From jayabarathi Tue Mar 23 15:08:35 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26406 invoked by uid 7770); 23 Mar 1999 23:08:30 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 23 Mar 1999 23:08:30 -0000
Received: from umlugghc ([202.188.69.244]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990324151108.HUXT6126@umlugghc>; Wed, 24 Mar 1999 07:11:08 -0800
Message-Id: <3.0.3.32.19990323223454.0080c1d0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 23 Mar 1999 22:34:54 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Subramanian"
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Murugan
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 192

>From: "Subramanian"
>To: jaybee@...
>Subject: Murugan

அன்பர்களே,

சுமனிடமிருந்து பெற்ற மடலை அவர்கேட்டுக்கொண்டபடி
முற்படுத்தியுள்ளேன்.

அன்புடன்

ஜெயபாரதி

-------------------------Forwarded---------------------
>Date: Tue, 23 Mar 1999 03:01:27 PST
>------------ Forward from here -------
>தென்னிந்தியாவில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்களை
> தன் பக்கம் வசீகரித்துள்ள கடவுள் முருகப் பெருமான். ஆறுபடை வீடுகள் மூலம்
> வடமூலை திருத்தணி முதல் தென்மூலை திருச்செந்தூர் வரை ஒவ்வோர் ஆண்டும் தைப்
> பூசத்தன்று முருகனைத் தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் சாரி, சாரியாக
> அணிவகுத்துச் செல்கின்றார்கள். மேலும், குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன்
> இருக்கும் இடமாகப் பாவிக்கப்படுகிறது.
>
> இந்த முருகன் ஆதிமுதல் தமிழ்க்கடவுள் என்று வழிபடப்பட்டு வருகிறார்.அதாவது
> ''தமிழ் சமுதாயம் முழுவதும் ஒரே முகமாக ஏற்று, தொன்றுதொட்டு வழிபட்டு வந்த
>ஒரே
> கடவுள் முருகன்" என்று கூறுகிறார் பேராசிரியர் மருதமுத்து.
>
> ''வைதீகம் வலுப் பெற்றிராதபண்டைத் தமிழகத்தில் கடவுள் என்றால் அது
> முதன்மையாக முருகக் கடவுளைக்குறிப்பதாக இருந்து வந்தது. சிவனும்(உருத்திரன்)
> கிருஷ்ணனும் (விஷ்ணு) வடக்கிலிருந்து வருமுன், முருகன் இந்த மண்ணில் வெகுகாலம்
> வித்தாகக் கிடந்து முளைவிட்டு வளர்ந்திருந்தான்" என்று அவர் மேலும்கூறுகிறார்.
>
> தமிழ் மண்ணில் முருகர் வழிபாடு பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் சமூக
> அறிவிப்பாளர் பேராசிரியர் மருதமுத்து, தமிழகத்தில் அனைத்துஊர்களிலும்
>நடைபெறும்
> விழாக்களின் நாயகனே முருகக் கடவுள் தான் என்பதை புறநாநூறு, அகநானூறு,
> பரிபாடல்கள் மூலம் நிருபிக்கிறார்.
>
> சங்ககாலத் தமிழ் சமுதாயத்தில் சாதி வேறுபாடு அதிகம் பாராட்டப்படவில்லை
>என்றும்,
> முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என அனைத்து தினைப்புலன்களிலும் ஏகமாக
> முருகர் வழிபடப்பட்டார் என்றும் பேராசிரியர் மருதமுத்து வாதிடுகிறார்.
>
> பின்வந்த சமூகத்தில்தான் முருகன் சிவனின் மகனாகவும், திருமாலின்(விஷ்ணு) ஓர்
> அங்கமாகவும் ஏற்கப்பட்டார் என்றும் கூறுகிறார்.
>
> முருகன் வழிபாடுபற்றிய கருத்தரங்கு ஒன்றும்
>ஆசியவியல்
> நிறுவனம் சார்பில் சென்னையில் நடத்தப்பட்டது.
>இதில்
> தமிழ்நாட்டில் தொன்று தொட்டு முருகன் வழிபாடு
>இருந்து
> வருவது பற்றி ஆய்வுக் கட்டுரைகள்
>சமர்பிக்கப்பட்டன.
>
> மேலும், தமிழ்நாட்டில் உள்ள மிகவும் புராதனமான
>முருகன்
> சிலைகள் பற்றியதகவல்களும் வெளியிடப்பட்டன.
>
> 'சிந்து சமவெளிகால' சின்னங்களில்,
>எழுத்துகளில் முருக
> வழிபாடு குறித்தும், அவர் ''மலைக் கடவுள்"
>என்றும்,
> ''இளைய" வீரன்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
>என்ற
> கருத்தில் பிரபலஆய்வாளர்கள் ஐராவதம்
>மகாதேவன்,
> பூர்ணசந்திர ஜீவா, அஸ்கோபர் போலா,
>பவுன்துரை
> ஆகியோர் தெரிவித்தனர். இச் செய்தி தமிழர்களின்- திராவிடர்களின்
>தொன்மை
> கலாசாரம் என புகழப்படும்'சிந்துவெளி' நாகரிகம் குறித்த விரிவான,
>செழுமையான
> ஆய்வுகளுக்கு வித்திட்டுள்ளது.
>
> அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கீழப் பெரும்பாக்கத்தில் கிடைத்தஅரிய
>முருகன்
> சிலை பற்றியது.
>
> அச்சிலைதான் இதுவரை கிடைத்த முருகன் சிலைகளில் 'முதன்மையானது'என்று
> கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
>
> அது குறித்த விளக்கம் :
>
> முருகனைப் பற்றிய முற்காலக் கல்வெட்டுகளில் முதலாவது என்று கூறலாம்
>(கி.பி.
> 9-ஆம் நூற்றாண்டு)
> விழுப்புரம் கீழப் பெரும்பாக்கம் கிராமத்தின் தற்கால அய்யப்பன்
>கோயிலின்
> வெளிப்புறத்தில் மூதேவிசிலை, சிவலிங்கம் ஆகியவற்றினூடேஇந்த
>முருகன்
> சிலை இருந்தது.
> முழுவதும் சிலையாக இல்லாமல் பலகைக் கல்லின் முன்புறத்தில் மட்டும்
> முருகனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
> ஆகமங்கள் மற்றும் செய்யுள்கள் தெரிவித்த முருகனுக்குரிய உருவங்கள்
> அனைத்தும் இதில் பொருந்தியமையால் 'முருகன்' எனத் தீர்மானிக்கப்பட்டது.
>
> தாமரை மலர் மேல் அமர்ந்து, வலது காலை மடித்தும் இடது காலை
> தொங்கவிட்டும் அமைந்துள்ளது இம் முருகன் சிலை.
> இம் முருகன் வீரமுடையவன்என்பதை பறைசாற்றும் வகையில் மார்பில் வீரச்
> சங்கிலி அணிவிக்கப்பட்டுள்ளது.
> காலில் வீர கழல், தலையில் 'கரண்ட மகுடம்' அணிந்து நான்கு
>கரங்களுடன்
> இம் முருகன் சிலை உள்ளது.டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்நாள்
> நிகழ்ச்சியில் 2 அமர்வுகள்நடைபெற்றன. மொத்தம் 30 ஆய்வுக்
>கட்டுரைகள்
> சமர்ப்பிக்கப்பட்டன.
>
> 20 ஆம் தேதி 4 அமர்வுகளில்60 ஆய்வுக் கட்டுரைகளும், 30 ஆம் தேதி
>3
> அமர்வில் 45 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
>
> 21 நாடுகளிலிருந்து 135 அறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை
> சமர்ப்பித்தனர்.
>
>Please see the image and article at
>http://www.chennaionline.com/aaraamthinai/sirappupparvai/newsirappupparvai.a
>sp
> - R.
>திருவுடையான்
>
>
>
>
>_______________________________________________________
>Get your free, private email at http://mail.excite.com/
>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com