From Mon Apr 5 23:18:37 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25321 invoked by uid 7770); 6 Apr 1999 06:18:33 -0000
Received: from dfw-ix10.ix.netcom.com (206.214.98.10) by vault.egroups.com with SMTP; 6 Apr 1999 06:18:33 -0000
Received: (from smap@localhost) by dfw-ix10.ix.netcom.com (8.8.4/8.8.4) id BAA25695; Tue, 6 Apr 1999 01:18:32 -0500 (CDT)
Received: from unknown(207.92.173.183) by dfw-ix10.ix.netcom.com via smap (V1.3) id rma025689; Tue Apr 6 01:18:29 1999
Message-ID: <00cc01be7ff4$ca6643c0$b7ad5ccf@...>
From: "Mani M. Manivannan"
To:
Cc:
Date: Mon, 5 Apr 1999 23:14:53 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] "Sanskrit a must to research fine arts"
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 237

இசை, நாட்டியம், கட்டடம், சிற்பம் போன்றவற்றில் ஆய்வு செய்வோர் சம்ஸ்கிருதமும்
படிக்க வேண்டும் என்று சங்கரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
இரா. நாகசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான செய்தி தினமணி
ஏப்ரல் 5, 1999 நாளேட்டில் வந்துள்ளது. முழுச்செய்தியும் கீழ்க்கண்ட
வலைப்புலத்தில் காணப்படுகிறது.



இசை, நாட்டிய, கட்டிட, சிற்ப மரபுகளில் வடமொழி பெரும்பங்கு பெற்றுள்ளது.
அப்பர் பாடும்போது 'கழலொடு சிறுவிரலும் கரணம் செய்துதான் ஆடுமே' என்கிறார்.
பரத நாட்டியத்தில் 108 கரணங்கள் சொல்லப்படுகின்றன. ஞானசம்பந்தர் பாடிய
பாடல்களின் மரபுகள் வடநூல் மரபினைப் பின்பற்றியவை என யாப்பருங்கலம்
கூறுகிறது. இசை, நாட்டியத்தில் ஆய்வுகளைச் செய்வோர் வடமொழியும் படிக்க
வேண்டும். அதில் புலமை பெற வேண்டும் என்று அவசியமல்ல. ஒன்றுடன்
ஒன்றினை ஒப்பாய்வு செய்ய வடமொழி அறிவு அவசியம் என்றார் நாகசாமி.

வரலாற்றுப் பேரவைத்தலைவர் மே. து. ராசுகுமார் பேசியபோது கிமு மூன்றாம்
நூற்றாண்டைச் சேர்ந்த அசோகனது கல்வெட்டில் சேர, சோழ, பாண்டியர்கள்
பற்றிய குறிப்பு உள்ளது. அப்படி என்றால், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு
முன்னரே தமிழ்நாட்டில் தொல்குடிகள் இருந்திருக்க வேண்டும். இவர்களைப்
புறநானூற்றுப் பாடல்களில் காண்கிறோம். இதனை மனதில் வைத்துக் கொண்டு
சங்கப் பாடல்களின் காலத்தை மதிப்பிட வேண்டும்.

ஆய்வு வட்டம் சார்பில் வெளியான ஐந்து நூல்கள் (49 கட்டுரைகள்) பற்றிய
கருத்தரங்கம் சென்னை நூற்புள்ளி (புக்பாய்ன்ட்) வளாகத்தில் நடைபெற்றபோது
இவர்கள் பேசினார்கள்.

(சென்னை வாழ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ஐந்து நூல்களும்
எங்கே கிடைக்கும் என்பதை எனக்குத் தெரிவிக்க முடியுமா?)

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
பிரிமான்ட், கலி., அ.கூ.நா.


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com