From jayabarathi Tue Mar 23 23:31:20 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12972 invoked by uid 7770); 24 Mar 1999 07:31:12 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 24 Mar 1999 07:31:12 -0000
Received: from umlugghc ([202.188.69.46]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990324233356.IKOW6126@umlugghc>; Wed, 24 Mar 1999 15:33:56 -0800
Message-Id: <3.0.3.32.19990323233922.007f9cf0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 23 Mar 1999 23:39:22 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: vassan
In-Reply-To: <3.0.5.32.19990323171434.00798df0@...>
References: <3.0.3.32.19990323230127.0083bb30@...> <3.0.5.32.19990323163141.007a0100@...> <3.0.3.32.19990323170046.007ff310@...> <000901be74fd$2092ebc0$88ea6dd1@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Manivannan's questions-Palzhaiyaarai#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 200

At 05:14 PM 3/23/99 -0700, you wrote:
>At 23:01 3/23/99 +0800, you wrote:
>
>>>
>>>>ஜேபி எழுதினார்:
>
><நறுக்>
>> இதுதான் அந்த சாகாவரம் பெற்றவரலாற்றுக்கதைகளின்
>> ஜீவநாடி-உயிர்நிலை. அவற்றில்வரும்பாத்திரங்கள் எத்தனை
>> ஆண்டானாலும் நினைவில் நிற்கிறார்கள் அல்லவா?
>> ஜெகசிற்பியனின் "ஜீவகீத"த்தின்நச்சியும் அப்படிப்பட்ட
>> ஆள்தான். சுஜாதாவின் கணேஷ்/வசந்த்,தமிழ்வாணனின் சங்கர்லால்
>> எப்போதும் இருப்பார்கள் -அப்புசாமி/சீதாப்பாட்டியைப்போல:-)
>> வாசனின் மனதைக்கவர்ந்த நாவல் போலும் "பொன்னியின் செல்வன்"?
>> திருத்தத்திற்கு நன்றி.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>===================================
>
>ஜேபி அவர்களுக்கு
>
>ஆம்,நிச்சயமாக!! பொன்னியின் செல்வன் நான் வளர்ந்த ஊர் பகுதியில்
> நடத்தபட்டதனால்தானோ என்னவோ;-)
>
>5 பாகங்களையும் 4 முறைதான் படித்துள்ளேன்.
>
>*'அகத்தியரில்' கீழுள்ளவைகளை எழுதுவது முறையில்லை எனில்,
>நண்பர்கள் மன்னிக்க*

அன்புள்ள வாசன்,

தமிழின் தற்கால இலக்கியமும் "அகத்திய"த்தின் அங்கங்களில்
அடங்குகிறது. ஆகவே அது முறையுள்ள செயல்தான். கரும்பு தின்னக்கூலியா?


>பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன்,ஆழ்வார்க்கடியானுக்கு அடுத்து
>என் மனம் கவர்ந்த பாத்திரம்'பூங்குழலி'.
>
>எனது துணைவியின் பெயரும் அதுவே :-))

அதானே பார்த்தேன்!

>
>1977 அல்லது 1978 ல் கொள்ளிடம் நதியில் பெரும் வெள்ளம் வந்து
>அதனை பார்க்கச் (!?) சென்றிருந்தோம்.மாடுகளும் ,வைக்கோல் போர்களும்
>மிதந்து சென்றன.பாலத்திற்கும் வெள்ளத்திற்கும் இடைவெளி இரண்டே அடி;
>மேலும் பாலம் 1 கிலா மீட்டர் அகலம்.
>
>அங்கிருந்த எனக்கும் என் நண்பனுக்கும் பலநூற்றாண்டுகளுக்கு
>முன்னால் அவ்விடத்தில் அல்லது வெகு அருகில் ஏற்பட்ட ஒரு வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதினால்தானே'பெரிய
>பழுவேட்டரையருக்கு' புத்தி வந்தது என்று
>ஒரு விநோதமான நிம்மதி அச்சமயம்!
>
>நீங்கள் ஜெகசிற்பியனை குறித்து ஒருவரி எழுதியிருந்தீர்கள்..
>
>[அகத்தியருக்கு
>சம்பந்தமில்லாமல் எழுத ஆரம்பித்தாயிற்று, இன்னும் இரு வரிகள்,அவ்வளவே]
>
>ஒரு ஆச்சிரியகரமான ஒற்றுமை.தமிழில் வரலாற்று புதினங்களை படைத்ததில்
>சிறந்து விளங்கும் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி,சாண்டில்யன்(பாஷ்யம் ஐயங்கார்)
>ஜெகசிற்பியன் மூவருமே மயிலாடுதுறைபக்கத்தை சார்ந்தவர்கள்.


வட்டார வாசனையாக இருக்கக்கூடும்:-)
அந்தப்பக்கத்தில் சிற்சில மைல் தூரத்திலேயே பழையாறை,
கங்கை கொண்டசோழபுரம், ஜெயங்கொண்டசோழபுரம், மேலைப்
பழுவூர், கீழைப்பழுவூர்(பழுவேட்டு அரையர் ஊர்), அப்புறம் கொஞ்சம் வடகிழக்காகச் சென்றால் உங்கள் ஊர்,
பின்னர் தில்லை என்று அமைந்திருக்கிறது அல்லவா?
நிச்சயம் வட்டாரவாசனைதான் ஐயா!பாருங்களேன்!
அவர்களுடைய நாவல்களில் பெருமபாலும்பாண்டியர்கள் வில்லன்களாகவே
வருவார்கள். "ராஜமுத்திரை"யில் சாண்டில்யன் போனால் போகிறதே
என்று சடையவர்மன் சுந்தரபாண்டியனை ஹீரோ ஆக்கியிருக்கிறார்.

அந்த வட்டாரத்தை நிலக்கலனாக வைத்து ஜானகிராமன்
மோகமுள்ளை எழுதியுள்ளார். கும்பகோணத்தில் அதன் பெரும்பகுதி நடந்திருக்கிறது. பாலகுமாரன் ஒரு
சிறிய ஜோல்னாப்
பையைத் தூக்கிகொண்டு மோகமுள் பாத்திரங்கள் நடமாடிய அந்த வீதிகள்,
கும்பகோணத்து கல்லூரி ஆகியவற்றைப்பார்ப்பதற்காகவே கும்பகோணத்துக்குச் சென்றதாக
எழுதியிருக்கிறார். ஜானகிராமனும்
அந்தப்பக்கத்து ஆசாமிதானோ?

அன்புடன்

ஜெயபாரதி



>அன்பன்
>வாசன்
>
>
>===========================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com