).

இன்னும் இருக்கிறது.........

அன்புடன்

ஜெயபாரதி

===========================================













------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com