From jayabarathi Fri Apr 2 15:50:12 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20162 invoked by uid 7770); 2 Apr 1999 23:50:08 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 2 Apr 1999 23:50:08 -0000
Received: from umlugghc ([202.188.69.103]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990402235005.BWHQ461@umlugghc>; Sat, 3 Apr 1999 07:50:05 +0800
Message-Id: <3.0.3.32.19990402074014.00839a00@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 02 Apr 1999 07:40:14 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: tamil@...,globaltamil@..., "Mani M. Manivannan"
In-Reply-To: <006601be7d3d$8dcdbba0$f2d6bacd@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Ritualistic suicide
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 227

At 11:18 AM 4/2/99 -0800, you wrote:
>அன்புள்ள டாக்டர் ஜெயபாரதி அவர்களுக்கு,
>
>உங்கள் வலைப்புலத்தில் இருக்கும் படத்தில், சிலையின் வலது கையில்
>வாள் இல்லையே?

அன்புள்ள மணிவண்ணன்,

சிலையின் கரத்தில் வாள் இருக்கிறது.அதனுடைய கைப்பிடியை
வீரனின் கையில் காணலாம். கழுத்தின்பின்புறத்தில் வாள் இருப்பதால்
நம் பார்வையில் அது படமாட்டாது. மேலும் புகைப்படத்திலிருந்த தெளிவு
ஸ்கான் படத்தில் இல்லாமலிருக்கிறது.கிட்டத்தட்ட முப்பது சதவீதம்
குறைந்துள்ளது.

சேதப்படுத்தப் பட்ட வீரக்கல்லாக இருக்குமா?

இது முழுமையான வீரக்கல்தான். அருவியூர் வீரக்கல்
சேதமாகியுள்ளது.
திருவானைக்கா கல்லும் மாமல்லபுரத்துசிற்பமும்
மிகத் தெளிவானவை.


>இந்த வீரக்கல்லில் வீரனைப் பற்றியகுறிப்புகள் ஏதேனும் செதுக்கப்
>பட்டிருந்தனவா?

இந்தக் கல்லில் ஏதும் குறிப்புகள் இல்லை.

பொதுவாக வீரக்கல்லில் குறிப்புகள்செதுக்கப்
>படுமா?
>
சில கற்களில் காணப்படுவதுண்டு.


>நீங்கள் குறிப்பிட்ட ஆறு காரணங்கள் தவிர இன்னொரு காரணம் ஒன்றும்
>இருந்திருக்கும் போலிருக்கிறது. புகழ்பெற்ற விக்கிரமாதித்தன்
>கதைகளில், விக்கிரமாதித்தனால்கூடவிடுக்க முடியாத புதிர்க்கதையிலும்
>வேண்டுதலை நிறைவேற்றத் துர்க்கைக்குத்தலையை வெட்டிக் காணிக்கை
>ஆக்கும் நிகழ்ச்சி இருக்கிறது.

உண்டு. வாக்குறுதியை நிறைவேற்றமுடியாதவர்கள்
அவ்வாறு செய்வதுண்டு. தன்னுடைய தலைவனாகிய அரசனின்
உயிரைக் காக்கமுடியாமற்போகும்போது, அந்த வீரர்கள் அவ்வாறு
செய்வதுண்டு. பாண்டியமன்னனின் "தென்னவன் ஆபத்துதவி"களிடம்
இப்படி வழக்கம் இருந்தது.
>
>
>அதனால், இது இந்தியா முழுதும் பரவியிருந்த ஒரு வழக்கம் என்று
>கொள்ளலாமா இல்லை விக்கிரமாதித்தன் கதையில் வரும் நிகழ்ச்சி
>தமிழகத்துக் கதை ஒன்றைப் பற்றியது என்று கொள்ளலாமா?

பாரதம் முழுமையிலும் இருந்திருக்கும். ஆனால்
தமிழர்களிடையே அதிகம் இருந்தது நமக்குத் தெரிகிறது.

>
>அதே போல் நவகண்டத்தில் வெட்டப்படும்உறுப்புகளில் தலையைத்
>தவிர வேறு என்ன உறுப்புகள் இருக்க வேண்டும்? உடலில்
>எட்டு உறுப்புகள் துண்டிக்கப் பட்ட பின்பு குருதி சொட்டச்
>சொட்டத் துடித்துக் கொண்டே தலையையும்தானே வெட்டும்
>(மன, உடல்) வலிமையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

கால்களைப் பகுதி பகுதியாகவும் காது,மூக்கு,
உதடு, நாக்கு, ஜனன உறுப்பு, தசைப்பகுதிகள் என்று
வரிசையாக அறுத்துக்கொண்டே வந்து முடிவில் தலையை
அரிந்து கொள்வார்கள்.
"கண்டம்" என்றாலே தனிப்பகுதிகள்தானே.
இறைச்சியின் துண்டங்களை உப்புப்போட்டு ஊறவைத்து,
அதனை "உப்புக் கண்டம்" என்று அழைக்கிறோம் அல்லவா?
"கண்டதுண்டமாக வெட்டுவதைப் பற்றியும்கேள்விப்பட்டிருக்கிறோம்
அல்லவா?
இவ்வாறு வலியைப் பொறுத்தல் ஒரு கடுமையான
தவமாகக் கருதப்படும்.

>
>இவை மட்டுமல்லாது 'வடக்கிருத்தல்','தீக்குளிப்பு' போன்றவைகூட
>பண்டைத் தமிழரிடையே வழங்கி வந்திருந்தல்லவா?

இருந்தன.
உடன் கட்டை ஏறுதலும் தீக்குளிப்புதானே.
இன்னொன்றும் இருந்தது. இதை "துஷாக்கினிப் பிரவேசம்"
என்பார்கள். அமர்ந்தநிலையில், கழுத்துவரைக்கும் உமியைக்
குவித்து வைத்து, நெருப்பிட்டுவிடுவார்கள். மிகமெதுவாக
வெளியிலிருந்து நெருப்பு கனன்றுகொண்டே, உள்பக்கமாக
வரும். மெதுவாக வெப்பத்தில் கஷ்டப்பட்டு வெந்துகொண்டே
இருப்பார்கள்.
ஆதிசங்கரரின் வரலாற்றில், குமரிலபட்டர் இவ்வாறு
செய்ததைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.

வடக்கிருத்தல்
>சமணர்களின் வழக்கமா? தீக்குளித்தல்பௌத்தர்கள் வழக்கமா?

எல்லாருமே செய்திருந்தார்கள்.
சமணர்களின் வழக்கத்திற்கு "சல்லேகனை" என்று பெயர்.
சமணமுனிவர்களே இதைச்செய்வார்கள்.அவர்களின் பாழிகள்
பாறைகளால் ஆகிய மலைச்சரிவுகளிலேயே இருக்கும். பாழிகள்
என்பவை 'recluse" போன்றவை. ஆசிரமம் என்று சொல்லிவிடமுடியாது.
கல்லிலேயே படுக்கைகள் செய்திருப்பார்கள். பாறைகளின் மீது
சிரமப்பட்டு, ஒவ்வொருவராக நடந்தே,மெதுவாக சென்று, பாழிகளை
அடையமுடியும். பெரும்பாலும் பாழிகளுக்குஒரே வழிப்பாதையே
இருக்கும். யாருக்கும் பயந்து அவர்கள் இப்படியெல்லாம் செய்யவில்லை.
அவர்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தகாலத்திலேயே அவர்கள்
இப்படித்தான் பாழிகளை அமைத்திருந்தார்கள். இவற்றை குன்றக்குடி,
அரிட்டாபட்டி, ஆனைமலை போன்ற இடங்களில் காணலாம்.
சல்லேகனையின்போது, செங்குத்தானபாறைகளின்மீது ஏறிவிடுவார்கள். "கரணம் தப்பினால் மரணம்"
என்றவகையில் உச்சியில்
வடக்கு நோக்கி அமர்ந்து கொள்வார்கள். பட்டினி, வெய்யில், அதனால்
ஏற்படும் டீஹைட்ரேஷன், குளிர் முதலியவற்றால் மெதுவாக இறந்து
விடுவார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் பலவீனம் அதிகமாகி, பாறையிலிருந்து
நழுவி விழுந்து இறப்பார்கள். அவர்களாகவே ஏதும் செய்து
கொள்ளக்கூடாது.
சங்ககாலத்தில் பலமன்னர்கள் இவ்வாறுவடக்கிருந்ததை
நீங்கள் படித்திருக்கலாம்.
குடிக்கத் தண்ணீர் வரத்தாமதமாகி வடக்கிருந்து உயிர்விட்ட
"யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் கணைக்கால் இரும்பொறை" ஓர்
உதாரணம்.
அரசனுக்கு வேண்டியவர்களும் உடன் வடக்கிருத்தலும்
உண்டு.

>இவற்றைப் பற்றிய சிலைகளோ, வீரக்கற்களோ கிடைத்துள்ளனவா?

கிடைத்துள்ளன.

அன்புடன்

ஜெயபாரதி
>
>அன்புடன்,
>
>மணி மு. மணிவண்ணன்
>பிரிமான்ட், கலி., அ.கூ.நா.
>
===================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com