From Mon Mar 22 23:20:22 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 10960 invoked by uid 7770); 23 Mar 1999 07:20:18 -0000
Received: from dfw-ix2.ix.netcom.com (206.214.98.2) by vault.egroups.com with SMTP; 23 Mar 1999 07:20:18 -0000
Received: (from smap@localhost) by dfw-ix2.ix.netcom.com (8.8.4/8.8.4) id BAA10332 for ; Tue, 23 Mar 1999 01:20:12 -0600 (CST)
Received: from sji-ca5-136.ix.netcom.com(209.109.234.136) by dfw-ix2.ix.netcom.com via smap (V1.3) id rma010308; Tue Mar 23 01:19:56 1999
Message-ID: <000901be74fd$2092ebc0$88ea6dd1@...>
From: "Mani M. Manivannan"
To:
Date: Mon, 22 Mar 1999 23:16:51 -0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Pazhaiyarai#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 189

> ராஜராஜனின் அக்கா குந்தவைப்பிராட்டியார் அங்குதான் இருந்தார்.

ராஜராஜன் அருள்மொழிவர்மனின் அக்கையார் பெயர் குந்தவை, அவரது
பெண்ணின் பெயர் குந்தவி. இந்தப் பெயர்களின் பொருள் என்ன? இந்தப்
பெயர்கள் இவர்களிருவரைத் தவிர வேறு யாருக்காவது வழங்கப்பட்டிருக்கின்றனவா?

>("பொன்னியின் செல்வன்" கதையை ஐந்து பாகங்களாக பேராசிரியர் கல்கி எழுதினார்.
>அவர் அந்தக் கதையை முடித்திருந்த விதம் அவ்வளவாக சிறப்பாக இல்லை என்று தோன்றும்.

பேராசிரியர் கல்கி ஐந்தாம் பாகத்தை முடிக்கும் முன்னரே மறைந்து விட்டார்.
அவரது குறிப்புகளிலிருந்து வேறு யாரோதான் ஐந்தாம் பாகத்தை முடித்தார்கள்.
அவர் ஐந்து பாகத்தோடு கதையை முடித்திருப்பார் என்றும் எண்ண முடியவில்லை.
நிறைய சிக்கல்களை முடிக்காமலே விட்டு விட்டார் என்று நினைவு.

>ஆசிரியர்
>விக்ரமன் பொன்னியின் செல்வனுக்கு ஒரு sequelae - அனுபந்தத்
>தொடரை எழுதினார். அக்கதையின் நாயகி குந்தவை. நாவலின் பெயரும்
>"நந்திபுரத்து நாயகி").

படித்திருக்கிறேன். விக்கிரமனுக்கும் நல்ல எழுத்து வளம் உண்டு. ஒரு காலத்தில்
எல்லோருமே பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து வரலாற்றுப் புதினங்களை
எழுதினார்கள். ஒரு விதத்தில் சாண்டில்யனின் கடல்புறா, கோவி. மணிசேகரனின்
பீலி வளை, போன்ற புதினங்களுக்கும் பேரா. கல்கி தான் தந்தையாகக் கருதலாம்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com