From jayabarathi Thu Mar 25 00:51:24 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22162 invoked by uid 7770); 25 Mar 1999 08:51:22 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 25 Mar 1999 08:51:21 -0000
Received: from umlugghc ([202.188.69.197]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990325085119.DXBC7770@umlugghc>; Thu, 25 Mar 1999 16:51:19 +0800
Message-Id: <3.0.3.32.19990325162557.00818390@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 25 Mar 1999 16:25:57 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: "Mani M. Manivannan"
In-Reply-To: <001001be75a9$96d7cb00$2af2578b@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Ninaivil Nirkkum Pathiranggal.
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 206

At 07:51 PM 3/23/99 -0800, you wrote:
>>இப்படி கற்பனையில் தோன்றி வாசகர்களின் மனங்களில் வாழும் பெயர்களைத்தொகுத்தால் வாசகர்களுக்கு
>>உற்சாகமாக இருக்குமே!
>
>கல்கியின் 'சிவகாமியின் சபதம்'சிவகாமி, சாண்டில்யனின் 'கடல்புறா'கருணாகரத்
>தொண்டைமான், 'பொன்னியின் செல்வன்'வல்லவரையன் வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான்,
>நந்தினி, பெரிய பழுவேட்டரையர். ஆனால் விந்தை என்னவென்றால், 'பொன்னியின்
>செல்வன்' கதையின் நாயகன் அருண்மொழிவர்மன் நினைவில் நிற்கும் பாத்திரமாகப்
>படைக்கப் படவில்லை. அவனைவிட ஆதித்த கரிகாலன் பாத்திரத்தை உயிருடன்
>படைத்திருந்தார். படிப்பவன் என்ற முறையில் என் பார்வையில் வந்தியத்தேவன்
>கதைத்தலைவனாக இருந்தான். ஒரு சாதாரண வீரனாக ஏரிக்கரையில் சோழநாட்டுக்கு
>வருவதிலிருந்து, இறுதியில் சோழப்பேரரசின் இளவரசியின் காதலனாகும் வரை,
>வந்தியத்தேவனின் கதை விறுவிறுப்பாகப் போகும். சொல்லப் போனால், அமெரிக்காவின்
>'ஸ்டார் வார்ஸ்' படத்தில் இளவரசி லேயா ஓர்கானாவுக்கும், 'கேப்டன்' ஹான் ஸோலோவுக்கும்
>இடையே இருக்கும் உறவில்கூட குந்தவைப்பிராட்டியார்-வல்லவரையன் காதலைக்கண்டேன்!

அன்புள்ள மணிவண்ணன்,

பொன்னியின் செல்வனுக்கும் star wars sagaவுக்கும் இடையே
இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. பொன்னியின் செல்வனின் தடம்
நான்கு, ஐந்து பாகங்களில் மாறுவதுபோலவே ஸ்டார் வார்ஸும் மாறியதுதானே?
முதல்பாகத்தில் ல்யூக் ஸ்கைவாக்கர்-லேயாவின் தொடர்பு விளக்கப்படவில்லை.
ஒருவேளை ல்யூக்தான் காதலனாக மாறுவானோ என்ற மயக்கமும் ஏற்படும்.
ஆனால் Empire Strikes Backஇன் இறுதிப்பகுதியில்தான் ல்யூக், டார்த் வாடரின்
மகன் என்பதும் ஹான் ஸோலோ-லேயா காதலும் புலப்படுகின்றன.
இது Return of the Jediயில் வலுப்பட்டுவிடுகிறது.லேயா, ல்யூக்கின்
இரட்டையாகப் பிறந்த சகோதரி என்பதுவும் உறுதியாகிவிடுகிறது.
அது சரி. அதில் பென் கெனோபி குறிப்பிடும் The Force என்பது என்ன?
"It surrounds us; is within us and supports everything in the universe".
"May the Force be with you!"

பிரம்மமோ?

அன்புடன்

ஜெயபாரதி






>
>மணி மு. மணிவண்ணன்
>பிரிமான்ட், கலி., அ.கூ.நா.
>
>
>>என் பங்குக்கு நா.பா.வின் குறிஞ்சி மலரின் "அரவிந்தனையும்" "பூரணியையும்"சமர்ப்பிக்கிறேன்.
>>ர.சு. நல்லபெருமாளின் "குமரேசனும்" நினைவில் நிற்கும் பாத்திரமே!
>>
>>Re.Ka.
>
>>> இதுதான் அந்த சாகாவரம் பெற்றவரலாற்றுக்கதைகளின்
>>> ஜீவநாடி-உயிர்நிலை. அவற்றில்வரும்பாத்திரங்கள் எத்தனை
>>> ஆண்டானாலும் நினைவில் நிற்கிறார்கள் அல்லவா?
>>> ஜெகசிற்பியனின் "ஜீவகீத"த்தின்நச்சியும் அப்படிப்பட்ட
>>> ஆள்தான். சுஜாதாவின் கணேஷ்/வசந்த்,தமிழ்வாணனின் சங்கர்லால்
>>> எப்போதும் இருப்பார்கள் -அப்புசாமி/சீதாப்பாட்டியைப்போல:-)
>>> வாசனின் மனதைக்கவர்ந்த நாவல் போலும் "பொன்னியின் செல்வன்"?
>>> திருத்தத்திற்கு நன்றி.
>>>
>>> அன்புடன்
>>>
>>> ஜெயபாரதி
=================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com