From jayabarathi Sun Apr 4 16:23:32 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 18172 invoked by uid 7770); 4 Apr 1999 23:23:25 -0000
Received: from provision.tm.net.my (HELO cgi1.tm.net.my) (202.188.95.13) by vault.egroups.com with SMTP; 4 Apr 1999 23:23:25 -0000
Received: from umlugghc ([202.188.69.186]) by cgi1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990404232322.VDA24029@umlugghc> for ; Mon, 5 Apr 1999 07:23:22 +0800
Message-Id: <3.0.3.32.19990411173522.0082a950@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Sun, 11 Apr 1999 17:35:22 +0800
To: agathiyar@egroups.com
From: jayabarathi
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Ritualistic suicide-Queries#3
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 233

>Date: Sun, 11 Apr 1999 17:27:06 +0800
>To: "Dr.RM.Krishnan"
>From: jayabarathi
>Subject: Re: [tamil] Ritualistic suicide
>Cc: tamil@...
>In-Reply-To: <199904030722.MAA23675@...>
>
>At 12:46 PM 4/3/99 +0500, you wrote:
>>>அன்பிற்குரிய திரு. ஜெயபாரதிக்கு,
>>
>>உங்களின் வீரக்கல் பற்றிய வலைப்பக்கம் பார்த்தேன். விளக்கங்கள் விரிவாகஇருந்தன. இந்த
தற்கொலைப் பழக்கம்,
>>போசள (hoysala) நாட்டிலும் (இன்றைய கர்நாடக மாநிலத்தில் பேலூர், ஹளேபீடு அருகில்)
இருந்ததாக, நாலைந்து
>>நாட்களுக்கு முன் தற்செயலாக வட்டாரநூலகத்தில் இருந்து எடுத்து வந்த ஒரு கன்னட வரலாற்றுப் புதினத்தின்
>>தமிழாக்கத்தில் படித்தேன்.
>
>அன்புள்ள கிருஷ்ணன்,
>
> தகவலுக்கு நன்றி. மற்ற இடங்களிலும்இவ்வழக்கம் இருந்திருக்கிறது.
>பைரவம் காபாலிகம் போன்ற சமயப்பிரிவுகள் செல்வாக்கு ஓங்கிய காலத்தில்இவ்வழக்கம் பல இடங்களில்
பரவியிருந்திருக்கலாம்.
>>
>>
>>இந்த வீரக்கல்லை ஒட்டி எழுந்த கருத்துக்கள்:
>>
>>1/
>>.சங்க காலத்திற்குப் பின் வந்த தமிழ்அரசுகளுக்கும், அக்காலத்தில் அருகில் உள்ள (அதாவது இன்றைய
ஆந்திர,
>>கர்நாடக, கேரள, மராட்டிய, ஒரியமாநிலங்களில் முன்னிருந்த) மற்ற அரசுகளுக்கும் (ஏன் சிங்கள
நாட்டிற்கும் கூட)
>>கொடுக்கல், வாங்கல், கொள்வினை,கொடுப்பினை, சண்டை, உறவு, கலை/இலக்கியப்பரிமாற்றம்,
பண்பாட்டுக்
>>கூறுகள் எனப் பலவற்றில் ஒப்புமைகள்இருந்திருக்கின்றன.
>
> உண்மைதான். சேரர்களும், பாண்டியர்களும்,சிங்களர்களும்
>நெருங்கிய மணவினைத்தொடர்பு கொண்டவர்கள். சாளுக்கியர்,
>இரட்டர், நுளம்பர், ஹொய்சளர், வாகாடகர், போன்ற மரபில்
>பல்லவர்களும் சோழர்களும் மணக்கலப்புபெற்றிருந்தனர்.
> பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும்ஆகாது. பாண்டியர்களுக்கும்
>பல்லவர்களுக்கும் போட்டி. ஆகவே சாளுக்கியரும் பாண்டியரும் இயற்கை
>நண்பர்களாக விளங்கினர். பாண்டியர்களின் சிற்ப அமைதி சாளுக்கிய
>அமைப்புடன் ஒற்றுமை கொண்டிருக்கும். ஆனால் பல்லவரிடமிருந்து
>பெரிதும் மாறுபட்டு விளங்கியது.
> ராஜேந்திர சோழனின் கங்கைக்கரைப்படையெடுப்பின்போது
>ரஜபுத்திரமன்னர்களின் மூன்று நாடுகள்உதவியிருக்கின்றன. அவர்கள்
>அனைவருக்கும் வேறு சில பொதுவானநோக்கங்களும் இலக்குகளும்
>இருந்தன. அவற்றை எல்லோரும் சேர்ந்தேதாக்கினர்.
> வங்கத்தைத் தாக்குவதில் போஜமன்னன்உதவினான்.
>சாளுக்கியநாட்டை இன்னொரு முனையில்போஜன் தாக்கி சில
>பிரதேசங்களைப்பிடிக்கும்போது, ராஜேந்திரர் வேறொரு பக்கத்திலிருந்து
>தாக்கினார். கலிங்கத்தின்மீது சோழர் படையெடுத்தபோது சந்தேலமன்னன்
>உதவினான். சந்தேல மன்னனை கஜினிமுகம்மது தாக்கியபோது
>சோழரும் போஜரும் உதவினர்.
> இதே நேரத்தில் கடாரப்படையெடுப்புநடைபெற்றது. அதில்
>வேறுவகையான கூட்டணி. அதெல்லாம்நடக்கும்போது பழைய பாண்டியரும்
>சேரரும் சிங்களரும் தெற்கே புரட்சிசெய்துவிடக்கூடாது என்பதற்காக
>அவர்களை முதலிலேயே அடக்கி வைத்துவிட்டார். சீனர்கள் கடாரத்திற்கு உதவி
>செய்ய வரக்கூடாது என்பதற்காக தூதுக்குழுஒன்றை அனுப்பினார்.
> இப்போது பார்த்தீர்களானால் பாரததுணைக்கண்டம் மட்டுமல்லாது
>தென் கிழக்காசியா முழுமையும் இந்தப்போர்களில் ஈடுபட்டிருந்தது.
>அக்காலத்து வல்லரசுகளாகிய சோழர்,சாளுக்கியர், போஜர், ஸ்ரீவிஜயம்,
>ஆகியோரும் வலிமை படைத்த நாடுகளாகிய கலிங்கம், பாண்டிய,சேர,
>ஈழ , வங்க நாடுகளும் இன்னும் சில சிறுநாடுகளும் சம்பந்தப்பட்டிருந்தன.
>சீனம் நடுநிலையும் காம்போஜம் சோழருக்கு தார்மீக ஆதரவுகாட்டிக்
>கொண்டும் விளங்கின. இதில் கஜினிமுகம்மது வேறு.
> இந்தக்கால கட்டதில் நடந்த இந்தநிகழ்ச்சியைமட்டுமே
>நன்கு ஆராய இப்போதுள்ள இந்தியா முழுவதும், ஈழம், ஆஃப்கானிஸ்தான்,
>தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள
>ஆய்வாளர்கள் சேர்ந்து செய்யவேண்டும்.
> செய்யவில்லை.
>
>>
>>இவற்றை வெளிக் கொணர வரலாற்று அறிஞர்கள் முன்வர வேண்டும். பல பொழுதுகளில் இது நடவாது இருக்கின்றது.
>>அண்டை மாநிலத்தவரும், சிங்களவரும்தமிழ்த் தொடர்பை ஒப்புக் கொள்ளாதவராய் இன்று இருக்கின்றனர்.
நம்மவரும்
>>தமிழ் ஒன்றே உயர்ந்தது என்று மற்ற சான்றுகளைப் பல சமயம் புறக்கணிக்கிறோமோ என்றும் தோன்றுகிறது.
இடையில்
>>வடமொழியாளர்களின் கையும், தமிழ்ச் சான்றுகளை ஒதுக்கிக் கொண்டே இருக்கிறது (எ.டு: அசோகருக்கு
முற்பட்ட
>>தாமிழி எழுத்துக்களை இன்னும் ஒப்புக்கொள்ளாமல் அவற்றை பிராமி எழுத்துக்கள் என்றே அழைத்து, தமிழ்
>>எழுத்துக்கள் பின்னவை என்றே வாதிடுவது)
>
> இந்த இடத்திலும் நாம்தான் தவறுகிறோம். போதிய சான்றுகளை
>சேகரிக்கவில்லை. தாமிழி முற்பட்டதுஎன்பதற்கு அசைக்கமுடியாத சான்று
>காட்டினால் ஒத்துக்கொள்வார்கள். இன்னும்காட்டவில்லை.
> வரலாற்று அறிஞர்களின் பற்றாக்குறையல்லவா இருக்கின்றது.
>ஆராய்ச்சி செய்பவர்களெல்லாம் மண்டையை உடைத்துக்கொள்ளாத,
>சட்டையில் அழுக்குப் படாத, பணம்-புகழ்-பதவி ஆகியவற்றை சுலபமாகக்
>கொடுக்கக்கூடிய ஆராய்ச்சிகளைத்தான்செய்யவிரும்புகிறார்கள்.
> எப்படி உருப்படும். சொல்லுங்கள்.
>
>
>>இந்த action-reaction -களை ஒதுக்கி வைத்துத் திறந்த மனத்துடன் வரலாற்று அறிஞர்கள் செயலாற்ற
வேண்டும்.
>>செய்வார்களா?
>
> செய்யக்கூடியவர்கள் இருந்தார்கள். அவர்களெல்லாமே ஒதுக்கப்
>பட்டு, ஒடுக்கப்பட்டு, ஒழிந்துபோனார்கள்.
>
>>
>>2/
>>சங்க கால நடுகல்லுக்கும், இந்த வீரக்கல்லுக்கும் நடைமுறையில் வேறுபாடுகள் உண்டா?
>>
>>3/
>>இன்றைக்குத் தன் அரசியல் தலைவருக்குஏதேனும் ஒன்று ஊறு ஏற்பட்டால், தீக் குளிக்க முற்படுகிறானே ஒரு
தீவிரக்
>>கட்சித் தொண்டன், அவனுக்கும் போக்கிமையாவுக்கும் வேறுபாடு இருப்பதாகத்தெரியவில்லை. தீக் குளித்த
>>தொண்டனின் குடும்பத்துக்குப் பணமுடிப்புக்கொடுப்பதற்கும், போக்கிமையாவின்குடும்பத்தாருக்கு கிராமம்
>>இனாமாகக் கொடுத்ததிற்கும் வேறுபாடுஇல்லையே? வரலாறு தொடர்கிறதா?
>>
> அதே தான். காலபேதவர்த்தமானவேறுபாடுகள் என்று சொல்வார்களே,
>அவ்வகையில் மட்டுமே வேறுபாடு.
>
>>4/
>> வளர்ந்த நாடான ஜப்பானில் இந்தப் பழக்கம் நின்று விட்டது போல் தோன்றுகிறது (எனக்கு முழு விவரம்
தெரியாது);
>
> "ஹாராக்கிரி" என்னும் முறையில் வயிற்றை ஒரு கூர்மையான
>கத்தியால் பிளந்து கொள்வார்கள். குடல் வெளியில் வந்து, இரத்தப்போக்கு
> ஏற்பட்டு பயங்கரமான வலியுடன் நீண்டநேரம் கழித்து இறப்பார்கள்.
> சில சமயங்களில் நெருங்கிய நண்பன்கழுத்தை வெட்டிவிடுவான்.
> இப்போதும் ஹாராக்கிரி இருக்கிறது.ஆனால் வயிற்றைப்பிளந்து
>கொள்வதில்லை. இறப்பதற்கு முன்னதாகயாராவது பார்த்துவிட்டால்,
>மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, தையல்போட்டு, தீவிரசிகிச்சை
>கொடுத்து பிழைக்கவைத்து விடுகிறார்கள். பிறகு தற்கொலை செய்து
>கொள்ள முயன்றதாக வழக்கு வேறு. நிம்மதியாகச்சாக விடமாட்டார்கள்.
>பிழைத்தாலும் நிம்மதியாக வாழவிடமாட்டார்கள். நண்பனை விட்டு கழுத்தை
>வெட்டச்செய்தால், நண்பன்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவன்
>ஆயுள்தண்டனை அனுபவிக்க நேரிடும். இதனால் இப்போது அப்படிச்
>செய்வதில்லை.
> ஆகவே ஹாராக்கிரி என்ற பெயரிலேயே வேறு இடங்களைக்
>கிழித்துவிட்டுக்கொண்டு இறந்துபோகிறார்கள்.
> ஆசியாவிலேயே இந்தியாவிலும்ஜப்பானிலும்தான் தற்கொலை
>அதிகம். அதற்குப் பெரிய காரணம் கலாச்சாரம், சமயம்.
>
>
>>இந்தத் தற்கொலைப் பழக்கம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்வது ஏன்? Hero worship என்னும் நடைமுறை
>>தமிழ்நாட்டில் தொடர்வதன் அடித்தளங்கள் இது போன்ற முந்தையப் பழக்கங்களின்மிச்ச சொச்சமா?
>
> இதுவும் ஒரு காரணம்தான்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>>
>>அன்புடன்,
>>இராம.கி.
>>
>===============================================>>
>>
>>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com