From Fri Apr 2 11:22:21 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 5079 invoked by uid 7770); 2 Apr 1999 19:22:11 -0000
Received: from dfw-ix8.ix.netcom.com (206.214.98.8) by vault.egroups.com with SMTP; 2 Apr 1999 19:22:11 -0000
Received: (from smap@localhost) by dfw-ix8.ix.netcom.com (8.8.4/8.8.4) id NAA11008; Fri, 2 Apr 1999 13:22:04 -0600 (CST)
Received: from sji-ca12-114.ix.netcom.com(205.186.214.242) by dfw-ix8.ix.netcom.com via smap (V1.3) id rma010960; Fri Apr 2 13:21:39 1999
Message-ID: <006601be7d3d$8dcdbba0$f2d6bacd@...>
From: "Mani M. Manivannan"
To: , "jayabarathi"
Cc: ,
Date: Fri, 2 Apr 1999 11:18:12 -0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: [tamil] Ritualistic suicide
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 226

அன்புள்ள டாக்டர் ஜெயபாரதி அவர்களுக்கு,

> There is a very curious and rare piece of info about an ancient Tamil
>practice which I have put up with the help of Angiah.
> Its about ritualistic self-sacrifice - a Tamil version of Harakiri with
>the accompanying photo of the ancient statue.
>
>http://www.geocities.com/Vienna/Choir/4262/navkanta.htm
>
> If there are any comments or questions, please feel free to ask-
>relevant questions.

உங்கள் வலைப்புலத்தில் இருக்கும் படத்தில், சிலையின் வலது கையில்
வாள் இல்லையே? சேதப்படுத்தப் பட்ட வீரக்கல்லாக இருக்குமா?
இந்த வீரக்கல்லில் வீரனைப் பற்றிய குறிப்புகள் ஏதேனும் செதுக்கப்
பட்டிருந்தனவா? பொதுவாக வீரக்கல்லில் குறிப்புகள் செதுக்கப்
படுமா?

நீங்கள் குறிப்பிட்ட ஆறு காரணங்கள் தவிர இன்னொரு காரணம் ஒன்றும்
இருந்திருக்கும் போலிருக்கிறது. புகழ் பெற்ற விக்கிரமாதித்தன்
கதைகளில், விக்கிரமாதித்தனால்கூட விடுக்க முடியாத புதிர்க்கதையிலும்
வேண்டுதலை நிறைவேற்றத் துர்க்கைக்குத் தலையை வெட்டிக் காணிக்கை
ஆக்கும் நிகழ்ச்சி இருக்கிறது.


அதனால், இது இந்தியா முழுதும் பரவியிருந்த ஒரு வழக்கம் என்று
கொள்ளலாமா இல்லை விக்கிரமாதித்தன் கதையில் வரும் நிகழ்ச்சி
தமிழகத்துக் கதை ஒன்றைப் பற்றியது என்று கொள்ளலாமா?

அதே போல் நவகண்டத்தில் வெட்டப்படும் உறுப்புகளில் தலையைத்
தவிர வேறு என்ன உறுப்புகள் இருக்க வேண்டும்? உடலில்
எட்டு உறுப்புகள் துண்டிக்கப் பட்ட பின்பு குருதி சொட்டச்
சொட்டத் துடித்துக் கொண்டே தலையையும் தானே வெட்டும்
(மன, உடல்) வலிமையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

இவை மட்டுமல்லாது 'வடக்கிருத்தல்', 'தீக்குளிப்பு' போன்றவைகூட
பண்டைத் தமிழரிடையே வழங்கி வந்திருந்தல்லவா? வடக்கிருத்தல்
சமணர்களின் வழக்கமா? தீக்குளித்தல் பௌத்தர்கள் வழக்கமா?
இவற்றைப் பற்றிய சிலைகளோ, வீரக்கற்களோ கிடைத்துள்ளனவா?

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com