From jayabarathi Mon Mar 29 03:16:40 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 6223 invoked by uid 7770); 29 Mar 1999 11:16:37 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi2.tm.net.my) (202.188.95.14) by vault.egroups.com with SMTP; 29 Mar 1999 11:16:37 -0000
Received: from umlugghc ([202.188.69.143]) by cgi2.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990329111637.DGGF20160@umlugghc>; Mon, 29 Mar 1999 19:16:37 +0800
Message-Id: <3.0.3.32.19990330013334.008b1100@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 30 Mar 1999 01:33:34 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: tamil@...,globaltamil@...
Mime-Version: 1.0
Subject: [agathiyar] kaNiyan
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 218

>From: jayabarathi
>Subject: Re: [tamil]kaNiyan
>In-Reply-To: <3.0.3.32.19990329235358.00897100@...>
>References: <005501be7954$cf501ba0$21d4bacd@...>
>
>At 11:53 PM 3/29/99 +0800, you wrote:
>>At 11:54 AM 3/28/99 -0800, you wrote:
>>>அன்பு நண்பர் பா(ல்)மருக்கு,
>>>
>>>
>>>'கணியன்' என்ற அடைமொழி கணியன்பூங்குன்றனார் என்ற புகழ்பெற்ற
>>>புலவரின் பெயரிலும் வழங்குகின்றது. கணியன் என்றால் கணிப்பவர்,
>>>ஆரூடம் கூறுபவர், கணக்குக் கருவிகளைப்பயன்படுத்தி கணிப்பவர்
>>>என்றும் பொருள்கொள்ளலாம். ஆனால்'கணியன்' என்ற சொல்
>>>கழகத்தமிழ் அகராதியில் இல்லை! 'கணிப்பொறிஞன்' அல்லது 'கணினியன்'
>>>என்ற சொற்கள் கணினி வன்கலன்உருவாக்குவோரையும் குறிப்பிடலாம்.
>>>நான் மென்கலன் எழுதுபவன்.
>>
>> --------------cut
>> அன்புள்ள மணிவண்ணன்,
>>
>> "கணியன்" என்ற சொல் குறித்து 1986ஆம் ஆண்டில்
>> ஹேலி வால்நட்சத்திரம் தோன்றியசமயத்தில் எழுதிய
>> "வால் நட்சத்திரம்" என்ற தொடரில்சிறிய விளக்கம் தந்திருந்தேன்.
>> பார்த்துக்கொள்ளவும்:
>>
>> ஜோதிடசாஸ்திரவல்லுனர்களுக்கும்,நேரக்கணிப்பளர்களுக்கும்
>> வியக்கத்தக்க அளவுக்கு வானநூலறிவும்இருந்திருக்கிறது.....
>>
>> தொல்காப்பியம் என்னும் பழம்பெரும்நூலொன்று இருந்தது. இது
>> இடைச்சங்ககாலத்தைச் சேர்ந்தது. உலகத்தில் உள்ள அனைத்து
>> நூல்களிலும் இது ஒரு தனித்தன்மை வாய்ந்தது என்று சொன்னால்
>> அது மிகையாகாது. சுமார் மூவாயிரம்ஆண்டுகளுக்கு முந்திய நூல்
>> இது என்று கூறுவார்கள். இந்நூலில் பொருளதிகாரம் என்னும்
>> பகுதியில்,
>>
>> 'மறுவில் செய்தி மூவகைக்காலமும்
>> நெறுவில் ஆறிய அறிவன் தேயமும்'
>>
>> என்று வருகிறது.
>> இந்நூலுக்கு உரையெழுதிய இளம்பூரணர்இதற்கு
>> கீழ்க்கண்டவாறு விளக்கம் கொடுக்கிறார்.
>>
>> 'அறிவன் என்பது கணியனை. மூவகைக் காலமும்
>> நெறியினால் ஆற்றுதலாவது , பகலும்இடைவிடாமல் ஆகாயத்தைப்
>> பார்த்து, ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்கோளும், தூமமும்,
>> மின்வீழ்வும், கோள்நிலையும், மழைநிலையும், பிறவும் பிறவும் பார்த்துப்
>> பயன்கூறல் ஆதலான் ...'
>>
>> சுருக்கமாகச்சொன்னால் அறிவன் அல்லது கணியன் என்பவர்கள்
>> வானநூலை நன்கு அறிந்து அவற்றின் போக்கையும் இருப்பையும்
>> கவனித்து, அதனால் ஆகும் விளைவுகளைக்கணித்துக்கூறினர்.
>>
>> புரிவின்றி யாக்கை போற் போற்றுவ போற்றிப்
>> பரிவின்றிப் பட்டாங்கு அறியத்-திரிவின்றி
>> விண்ணில் உலகம் விளைவிக்கும் விளைவெல்லாம்
>> கண்ணி உரைப்பான் கணி
>>
>> என்று வேறொரு பாடலையும் மேற்கோளாகக் காட்டுகிறார்
>> இளம்பூரணர்.
>>
>> கணியர்கள் பலவகைக் கருவிகள் கொண்டு வானவீதியில்
>> கிரகங்களைக் கண்டும், அவற்றின் போக்கு, வேகம், கோணம்,
>> இருப்பு, முதலியவற்றைக் கவனித்து, கணக்கிட்டு, அன்றாடம்
>> நடக்கும் ஆண்டு, மாதம், கிழமை, திதி,நாழிகை, சாமம் முதலிய
>> வற்றைக் கணித்துக் கூறினர். அதோடு,பண்டிகைகள், திருவிழாக்கள்
>> போன்றவற்றையும் நிர்ணயித்தனர்.பஞ்சாங்கமும் எழுதினர். காலநிலை,
>> தட்பவெப்ப நிலை, மழைப்பருவம் போன்றவற்றையும் கணித்துக்
>> கூறினர்.
>> இதற்காக பலவகையான கணிதமுறைகளையும்
>> அவர்கள் கற்றிருந்தனர். (பண்டையத்தமிழர்கள் எப்படி நேரத்தைக்
>> கணக்கிட்டு அறிந்திருப்பர் என்பதற்குவாசகர்களிடையே
>> போட்டியும் வைத்துப் பரிசும் கொடுக்கலாம்)."
>>
>> இதுதான் நான் எழுதியிருந்தது.
>>
>> "கணி" என்ற சொல்லும் "கணியன்" என்றசொல்லும் ஒரே
>> பொருளுடையவைதாம்.
>> ஆகவே காம்ப்பியூட்டராகிய கணினியில் நிபுணரைக் "கணியன்"
>> என்று அழைப்பது வழுவல்ல.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>>>
>>>அன்புடன்,
>>>
>>>மணி மு. மணிவண்ணன்
>>>பிரிமான்ட், கலி., அ.கூ.நா.
>>>
>>==============================================>
>>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com