From jayabarathi Mon Apr 5 23:49:09 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 4221 invoked by uid 7770); 6 Apr 1999 06:49:07 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by vault.egroups.com with SMTP; 6 Apr 1999 06:49:07 -0000
Received: from umlugghc ([202.188.69.126]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990406064905.WYFN502@umlugghc>; Tue, 6 Apr 1999 14:49:05 +0800
Message-Id: <3.0.3.32.19990406145456.0081bd30@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 06 Apr 1999 14:54:56 +0800
To: agathiyar@egroups.com,
From: jayabarathi
Cc:
In-Reply-To: <00cc01be7ff4$ca6643c0$b7ad5ccf@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: "Sanskrit a must to research fine arts"
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 238



அன்புள்ள மணிவண்ணன்,

அந்த வலைப்புலத்திற்குச் சென்று பார்த்தேன்.
ஆனால் படிக்கமுடியவில்லை. என்ன எழுத்துரு அது?

அன்புடன்

ஜெயபாரதி


At 11:14 PM 4/5/99 -0700, Mani M. Manivannan wrote:
>இசை, நாட்டியம், கட்டடம், சிற்பம் போன்றவற்றில் ஆய்வு செய்வோர் சம்ஸ்கிருதமும்
>படிக்க வேண்டும் என்று சங்கரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
>இரா. நாகசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான செய்தி தினமணி
>ஏப்ரல் 5, 1999 நாளேட்டில் வந்துள்ளது. முழுச்செய்தியும் கீழ்க்கண்ட
>வலைப்புலத்தில் காணப்படுகிறது.
>
>
>
>இசை, நாட்டிய, கட்டிட, சிற்ப மரபுகளில் வடமொழி பெரும்பங்கு பெற்றுள்ளது.
>அப்பர் பாடும்போது 'கழலொடு சிறுவிரலும் கரணம் செய்துதான் ஆடுமே' என்கிறார்.
>பரத நாட்டியத்தில் 108 கரணங்கள் சொல்லப்படுகின்றன. ஞானசம்பந்தர் பாடிய
>பாடல்களின் மரபுகள் வடநூல் மரபினைப்பின்பற்றியவை என யாப்பருங்கலம்
>கூறுகிறது. இசை, நாட்டியத்தில் ஆய்வுகளைச் செய்வோர் வடமொழியும் படிக்க
>வேண்டும். அதில் புலமை பெற வேண்டும் என்று அவசியமல்ல. ஒன்றுடன்
>ஒன்றினை ஒப்பாய்வு செய்ய வடமொழிஅறிவு அவசியம் என்றார் நாகசாமி.
>
>வரலாற்றுப் பேரவைத்தலைவர் மே. து.ராசுகுமார் பேசியபோது கிமு மூன்றாம்
>நூற்றாண்டைச் சேர்ந்த அசோகனது கல்வெட்டில் சேர, சோழ, பாண்டியர்கள்
>பற்றிய குறிப்பு உள்ளது. அப்படி என்றால், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு
>முன்னரே தமிழ்நாட்டில் தொல்குடிகள்இருந்திருக்க வேண்டும். இவர்களைப்
>புறநானூற்றுப் பாடல்களில் காண்கிறோம். இதனை மனதில் வைத்துக் கொண்டு
>சங்கப் பாடல்களின் காலத்தை மதிப்பிட வேண்டும்.
>
>ஆய்வு வட்டம் சார்பில் வெளியான ஐந்துநூல்கள் (49 கட்டுரைகள்) பற்றிய
>கருத்தரங்கம் சென்னை நூற்புள்ளி (புக்பாய்ன்ட்) வளாகத்தில் நடைபெற்றபோது
>இவர்கள் பேசினார்கள்.
>
>(சென்னை வாழ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ஐந்து நூல்களும்
>எங்கே கிடைக்கும் என்பதை எனக்குத் தெரிவிக்க முடியுமா?)
>
>அன்புடன்,
>
>மணி மு. மணிவண்ணன்
>பிரிமான்ட், கலி., அ.கூ.நா.
>
>
>------------------------------------------------------------------------
>eGroups eLerts!
>Exclusive discounts from the hottest online bookstores
>Join Now! http://clickhere.egroups.com/click/20
>
>
>eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
>Free Web-based e-mail groups by eGroups.com
>
>
>

------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com