From Tue Mar 30 01:40:38 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 29860 invoked by uid 7770); 30 Mar 1999 09:40:34 -0000
Received: from dfw-ix4.ix.netcom.com (206.214.98.4) by vault.egroups.com with SMTP; 30 Mar 1999 09:40:34 -0000
Received: (from smap@localhost) by dfw-ix4.ix.netcom.com (8.8.4/8.8.4) id DAA11637 for ; Tue, 30 Mar 1999 03:40:34 -0600 (CST)
Received: from sji-ca4-93.ix.netcom.com(205.186.212.221) by dfw-ix4.ix.netcom.com via smap (V1.3) id rma011629; Tue Mar 30 03:40:06 1999
Message-ID: <011801be7a90$d5d15e20$ddd4bacd@...>
From: "Mani M. Manivannan"
To:
Date: Tue, 30 Mar 1999 01:36:48 -0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: kaNiyan
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 221

அன்புள்ள டாக்டர் ஜெயபாரதி அவர்களுக்கு,

> ஜோதிடசாஸ்திரவல்லுனர்களுக்கும், நேரக்கணிப்பளர்களுக்கும்
> வியக்கத்தக்க அளவுக்கு வானநூலறிவும் இருந்திருக்கிறது.....

[cut]

நல்ல தகவல்கள்! புகழ்பெற்ற மேலைநாட்டு வானியல் வல்லுநர்கள்கூட
ஜாதகம் கணித்திருக்கிறார்கள். அண்மையில் கோபர்னிகஸ் அல்லது
கலிலியோ கைப்பட எழுதிய ஜாதகம் ஒன்று கண்டுபிடிக்கப்
பட்டதாகக் கேள்விப்பட்டேன்.

பருவகாலங்களையும் பயிர் விளைக்க வேண்டிய காலங்களையும்
அறிந்துகொள்ள பண்டைய நாகரீகங்கள் பெரிதும் முயற்சி
செய்திருக்கின்றனர். மாயா நாகரீகத்தின் காலக்கணிப்பு
அளவு வியக்கத்தக்கது என்று படித்திருக்கிறேன்.

கோள்களின் இயக்கத்தைத் துல்லியமாய் அளக்கத் தெரிந்தவர்கள்,
கோள்கள் சூரியனைச் சுற்றி நீள்வட்ட வழியில் சுற்றுகின்றன
என்றும் அறிந்திருந்தார்களா? அவர்களுக்குப் பூமி உருண்டை
என்றும் தெரிந்திருந்ததா? புவி ஈர்ப்பு விசை பற்றி உணர்ந்து
இருந்திருந்தார்களா?

நில நடுக்கோட்டைக் கடலில் தாண்ட வேண்டி வந்த எல்லா
நாகரீகங்களும், விண்மீன்களின் இடமாற்றத்தைக் கவனிக்காமல்
இருந்திருக்க முடியாது. வடமீனைக் காணாமல் நிலநடுக்கோட்டின்
கீழ் கப்பலோட்ட வேறு அடையாளங்களை அவர்கள் தேடி
இருக்க வேண்டும். இதனால் குறைந்தது உலகம் தட்டை இல்லை
என்றாவது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். கிரகணங்கள்,
குறிப்பாக சந்திரகிரகணத்தினால், உலகமும் வட்டவடிவு
என்றும் அறிந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற செய்திகள் அகத்தியர் வட்டத்தில் பெரிதும்
வரவேற்கப்படுமே!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com