From jayabarathi Sat Apr 3 19:40:56 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 5117 invoked by uid 7770); 4 Apr 1999 03:40:32 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by vault.egroups.com with SMTP; 4 Apr 1999 03:40:32 -0000
Received: from umlugghc ([202.188.69.204]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990404034030.EMPD276@umlugghc>; Sun, 4 Apr 1999 11:40:30 +0800
Message-Id: <3.0.3.32.19990402164321.00827930@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Fri, 02 Apr 1999 16:43:21 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Cc: globaltamil@...,tamil@...
In-Reply-To: <002301be7d30$fe32d900$2dc1b3d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [GlobalTAMIL] Ritualistic suicide
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 228

At 12:48 PM 4/2/99 -0500, you wrote:
>இது நான் கேள்விப்பட்டதில்லை.

ஆம். இது சற்று வித்தியாசமானதுதான்.வெவ்வேறு
காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்வது சாதாரணமாக
இருந்ததுதான். சில உன்னத லட்சியங்களுக்காக அல்லது சமயக்
கோட்பாடுகளுக்குட்பட்டு செய்யப்படும்தற்கொலைகளை, அவற்றின்
தன்மைகளுக்கேற்ப, வேறுவகையானதாகவும் கருதி, வேறு பெயர்களும்
கொடுத்திருந்தார்கள்.
மணிவண்ணன் கேட்டவற்றுள் சமணர்களின்"சல்லேகனை"
என்ற வடக்கிருக்கும் முறை சொல்லப்பட்டது. தனக்கே நெருப்பு வைத்துக்கொள்வது, நெருப்புக்குண்டத்தை
வளர்த்துக்கொண்டு
அதற்குள் பாய்வது சிதையில் படுத்தவாறுமற்றவர்களைக் கொண்டு தீவைத்துக்கொள்வது என்று பல வகைகள்
இருந்திருக்கின்றன.
அக்கினிப் பிரவேசத்தில் சற்றுக்கொடுமையானதுதான் குமரில
பட்டர் செய்துகொண்டது.

>
>வடக்கிருந்து உயிர் நீத்தல் பற்றிபடித்திருக்கிறேன் (கோப்பெருஞ்சோழன்).
>எகிப்திய அரசர்கள் இறந்தவுடன் அவர்கள் உடலுடன் உயிரோடு அடிமைகளை
>வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது போல, தமிழகத்திலும் அரசர்களுடன்
>பணிப்பெண்களையும் புதைக்கும் வழக்கம்இருந்ததென்றும், அப்பெண்களுக்காக
>நிலமானியம் அளிக்கப்பட்டதென்றும் ,கொற்றவை கோயில்கள் அந்நிலங்களில்
>எழுந்தன என்றும் பாலகுமாரன் ஒரு நாவலில் எழுதுகிறார்.

அப்படியெல்லாம் புதைக்கவில்லை. இறந்துபோன
அரசனுக்கு மிகவும் வேண்டிய அணுக்கத்தொண்டர்கள், மெய்க்காவலர்,
ஆபத்துதவிகள், உயிர்நண்பர்கள், மனைவியர் போன்றோர் அரசனுடன் உடன்கட்டைஏறுவதுண்டு.
அதெல்லாம் கட்டாயமில்லை. ஆபத்துதவிகள் அதனை ஒரு வழக்கமாகச் செய்திருக்கிறார்கள்.
இவர்களுடைய வழக்கம் கொஞ்சம் விசேஷமானது. புதிய
அரசனிடம் சேரும்போது அரசனுக்கு பலவகையான சத்தியப்
பிரமாணங்களையெல்லாம் செய்துகொடுப்பார்கள். அதன்பின்னர்
அவர்களுடன் சேர்ந்து அரசனும் ஒரே இலையில் சாப்பிடுவான்.
இதுவும் ஒரு முக்கியமான சடங்கு. பிறகுவெற்றிலைபாக்கு மடித்துக்
கொடுப்பான். அதைப்போட்டுக்கொள்வார்கள். அப்படி அவர்களின்
வாழ்க்கை ஒப்பந்தம் ஆரம்பம் ஆகும். அதுஇறப்பு வரை தொடரும்.
அரசன் இறக்கும்போது அவனுக்குரிய ஆபத்துதவிகள் உடன்கட்டை
ஏறுவார்கள்; அல்லது தலைக்கண்டம் செய்துகொள்வார்கள்.
எகிப்தியர்கள்போன்று உயிருடன் புதைக்கும் பழக்கமெல்லாம் கிடையாது.
உடன் கட்டை ஏறுதலும்கூட அவரவர் செய்தசத்தியப்பிரமாணம்,
விசுவாசம், பாசம், நட்பின் ஆழம் முதலியவற்றைப் பொறுத்தேயிருந்தது.
உடன் கட்டை ஏறும் பெண்களுக்கு வீரக்கல்வைப்பதில்லை;
"மாசதிக்கல்" என்ற கல்லைவைத்து அதனைவழிபடுவார்கள்.
இன்னும்சில வகைகள் இருந்தன. அவையும்விசித்திரமானவைதான்.
இப்படியெல்லாமா இருந்திருக்கிறார்கல் என்று வியப்பே ஏற்படும்.

அன்புடன்

ஜெயபாரதி

>இது பற்றி உங்கள் கருத்தென்ன?
>
>சுவாமிநாதன்
>லாஸ் ஏஞ்சலஸ்
>
>
>P.S.:
>Another scenario:
>
>Jan 1, 2000. Y2K fixes fail. Programming Contractors are offered a choice
of Navakantam.(;-)
>=====================================================

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com