From jayabarathi Sat Mar 27 17:45:09 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 19058 invoked by uid 7770); 28 Mar 1999 01:45:05 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.egroups.com with SMTP; 28 Mar 1999 01:45:05 -0000
Received: from umlugghc ([202.188.69.4]) by cgi2.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990328014503.FHJ20160@umlugghc> for ; Sun, 28 Mar 1999 09:45:03 +0800
Message-Id: <3.0.3.32.19990327182818.0080a100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sat, 27 Mar 1999 18:28:18 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
In-Reply-To: <3.0.3.32.19990326175223.00814650@...>
References: <3.0.3.32.19990326171149.00806890@...> <3.0.3.32.19990319033326.007f7520@...> <005d01be7314$e3244de0$74ae5ccf@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Advice needed
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 215

கங்கைக்கரை படையெடுப்பு, கடாரத்தின்மீது கடற்படையெடுப்பு, புதிய தலைநகரம்
அமைப்பு, புதிய பேரேரி நிமாணிப்பு,பெரிய கோயில் கட்டுமானப்பணி ஆகியவை நடந்து
கொண்டிருக்கும்போது தில்லையில் எட்டாண்டுகளை ராஜேந்திரர் கழித்தார்.
கங்கைப்படை திரும்பி வந்துகொண்டிருக்கும் செய்தி கிட்டியது. உடனே அவர்
வேங்கி நாட்டுக்குச் சென்று அப்படையைஎதிர்கொண்டழைத்து, சோழநாட்டுக்குத்
திரும்பினார். கங்கைநீர்க்குடத்தைத் தானும் தாங்கியவண்ணம் வந்துசேர்ந்தார்.
அங்கு அவருடைய புதிய தலைநகரம்பூர்த்தியாகியிருந்தது. அதன் நடுவே
விண்ணைத்தொடும்வண்ணம் கம்பீரமாகசிவாலயம் காட்சியளித்தது. உச்சியில் பொற்
கலசம் மின்னிக்கொண்டிருந்தது.
அருகிலிருந்த ஏரியும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆகியவற்றிலிருந்து வந்த நீர்
நிரம்பி கடல்போல் காட்சியளித்தது.
கங்கைநீரைக்கொண்டு சிவாலயத்துக்குடமுழுக்குச் செய்தார். அப்போது
அவருடைய தந்தையின் ஞானகுருவாக விளங்கிய சித்தர் கருவூர்த்தேவரும் திருமுறையைத்
தொகுத்துத்தந்த நம்பியாண்டார் நம்பியும் உடனிருக்க குடமுழுக்கு இனிது நிறைவேறியது.
கங்கைகொண்டான், கடாரம் கொண்டான்என்ற விருதுகளையும் புனைந்து
கொண்டார்.
தன்னுடைய புதிய விருதின் பெயராலேயே சிவாலயத்துக்கு, "கங்கை கொண்ட
சோழீஸ்வரம்" என்று பெயரிட்டார்.அந்தக்கோயிலின் வளாகத்தில் அமைந்திருந்த
சிங்கக்கிணற்றில் கங்கை நீரில் ஒருபகுதியை ஊற்றி, அக்குளத்தைப் புனிதப்படுத்தினார்.
தான் நிர்மாணித்த அந்த புதிய தலைநகருக்கு "கங்கை கொண்ட சோழபுரம்"
என்று பெயரிட்டார்.
தன் தந்தை ராஜராஜசோழர் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலில்
உள்ள மூலமூர்த்திக்கு திருமருந்து சார்த்தி, அம்மூர்த்தியை நிலைநிறுத்தி,அக்கொயிலின்மீது
திருமுகப்பாசுரம் ஒன்றை இயற்றிநார்கருவூர்ச்சித்தர்.
அவருக்கு கங்கைகொண்ட சோழீசர்காட்சிகொடுத்திருக்கிரார். அக்கருத்தை
வைத்து கங்கை கொண்ட சோழீச்சரத்தின் ஈஸ்வரரின் பேரிலும் ஒரு திஉமுகப்பாசுரத்தை
இயற்றினார்.
கருவூரார் ஏற்கனவே இயற்றியுள்ளவற்றுடன், நம்பியாண்டார் நம்பி இதனையும்
ஒன்பதாம் திருமுறையில் சேர்த்தார். அத்துடன் பதினோரு திருமுறைகளும் நிறைவு
கொண்டன.

உள்நெகிழ்ந்து, உடலம் நெக்கு, "முக்கண்ணா
ஓலம்!" என்று ஓலமிட்டு ஒருநாள்
மண்ணின் நின்று அலரேன்; வழிமொழிமாலை,
மழலையஞ் சிலம்புஅடி முடிமேல்
பண்ணிநின்று உருகேன்; பணிசெயேன்; எனினும்
பாவியேன் ஆவியுள் புகுந்து என்
கண்ணின் நின்று அகலான் என் கொலோ!கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே!

ஒவ்வொரு பாடலையும் நெக்குருகிப் பாடியுள்ளார்.



------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com