From jayabarathi Tue Mar 23 15:02:25 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22302 invoked by uid 7770); 23 Mar 1999 23:00:59 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 23 Mar 1999 23:00:59 -0000
Received: from umlugghc ([202.188.69.244]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990324150336.HUWB6126@umlugghc>; Wed, 24 Mar 1999 07:03:36 -0800
Message-Id: <3.0.3.32.19990323170046.007ff310@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 23 Mar 1999 17:00:46 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Mani M. Manivannan"
In-Reply-To: <000901be74fd$2092ebc0$88ea6dd1@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Manivannan's questions-Palzhaiyaarai#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 191

At 11:16 PM 3/22/99 -0800, you wrote:
>> ராஜராஜனின் அக்கா குந்தவைப்பிராட்டியார் அங்குதான் இருந்தார்.
>
>ராஜராஜன் அருள்மொழிவர்மனின் அக்கையார் பெயர் குந்தவை, அவரது
>பெண்ணின் பெயர் குந்தவி. இந்தப் பெயர்களின் பொருள் என்ன? இந்தப்
>பெயர்கள் இவர்களிருவரைத் தவிர வேறுயாருக்காவது வழங்கப்பட்டிருக்கின்றனவா?

அன்புள்ள மணிவண்ணன்,

சோழர்களின் குலதேவி, நிசும்பசூதினி என்னும் காளி.
பட்டீச்சரத்து பதினெண்கை துர்க்கையையும் வணங்கியிருக்கிறார்கள்.
குந்தம் என்பது அவள் ஏந்திய படைக்கலங்களில் ஒன்று. ஆகவே
கொற்றவையின் பெயராக இருக்கக்கூடும்.
அக்காலத்தில் சோழர்கள் நிறைய பிற அரசமரபு மணவழித்
தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். (Inter-Dynastic Marriage
Alliance என்பதனை மொழிமாற்றம் செய்துள்ளேன். இன்னும்
பொருத்தமான சொற்கள் இருப்பின் படிப்பவர்கள் முற்படுத்துங்கள்.
ஏற்கனவே சில சில சொற்களைப் புகுத்தியுள்ளேன். இன்னும் வரும்.
போகிறபோக்கில் திருத்திக்கொண்டே போகலாம்).
வேற்று மரபுப்பெயர்களும் உட்புகுந்தது உண்டு. குந்தவையின்
தந்தைவழிப்பாட்டி நுளம்பர் மரபு இளவரசி. முப்பாட்டி இராஷ்ட்டிரகூட
இளவரசி. இவர்களெல்லாம் கர்நாடக/தெலுங்க மரபினர்.
பெரிய குந்தவையின் பேரில் இருந்தஅன்பால் ராஜராஜன்
தன்னுடைய மகளுக்கும் குந்தவை என்றேபெயரிட்டார். இவர்கள் இருவரைத்
தவிர வேறு யாருக்கும் அப்பெயர்வைத்ததாகத்தெரியவில்லை.
இளைய குந்தவை கீழைச்சாளுக்கியமரபில் வாழ்க்கைப்பட்டவள்.
அவளுடைய சகோதரன் மகள் அம்மங்காதேவி; அம்மங்காவின் சகோதரன்
மகள் மதுராந்தகி அனைவருமே கீழைச்சாளுக்கியர்களின் மாட்டுப்பெண்கள்.
இப்படி பல தலைமுறைகளுக்கு அவர்கள்வேற்றுநாட்டில் மணத்தொடர்பு
வைத்துக்கொண்டு அதன்மூலம் பிற மரபுகலப்புடன் திகழ்ந்துள்ளார்கள்.
வேற்றுமரபின் பெயர்களையும் அவர்கள்உறவின் பொருட்டும் உரிமையின்
பொருட்டும் வைத்துக்கொண்டார்கள். ஆகவே குந்தவை என்பது வேற்று மரபுப்பெயராகவும் இருக்கலாம்.

>
>>("பொன்னியின் செல்வன்" கதையை ஐந்துபாகங்களாக பேராசிரியர் கல்கிஎழுதினார்.
>>அவர் அந்தக் கதையை முடித்திருந்த விதம் அவ்வளவாக சிறப்பாக இல்லை என்றுதோன்றும்.
>
>பேராசிரியர் கல்கி ஐந்தாம் பாகத்தை முடிக்கும் முன்னரே மறைந்து விட்டார்.
>அவரது குறிப்புகளிலிருந்து வேறு யாரோதான் ஐந்தாம் பாகத்தை முடித்தார்கள்.
>அவர் ஐந்து பாகத்தோடு கதையை முடித்திருப்பார் என்றும் எண்ண முடியவில்லை.
>நிறைய சிக்கல்களை முடிக்காமலே விட்டு விட்டார் என்று நினைவு.

கல்கியேதான் ஐந்து பாகங்களையும் எழுதி முடித்தார்.
ஆனால் நான்காம் பாகத்துக்கு மேல் கதைஇடற ஆரம்பத்துவிடுகிறது.
ஐந்தாம் பாகம் எழுதிக்கொண்டிருக்கும்போது, ஒரு நாள், கல்கி வழக்கம்போல்
காலையில் சிரசாசனம் செய்துகொண்டிருந்தாராம். திடீரென்று பாதியிலேயேஆசனத்திலிருந்து குதித்து
வேகமாக வந்தாராம். அப்போது சொன்னாராம்,
"நான் கண்டன் அமுதனை உத்தமச்சோழனாக ஆக்கப்போகிறேன்" என்றாராம்.

கண்டன் அமுதன் என்பவன் தஞ்சை தளிக்குளத்தார் என்னும் கோயிலில்
பூஜைக்கு மலர் பறிப்பவன். தேவாரப்பாடல்களை இனிமையாகப் பாடுவான்.
அதுவரை உத்தமச்சோழனாக பழையாறைஅரண்மனையில் வளர்ந்து வந்தவனை
காணமற்போன பாண்டிய இளவரசனாக்கிவிடுவார். அதுமட்டுமல்ல. சோழர்களுக்குஉறுதுணையாக இருந்துவந்த
பெரிய பழுவேட்ட அரையரின்
இளமனைவியையும் அவனுடைய இரட்டைசகோதரியாக்கி பாண்டிய
இளவரசியாக்கி விடுவார். இது ஒரு பெரிய குளறுபடி. ராஜராஜனின் அண்ணனை யார் கொன்றது என்பதுவும்
குளறுபடி.
இதுதான் நடந்தது.
பொன்னியின் செல்வனுக்குப் பின்னர் அவர் "அமரதாரா" என்னும்
சமூகப் புதினத்தை எழுதி, அது முடியுமுன்னரேயே அவர் இறந்துவிட்டார்.
அவர் விட்டுச்சென்ற குறிப்புகளை வைத்துஅவருடைய மகள் ஆனந்தி
அமரதாராவை எழுதிமுடித்தார்.

>
>>ஆசிரியர்
>>விக்ரமன் பொன்னியின் செல்வனுக்கு ஒரு sequelae - அனுபந்தத்
>>தொடரை எழுதினார். அக்கதையின் நாயகி குந்தவை. நாவலின் பெயரும்
>>"நந்திபுரத்து நாயகி").
>
>படித்திருக்கிறேன். விக்கிரமனுக்கும்நல்ல எழுத்து வளம் உண்டு.

"நந்திபுரத்து நாயகி"யை ஏன் எழுதத்தோன்றியது என்பதற்கு
விக்ரமனே அந்நூலின் முன்னுரையில்தந்திருக்கிறார்.

"பொன்னியின் செல்வன்" வரலாற்று நவீனத்தைப் படித்தவர்கள் ஆசிரியரின்
கற்பனையில், கதைகூறும் திறனில் - சரித்திர ஆதாரங்களைக்கொண்டு,
அந்தந்த இடங்களிலேயே தாம் நேரிடையே சென்று பாத்திரங்களைச்
சந்திப்பது போன்ற கண்கூடான கதைகூறும்திறமையில் மனத்தைப் பறி
கொடுத்திருக்கின்றனர். கிட்டத்தட்டமூன்றாண்டுகள் தொடர்ந்து தொடர்
கதையாக வெளிவந்த அந்தக்கதையை,மாபெரும் நாவலான "பொன்னியின்
செல்வனை" ஒரு சமயம் ஒரு இடத்தோடு முடிவுக்குக் கொண்டுவந்தார்.
அவர் கதையை முடித்ததில் பலருடைய ஆவல் தணியவில்லை. இன்பக்கனவில் மூழ்கியிருந்தவர்களுக்குத்
திடீரென்று கனவு கலைந்து
விட்டால்? அந்த நிலைதான். ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதினர்..........
சிலர் கதையை முடித்தவிதத்தைக்குறைகூறியிருந்தார்கள். சட்டென்று
முடிந்துவிட்டதற்காகவும் பலகதாபாத்திரங்கள் பின்னால் என்ன ஆனார்கள்
என்று சொல்லாமலேயே கதையை முடித்துவிட்டதற்காகவும் வருந்தி
யிருந்தார்கள் ............"
"பொன்னியின் செல்வன் முடிந்தவுடனேயே அதற்குப் பிறகு வரும்
சம்பவங்களைக்கொண்டு வரலாற்றுக்கதைஒன்றை எழுதவேண்டும் என் மனத்திலெழுந்தது. ............"
(பொன்னியின் செல்வன்) கதை முடிந்து சில வாரங்கள் கழித்து
முடிவுரை எழுதினார் பேராசிரியர் கல்கி. அதில் அவர் கடைசிப்பாராவில்
குறிப்பிட்டிருந்தவை என் உணர்ச்சியையும் ஊட்டத்தையும் தூண்டிவிட்டன.
"இந்தக் கதையின் ஆசிரியரைக்காட்டிலும் அறிவிலும் அராய்ச்சியிலும் ஆற்றலிலும் மிக்கவர்கள்
வருங்காலத்தில் சோழர் சரித்திரத்தை அடிப்படையாகக்கொண்ட பல மகோன்னதமான நவீனங்களை எழுதித்
தமிழகத்துக்குப் படைப்பார்கள் என்றுநம்புகிறேன்". என்று கூறி முடித்தி
ருந்தார்.
அவர் எழுதிய...தகுதி எனக்கிருக்கிறதா என்பது வேறு விஷயம்.
தமிழகச்சரித்திரத்தில் எனக்கு அடங்க ஆசையுண்டு......."

ஆகவே விக்கிரமன் குறிப்பிட்ட குறிக்கோளுடன் தடம் மாறாமல்
கதையை எழுதியுள்ளார். உண்மையிலேயேஇது ஒரு sequelaeதான்.
(இத எழுதிக்கொண்டிருக்கும்போது மலேசிய வானொலியில்," பழகும்
தமிழே! பார்த்திபன் மகனே! அழகியமேனி சுகமா?" என்ற பாட்டு ஒலிக்கிறது.
"பார்த்திபன் கனவு" அல்லவா அது! அதைஎழுதியவர் கல்கியல்லவா!
மனைவியை அழைத்து பாட்டையும், நான்எழுதிக்கொண்டிருப்பதையும்
காட்டுகிறேன். கல்கி தோன்றாத்துணையாக அருகிருந்து, நாம் நிழல்வெளியில்
அவரைப் பற்றி உரையாடிக்கொண்டிருப்பதைத் தானும் பார்த்துக்
கொண்டிருப்பதாக அடையாளம் காட்டுகிறார்போலும்).


ஒரு காலத்தில்
>எல்லோருமே பொன்னியின் செல்வனைத்தொடர்ந்து வரலாற்றுப் புதினங்களை
>எழுதினார்கள். ஒரு விதத்தில் சாண்டில்யனின் கடல்புறா,

சாண்டில்யனின் உத்திகளும் கதையோட்டமும் முற்றிலும்
வேறானவை. கல்கியின் கதைகளில் குறைவான வரலாற்று நிகழ்வுகளை
வைத்து கதையைப்பின்னியிருப்பார். ஆனால் சாண்டில்யனோ கதையைப்
பற்றி தீர்க்கமாக ஆராய்ந்திருப்பார்.அவருடைய மகன் Prof.சடகோபன்
வைஷ்ணவா கல்லூரியில் வரலாற்றுப்பேராசிரியர். வரலாற்று ஆய்வுகளை
அவரேகூட நிறையச்செய்து, தன் தந்தையிடம் கொடுப்பார். "யவனராணி"
யின் கதையோட்டத்தில்கூட சடகோபனின் பங்கு உண்டு. இதை அவரே
சொல்லியிருக்கிறார். மதுரைக்கல்லூரியின் புகுமுகவகுப்பொன்றின்
மாணவர்கள் சிலரிடம் கூறிக்கொண்டிருந்தார். அதை அவ்வகுப்பில் அவருடைய
favourite மாணவன் ஒருவன் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுடைய
பதிவு எண் 418 (நல்லவேளை 420 இல்லை).
சாண்டில்யனின் சிறந்த படைப்பு "கடல்புறா"; பின்னர் "யவனராணி"
"கன்னிமாடமு"ம் அதனை ஒட்டிவரும்.சாம்பிராணிநாட்டு மன்னன் இலி ஆசு,
சீனக்கொள்ளைக்காரன் அகூதா போன்றபாத்திரங்கள்கூட நினைவில்
இடம் பிடித்துவிடுகிறார்கள்.


> கோவி. மணிசேகரனின்
>பீலி வளை, போன்ற புதினங்களுக்கும்

கோவி. மணிசேகரனின் நாவல்கள்உண்மையிலேயே சரித்திர
நாவல்கள் இல்லை. வரலாற்றுப்பெயர்கள்,சில சம்பவங்கள் கொண்ட
கதைகள். சை.ஃபை. என்ற பெயரில் சிலர் எழுதுவார்கள். அறிவியல் கதை
என்பார்கள். ஆனால் அதில் கதாபாத்திரங்களாக கணினிகள், அண்ட்ராய்டுகள்
வரும். மனிதர்கள் பேசும் வசனங்களை அவை பேசும். நிகழ்ச்சிகளும்
fantasy ஆக இருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் சை. ஃபை. என்று
சொல்லமுடியுமா? அதுபோலத்தான். Historicityஎன்பது வரலாற்று நவீனங்
களுக்கு அவசியமான முக்கிய கூறு. அது இல்லாமல் வரலாற்று நவீனம்
கிடையாது. கோவி.மணிசேகரனிடம் அது அறவே கிடையாது. பின்னே
எப்படி ராஜராஜன் பரிசுபோன்ற சிறப்புமிக்க பெரும்பரிசுகள் அடிக்கடி
அவருக்குகிடைக்கின்றன? அந்த சித்துவேலைகளின் ரகசியம் தெரிந்தது
தானே!

ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்ச்சியையும் அதில் சம்பந்தப்பட்ட
வரலாற்றுநாயகர்களையும் வைத்துக்கொண்டு நம் இஷ்டத்துக்கு
வரலாற்று நவீனம் எழுதினால் எப்படிஇருக்கும் என்று ஓர் உதாரணத்தை ஒரு முறைநா.
பார்த்தசாரதியிடம் ஆத்திரமாக ஆதங்கத்துடன் கூறிக்
கொண்டிருந்தேன். அதை அவர் வெகுவாகரசித்தார்.
அது என்ன நிகழ்ச்சி? அது என்ன கதை?

அன்புடன்

ஜெயபாரதி

பேரா. கல்கி தான் தந்தையாகக் கருதலாம்.
>
>அன்புடன்,
>
>மணி மு. மணிவண்ணன்
>பிரிமான்ட், கலி., அ.கூ.நா.
=====================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com