From jayabarathi Sat Mar 27 20:59:15 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14521 invoked by uid 7770); 28 Mar 1999 04:59:11 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by vault.egroups.com with SMTP; 28 Mar 1999 04:59:11 -0000
Received: from umlugghc ([202.188.69.188]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990328045908.GSUL11448@umlugghc> for ; Sun, 28 Mar 1999 12:59:08 +0800
Message-Id: <3.0.3.32.19990328130233.00806d50@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 28 Mar 1999 13:02:33 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
In-Reply-To: <3.0.3.32.19990326171149.00806890@...>
References: <3.0.3.32.19990319033326.007f7520@...> <005d01be7314$e3244de0$74ae5ccf@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Tale of Two Cities
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 217

கங்கைக்கரை படையெடுப்பு, கடாரத்தின்மீது கடற்படையெடுப்பு, புதிய தலைநகரம்
அமைப்பு, புதிய பேரேரி நிமாணிப்பு,பெரிய கோயில் கட்டுமானப்பணி ஆகியவை நடந்து
கொண்டிருக்கும்போது தில்லையில் எட்டாண்டுகளை ராஜேந்திரர் கழித்தார்.

புதிய தலைநகரில் கட்டப்பட்டிருக்கும்புதிய கோயிலில் நிறுவதற்காக
கங்கைக்கரையிலிருந்து ஒரு விநாயகர்சிலையை படையின் தலைவர் விக்கிரம
சோழியவரையனான அரையன் ராஜராஜன் எடுத்துக்கொண்டார்.
கங்கைக்கரையிலிருந்து பொற்குடங்களில் புனித கங்கைநீர் தாங்கிய
வெற்றிப்படை தெற்கு நோக்கிப் புறப்பட்டது.

கங்கைப்படை திரும்பி வந்துகொண்டிருக்கும் செய்தி கிட்டியது. ராஜேந்திரர்
வேங்கி நாட்டுக்குச் சென்றார். அங்குகோதாவரிக்கரையில் அப்படையை எதிர்கொண்டழைத்து,
சோழநாட்டுக்குத் திரும்பினார்.கங்கைநீர்க்குடத்தைத் தானும் தாங்கியவண்ணம் வந்துசேர்ந்தார்.
அங்கு அவருடைய புதிய தலைநகரம்பூர்த்தியாகியிருந்தது. அதன் நடுவே
விண்ணைத்தொடும்வண்ணம் கம்பீரமாகசிவாலயம் காட்சியளித்தது. உச்சியில் பொற்
கலசம் மின்னிக்கொண்டிருந்தது.
அருகிலிருந்த ஏரியும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆகியவற்றிலிருந்து வந்த நீர்
நிரம்பி, கடல்போல் காட்சியளித்தது.
கங்கைநீரைக் கொண்டு சிவாலயத்துக்குடமுழுக்குச் செய்தார். அப்போது
அவருடைய தந்தையின் ஞானகுருவாக விளங்கிய சித்தர் கருவூர்த்தேவரும் திருமுறையைத் தொகுத்துத் தந்த
நம்பியாண்டார் நம்பியும் உடனிருக்ககுடமுழுக்கு இனிது நிறைவேறியது.
கங்கைகொண்டான், கடாரம் கொண்டான்என்ற விருதுகளையும் புனைந்து
கொண்டார்.
தன்னுடைய புதிய விருதின் பெயராலேயே சிவாலயத்துக்கு, "கங்கை கொண்ட
சோழீஸ்வரம்" என்று பெயரிட்டார்.அந்தக்கோயிலின் வளாகத்தில் அமைந்திருந்த
சிங்கக்கிணற்றில் கங்கை நீரில் ஒருபகுதியை ஊற்றி, அக்குளத்தைப் புனிதப்படுத்தினார்.
தான் நிர்மாணித்த அந்த புதிய தலைநகருக்கு "கங்கை கொண்ட சோழபுரம்"
என்று பெயரிட்டார்.
தன் தந்தை ராஜராஜசோழர் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலில்
உள்ள மூலமூர்த்திக்கு திருமருந்து சார்த்தி, அம்மூர்த்தியை நிலைநிறுத்தி, அக்கொயிலின்மீது
திருமுகப்பாசுரம் ஒன்றை இயற்றியவர் கருவூர்ச்சித்தர்.
அவருக்கு கங்கைகொண்ட சோழீசர்காட்சிகொடுத்திருக்கிறார். அக்கருத்தை
வைத்து கங்கை கொண்ட சோழீச்சரத்தின் ஈஸ்வரரின் பேரிலும் ஒரு திருமுகப்பாசுரத்தை
இயற்றினார்.
கருவூரார் ஏற்கனவே இயற்றியுள்ளவற்றுடன், நம்பியாண்டார் நம்பி இதனையும்
ஒன்பதாம் திருமுறையில் சேர்த்தார். அத்துடன் பதினோரு திருமுறைகளும் நிறைவு
கொண்டன.

உள்நெகிழ்ந்து, உடலம் நெக்கு, "முக்கண்ணா
ஓலம்!" என்று ஓலமிட்டு ஒருநாள்
மண்ணின் நின்று அலரேன்; வழிமொழிமாலை,
மழலையஞ் சிலம்புஅடி முடிமேல்
பண்ணிநின்று உருகேன்; பணிசெயேன்; எனினும்
பாவியேன் ஆவியுள் புகுந்து என்
கண்ணின் நின்று அகலான் என் கொலோ!கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே!

ஒவ்வொரு பாடலையும் நெக்குருகிப் பாடியுள்ளார்.

பொற்குடங்களில் உள்ள நீரில்பெரும்பகுதியைக்கொண்டுபோய் புதிய
பேரேரியில் விட்டார்.
இந்தச்சிறப்பை ராஜேந்திரனுடையதிருவாலங்காட்டுச் செப்பெடுகள்
விளக்கியிருக்கின்றன.
ஸ்ரீராமனுக்கு முன்னோனாக விளங்கியவன்சகரன். இவனும் இவனுடைய
மகன்களும் ஒரு ரிஷியின் சாபத்தால் சாம்பலாயினர். ஒரே ஒருவன் மட்டுமே
எஞ்சினான். அவன் தான் அவர்களுக்கு நற்கதி ஏற்படச்செய்யவேண்டும்.
தன் தந்தை சகோதரர்களுக்கு நற்கதிற்படச்செய்ய ஆகாசகங்கையின் நீர்வேண்டியிருந்தது. ஆனால் அது
சாத்தியமான செயலில்லை.
பகீரதனோ ஒரு தீவிர சிவ பக்தன்.
ஆகவே சிவனை நோக்கிக் கடுமையானதவம் செய்யலானான். பலகாலம்
செய்யப்பட்ட தவத்தால், சிவபெருமான்தோன்றினார். அவர் ஆகாசகங்கையை
இறங்கிவருமாறு ஆணையிட்டார். ஆகாசகங்கையோ தன் இயல்புக்கு விரோதமான
செயலைச் செய்யவிரும்பவில்ல்லை. இருப்பினும் ஈசனின் ஆணை. ஆகவே இறங்கி
வந்தாள். தன் முழு பலத்துடன் மிக வேகமாக இறங்கினாள்.
சிவனோ புன்முறுவலைத் தவழவிட்டு, தன்ஜடாமுடியை அவிழ்த்து,
உதறி, விரித்து விட்டார். வேகமாகஇறங்கிய ஆகாசகங்கை சிவனின்
செஞ்சடைக் கற்றைகளில் சிக்கிக்கொண்டுவிட்டாள்.
சிவன் ஒரு சிறிய பகுதியை மட்டும்வெளிவிட்டார். அது சகரர்சாம்பல்
இருந்த இடத்திற்கு சென்று சாம்பற்குவியலைக் கரைத்து, அந்த இடத்தில்
"சாகரம்" என்ற கடலைத் தோற்றுவித்தது.
ஆகாசகங்கை இறங்குவதை ரவிவர்மாஓவியமாக வரைந்துள்ளார். விரித்த
செஞ்சடையுடன் கால்களை அகட்டி ஊன்றிதயாராக சிவன் அண்ணாந்து
நிற்பதையும் ஆகாசகங்கை இறங்குவதையும் காணலாம்.
இதே காட்சியைத்தான் மாமல்லபுரத்தில் நாம் காண்கிறோம். ஆனால்
அதனை "அர்ச்சுனன் தபஸ்" என்று தவறாகவிளக்குகிறார்கள்.
சாதிக்கமுடியாததை முயன்று சாதித்துமுடித்தவன் பகீரதன்.
ஆகையால்தான்வ்டாமுயற்சியை "பகீரதப் பிரயத்தனம்" என்று
சொல்கிறார்கள்.
திருவாலங்காட்டு செப்பேடு சொல்கிறது:
"பகீரதன் கடுந்தவத்தால் கங்கையைக்கொண்டுவந்தான்" என்று கதை
சொல்லப்படுவதைக் கேட்டு இராசேந்திரன் ஏளனமாகச் சிரித்தான். தன் கை
வலிமையால் கங்கைக்கரை மன்னர்களைக்கொண்டு, கங்கையைச் சோழநாட்டுக்குக்
கொண்டுவந்தான். இது ஜலமயமான ஜயத்தம்பம்.(நீரால் நிறுவிய வெற்றித்தூண்)."

அன்புடன்

ஜெயபாரதி

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com