From jayabarathi Fri Mar 26 15:18:35 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14591 invoked by uid 7770); 26 Mar 1999 23:18:23 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.egroups.com with SMTP; 26 Mar 1999 23:18:23 -0000
Received: from umlugghc ([202.188.69.244]) by cgi2.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990326231819.FFRK8539@umlugghc> for ; Sat, 27 Mar 1999 07:18:19 +0800
Message-Id: <3.0.3.32.19990326171149.00806890@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 26 Mar 1999 17:11:49 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
In-Reply-To: <3.0.3.32.19990319033326.007f7520@...>
References: <005d01be7314$e3244de0$74ae5ccf@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Pazhaiyarai #2
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 212

பழையாறையைப் பொன்னியின் செல்வனிடம் விட்டுவிட்டு வந்தோம். மீண்டும்பழையாறைக்குத் திரும்புவோம்.
உலகின் சில முக்கிய நகரங்களுக்கு twincity என்ற சிறப்பு இருக்கும் . அதைப்போலஇன்னொரு நகரம்
இருக்கும். இத்தாலியில் இப்படிப்படிப்பட்ட நகரங்களுண்டு. பழங்காலத்தில் பாம்ப்பெய், ஹெர்க்குலேனியம் என்று
இரட்டை நகரங்கள் இருந்தன. அவை இரண்டுமே வெசுவியஸ் எரிமலையின் சீற்றத்தால் அழிந்தன.
பாலஸ்த்தீனத்தில் சோடம், கொமோரா என்று இரண்டு. ஜஹோவாவின் சீற்றத்தால் அழிந்தன என்று
விவிலியவேதம் கூறுகிறது. இப்போதுஇத்தாலியில் இரண்டு நகரங்கள் உள்ளன. ஒரு
சொல்வழக்கைக்கேள்விப்பட்டிருப்பீர்கள்.

"See Naples and Die!"

இதில் நேப்பல்ஸின் இரட்டைப்பிறவியான நகரமான டை நகரைக் குறிப்பிடுகிறார்கள். சாகுமுன்னர்
எப்படியேனும் நேப்பல்ஸைப்பார்த்துவிட்டுத்தான் சாகவேண்டும் என்று பொருள்கொள்வது வழக்கம்.

அதே மாதிரி பழையாறைக்கு ஒரு twin cityஇருந்தது. அதையும் சேர்த்துதான் சொல்லவேண்டும்
அப்போதுதான் மணிவண்ணன் எந்த கருத்தின் வலியுறுத்தலை முன்னிட்டு முதன்முதலில்இந்த த்ரெடைத்
தொடங்கினாரோ, அது முழுமை பெறும்.
தொடர்ந்து செல்வோம்.
தமிழக வரலாற்றையும் தமிழர்களின்திறமையையும் மறுபரிசீலனை செய்யும்நிலை உங்களில் பலருக்கு
ஏற்படலாம். க்லோபல் பாலிட்டிக்ஸ் என்றசொல் இப்போதுதானே நமக்குப் பரிச்சயமாகியுள்ளது?
மேலே படியுங்கள்.
ராஜராஜசோழருக்குப் பிறகு, அவருடையமகன் ராஜேந்திர சோழர் அரியணைஏறினார். அவர் பதவிக்கு
வந்ததுமே பெருந்திட்டங்கள் நான்கினைச் செயல்படுத்தினார்.
பல வகைகளிலும் சிறந்து விளங்கியதொரு தரைப்படையை வடதிசைநோக்கிஅனுப்பினார். தமிழகத்துக்கு
வடக்கேயிருந்தது வேங்கி என்ற நாடு. இது கீழச்சாளுக்கிய மரபினரால் ஆளப்பட்ட நாடு; கிருஷ்ணாவுக்கும்
கோதாவரிக்கும் இடையே விளங்கியவளமிக்க நாடு. இதன் வடக்கில் இருந்ததுதான் தென் கலிங்க நாடு.
வேங்கிநாட்டரசன் விமலாதித்தன்தான்ராஜேந்திரரின் மைத்துனன். மாப்பிள்ளை ராஜராஜ நரேந்திரன்தான்
பட்டத்திளவரசன். அரையன் ராஜராஜன்என்னும் மாதண்டநாயகரின் தலைமையில்அப்படை புறப்பட்டது. அது
கலிங்கம், தக்கிண லாடம், உத்தர லாடம்,தக்கிண மாசுணம், தக்கிணகோசலம் போன்ற இன்னும் சில
நாடுகளை வென்று கங்கைக்கரையை அடைந்தது.
அரையன் ராஜராஜன் தன்னுடைய யானைகளை வரிசையாக நிற்கச்செய்து யனைகளால் பாலம் அமைத்து,
கங்கையைக் கடந்தார். ராஜேந்திர சோழர் ஏற்கனவே செய்திருந்த ராணுவ உடன்படிக்கையின்படி
கன்யாகுப்ஜத்தின் ரஜபுத்திர அரசர் பரமார போஜரும், சந்தேல விக்ரமாதித்தனும், வித்யாதரனும்
கலிங்கம், வங்கம் முதலிய நாடுகளின்மீது வெவ்வேறு முனைகளில் படையெடுத்தனர்.
கங்கையைக்கடந்த அரையன் ராஜராஜன்வங்கநாட்டைவென்று கைப்பற்றினார்.கங்கையின் நீரை
பொற்குடங்களில் நிரப்பி பகைமன்னர்களால் சுமக்கச்செய்து சோழநாடு நோக்கித் திரும்பினார். ராணுவ
உடன்படிக்கையின்படி, சோழராணுவத்தின் ஒரு பகுதி, போஜமன்னர், விக்கிரமாதித்தர், வித்யாதரர்
ஆகியோர் வேறு இடங்களில் நடத்தியபோர்களில் உதவி செய்யச் சென்றது.
அப்போது கஜினி முகம்மது, வித்யாதரமன்னைன் நாட்டைத் தாக்கினான். அவசரஉதவி வித்யாதரனுக்குத்
தேவைப்பட்டது. போஜர், விக்ரமாதித்தர் ஆகியோரின் படைகளுடன் சேர்ந்துகொண்டு கஜினிமுகம்மதுவைச்
சோழப்படைகளும் தாக்கின. அது அப்படியே நர்மதை நதிக்கரைவரை சென்றுவிட்டு, அப்படியே சிந்துநதிக்
கரைக்கும் சென்று சிந்துநதி நீரையும்எடுத்துவந்தது.
கங்கை நதி நீரைச்சுமந்து பிரதானசேனையுடன் அரைய ராஜராஜன் சோழநாடுநோக்கித் திரும்பி வந்து
கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் ஒரு பெரிய கடற்படையை சித்தப்படுத்தி, தென் கிழக்காசியாவின் தீபகற்ப
மலேசியா, தென் தாய்லாந்து, சுமாத்ரா,நிக்கோபார் ஆகிய பிரதேசங்களில்இருந்த பதின்மூன்று
நகரங்கள், துறைமுகங்கள், கடற்படைத்தளங்கள் ஆகியவற்றை அழியச்செய்தார்.
அவை அனைத்துமே அக்காலத்தின் பேரரசுகளில் ஒன்றான ஸ்ரீவிஜயத்தின் முக்கியகேந்திரங்கள். ஸ்ரீவிஜயமோ
மூவாயிரம் மைல் நீளமும் ஆயிரம் மைல்அகலமும் கொண்ட கடற்பகுதியில், பெரிதும் சிறிதுமான மூவாயிரம்
தீவுகளைக் கொண்டதொரு கடல்வல்லரசாகும். தமிழகத்தின் மிக அருகாமையிலுள்ள நகரம் நக்காவரம்
எனப்படும் நிக்கோபார். அது தமிழகத்திலிருந்து குறைந்தது ஆயிரத்திருநூறு மைல் தூரத்தில் இருக்கிறது.
மிக அதிகத் தொலைவிலுள்ளது காம்போடியாவுக்கு அருகிலுள்ள தாம்ரலிங்கம். மலாயா/சிங்கப்பூரைச்சுற்றி
ஆயிரம் மைல் வடக்கே சென்று அடையவேண்டும். நக்காவரத்திலிருந்து இரண்டாயிரம் மைல் தூரத்தில் உள்ளது.
மிகத்தெற்கில் உள்ளது ஸ்ரீவிஜயத்தின்தலைநகரான பாலெம்பாங். இது பூமத்திய ரேகைக்கும் தெற்கில்
இருக்கிறது. நிக்கோபாரிலிருந்து ஈராயிரம் மைல்கள் தெற்கில் உள்ளது.
பதின்மூன்று வலுவான கடற்கரை மையங்களை அழிப்பதற்காக எத்தனை மைல்கள் கடலில் நம் கடற்படை குறுக்கும்
நெடுக்குமாக சென்றிருக்கும் என்றுகணக்கிட்டுக்கொள்ளுங்கள். ஸ்ரீவிஜயத்தின் தலைநகரான பாலெம்பாங்
நகரிலிருந்த மகர வித்யார தோரணவாயிலை சோழப்படை கைப்பற்றி எடுத்துக் கொண்டது.
இது பம்பாயின் Gateway of India, பாரிசின் Arc deTriumph, பெர்லினின் Brandenburg
Gate போன்றதொரு தோரணவாயிலாகஇருந்திருக்கும். ஆனால் மிக அழகியவேலைப்பாடு அமைந்தது என்று
வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.
இத்தனை சிறப்புமிக்க தோரணவாயிலை ஏற்றிக்கொண்டு கடற்படை தமிழகத்துக்குத் திரும்பியது.
அதே நேரத்தில் சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏற்ற வகையில் பெரிய சிறப்பு வாய்ந்த மாண்புகள் நிரம்பிய
மாகரைத் தலைநகராக்கவேண்டுமென்றும்திட்டமிட்டிருந்தார்.
அதற்காக சோழர்களின் பழம்பெரும்தலைநகரும் அரசிருக்கையுமான பழையாறைக்கு அருகில் ஓர் இடத்தைத்
தேர்ந்தெடுத்தார். இது சோழர்களின் குலமுழுமுதல் மூர்த்தியாகியாகிய தில்லைநடராஜப் பெருமானின்
சிதம்பரத்தலத்திற்கும் அருகாமையில்இருந்தது. ஒரே நாளில் நாட்டின் முக்கியத் துறைமுகங்களாகிய
நாகைப்பட்டினம், காரைக்கால், காவிரிப்பூம்பட்டினத்தின் எஞ்சியபகுதி மற்றும்சிலவற்றை அடையலாம்.
தஞ்சை, பழையாறை, தில்லை, உறையூர், ஆகியவற்றையும் ஒரு நாளில் அடையமுடியும்.
பழையாறையில் அரசமரபினர் நூற்றுக்கணக்கில் இருந்தனர். அவர்களையும் கண்காணித்துக்கொண்ட மாதிரியும்
இருக்கும் அல்லவா? ஏனேனில் ராஜேந்திரர் சோழநாட்டின் நேரடிவாரிசல்ல.அவர்காலத்திலேயே அவரைவிட
அதிக உரிமை படைத்த ஓர் இளவரசர்இருந்தார். அவர்தான் ராஜராஜசோழரின் சிற்றப்பா உத்தம
சோழரின் மகன். ராஜேந்திரரே தன் தந்தை இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் பட்டத்திளவரசர்
ஆனார்.
இப்படிப்பட்ட கேந்திரமுக்கியத்துவம் பெற்ற இடத்தையே தேர்ந்தெடுத்துக்
கொண்டார்.
அங்கு பிரம்மாண்டமான நகரை நிர்மாணித்தார். நடுவில் ஒரு பெரிய கோயில்.தஞ்சையில் தன்னுடைய
தந்தை ராஜராஜசோழர் கட்டிய பெருவுடையார் கோயிலை ஒத்த அமைப்புடையது.ஆனால் அதன் விமானத்தின்
சரிவுகளும் முனங்குகளும் நேர்க்கோட்டில்இருக்கும். ராஜேந்திரரின் கோயிலின்விமானமோ உள்வளைசலைக்
கொண்டது. சிற்பக்கலையிலும் நுணுக்கத்திலும் இன்னும் சிறந்தது.
இன்னொரு பெருந்திட்டமும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பழங்காலத்தில் பாரதத்திலேயே மிகப்பெரிய செயற்கை ஏரியாக போஜமன்னன் கட்டிய போசபுரத்து
ஏரியையே சொல்வார்கள். இது இரண்டுகுன்றுகளை இணைத்து, ஒரு பள்ளத்தாகைஅடைத்துக்கட்டப்பது.
ஆனால் ராஜேந்திரரோ அதைவிடசிறப்புவாய்ந்த ஏரியக்கட்ட ஏற்பாடுசெய்தார். இது மலைகளே இல்லாத
சோழநாட்டின் கொள்ளிட ஆற்றின் டெல்ட்டாப் பகுதியில் சமவெளியில் அமைக்கப்பட்டது. நிலத்தின் ஏற்ற
இறக்கம், பள்ளம் மேடு, நீர்ப்பிடிப்பு,நீர்ப்போக்கு போன்ற பல அம்சங்களும்மிகத்தீர்க்கமாகக் கணிக்கப்
பட்டு, ஏரியின் மாபெரும் கரை நிர்மாணிக்கப்பட்டது.
கரையின் நீளம் பதினாறு மைல். குறுக்குவசத்திலும் கரைகள் மூன்று மைலுக்கு இருந்தன. இதற்கு நீரிணைப்பு
இரண்டு ஆறுகளிலிருந்து வந்தன. கொள்ளிடத்திலிருந்து அறுபது மைல் நீளமுள்ள பிரதான கால்வாயொன்று
பெரும்பகுதியான நீரைக் கொண்டு
வந்தது. தெற்கிலிருந்து வெள்ளாற்று நீரை இன்னொரு கால்வாய் கொண்டுவந்தது.மொத்தம் எத்தனை மதகுகள்
இருந்தன என்பது இப்போது அறியப்படக்கூடவில்லை.
இக்காலத்தில் தமிழகத்திலேயே மிகப் பெரிதாகக்கருதப்படும் வீராணம் ஏரி எனப்படும் வீரநாராயணப்
பேரேரி எழுபத்துநான்கு மதகுகளைக்கொண்டது. இது ராஜேந்திரசோழரின்ஏரியிலிருந்து மிதமிஞ்சிப்
போய்விழுந்த வடிகால் நீரின் நீர்ப்பிடிப்பாகத்தான் விளங்கியிருக்கிறது.
ராஜேந்திரரின் பேரேரி சாதரணமாகக் கரைக்குள் அடங்கி நீர் நிரம்பிய
நிலையில் பதினாறு மைல் நீளமும் மூன்றுமைல் அகலமும் பலமீட்டர்கள் ஆழமும் கொண்டு விளங்கியிருக்கும்.
வெள்ளப்பெருக்கெடுப்பு சமயத்தில் அது ஒரு கடல்போன்றே தோற்றமளித்திருக்கும்.
இவையனைத்தும் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் , பழையாறை அருகிலும்,புதிதாகக் கட்டப்பட்டுக்
கொண்டிருக்கும் தன்னுடைய புதிய தலைநகரின் இருப்பிடத்துக்கு அருகிலும் இருக்குமாறும், அதே நேரம் தீவிர
சைவர்களின் முழுமுதற்பொருள் தில்லைநடராஜரின் அருகிலிருந்து தெய்வவழிபாடுகளை
நிகழ்த்திக்கொண்டிருக்கவேண்டியும் சிதம்பரத்திலேயே ஒரு பெரிய மாளிகையில் வசித்து வந்தார்.
இவ்வாறு தில்லை சிதம்பரத்தில் எட்டாண்டுகள் இருந்தார்.

இன்னுமிருக்கிறது........

அன்புடன்

ஜெயபாரதி

======================================

































ந்திட்டமும் நிறைவேறிக்கொண்டிருந்தது.




















------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com