From Tue Apr 13 20:23:35 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 14229 invoked by uid 7770); 14 Apr 1999 01:37:21 -0000
Received: from usm.my (161.142.14.30) by vault.egroups.com with SMTP; 14 Apr 1999 01:37:21 -0000
Received: from loga.usm.my ([161.142.13.219]) by usm.my (8.8.7/8.7) with SMTP id BAA18288; Wed, 14 Apr 1999 01:28:27 GMT
Date: Wed, 14 Apr 1999 01:28:27 GMT
Message-Id: <199904140128.BAA18288@...>
X-Sender: loga@...
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "Dr.K.Loganathan"
Cc:
Subject: [agathiyar] Meykandar 2
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 262

அன்பர்களே,
தொல்காப்பியர் காலந் தொடங்கி (அதற்கு முற்பட்டுங் கூட) திராவிட மெய்யறிவு வரலாற்றின் ஓர் மையக்
கூறாக இருப்பது நூலிய அறிவியல் என்றுநான் பெயர் வைத்துள்ள ஓர் முறையியலாகும். அதுவே மெய்கண்டாருக்கு
அடிப்படையாகின்றது, அதனால் அவரது சிவஞான போதமும் வேதவேதாந்தங்களைபிரமாணங்களாகக் கொண்ட
பிரம்ம சூத்திரங்கட்கு வேறாகவும், ஒழுங்காக சிந்திக்கும் அறிவைத் தவிர்த்துவேறு யாதையும்
பிரமாணங்களாக வேண்டாத சிறப்பையும் கொண்டுள்ளது. இதனால் பகுத்தறிவிற்குஏற்ற வொன்றாகவும் சைவம்
ஆகின்றது. சமீப காலத்தில் Edmund Husserl போன்ற மேலை நாட்டு தத்துவச் சிந்தனையாளர்கள் ,
சமயங்களிடையே நிலவும் வெறி உணர்வுகளையும் குருட்டு நம்பிகைகளையும் சங்கற்ப பிடிவாதங்களையும்
(dogamas) கண்டு நொந்து, சமய வாழ்க்கையையும் ஓர் வகையான அறிவியலிற்குக் கொண்டு வந்து ஆய்நெறிக்கு
அகப்படும் வகையில் புதிய அணுகு முறைகளை சேடிக்கத்தொடங்கினர். தொல்காப்பியத்தின் இயலியத்தை,
அறியாதே மீண்டும் கண்டு பிடித்து அதனை phenomenology என்று நவின்று ஆராயப்படவேண்டியது உலகியல்
உயிர் அனுபவங்களே (the living experience) என்று கூறி ஒர் சிந்தனைப் புரட்சியையே கொண்டு
வந்தார். மெய்கண்டாரும் இதனைத் தான்செய்கின்றார் ஆனால் அதனை சுட்டறிவுஎன்றும் சுட்டுணர்வு என்றும்
கூறுகின்றார். கால உணர்வோடு வாழும்அனைவருக்கும் பொதுவாயதும் மொழியென ஒன்று விளங்குவதற்கு
அடிப்படையானதும் இதுதான். எங்கே மொழி இருக்கின்றதோ அங்கு சுட்டுணர்வும் உண்டு. இது யாராலும்
மறுக்கப்படாத ஓர் உண்மையாகும். இந்தஉண்மையில் தொடங்கி ஆழம் ஆழம் சென்று சாதாரண நிலையில் நமக்கு
எட்டாத உண்மைகளை எட்டுமாறு செய்கின்றார்.

Husserl காணாத ஓர் வேறுபாடும் உண்டு. பார்வைகள் வேறுபட உண்டென்று கொள்ளவரும்பொருட்களும் உலகும்
வேறுபடும் என்பதைக் காட்டி அதன் வழியேபொறிலியப் பார்வை கடந்து செல்லும்போதே பதிபசுபாச
உண்மைகளை அனைவருங் காணலாம் என்றுவிளக்குகின்றார். முதல் சூத்திரத்தில்பொறிலியப்பார்வை
நூலியப்பார்வை என்ற இரண்டுவகைப் பார்வைகள் உண்டு என்ற அடிப்படையில் அவர் தம் விளக்கங்கள் செல்கின்றன.
கீழ் வரும் வெண்பாவில் இக்கருத்துக்கள்புதைந்து கிடக்கின்றன.


இலயித்த தன்னில் இலயித்தாம்மலத்தால்
இலயித்த்வாறு உளதாக வேண்டும்-இலயித்தது
அத்திதியில் என்னில் அழியாது; அவை அழிவது
அத்திதியும் ஆதியும் அங்கு


இதன் பொருள்

இலயித்தது மலத்தால்:

மூவினைப் படுவதாகப் பொறிலியக் கண்ணிற்குப் படும் இவ்வுலகு நூலியக் கண்ணிற்குஇலயிப்பதாய் மீண்டும்
உண்டாகித் தொடர்வதாய்த் தோன்றும். மேலும் இஃது மாலம் என்ற ஒன்றாலேயேநடைபெறவேண்டும், ஏனெனில்
இலயிப்பு என்பது எல்லா மலர்ச்சிகளையும் பார்வைகளையும் ஒடுக்கி ஆன்மாக்களைசுத்த அணுவாக்கி யாதும்
காணமுடியாத குருடாக்குவது என்பதால் என்க. இதுவும் அறிவில்லாத சடப் பொருளாக இருக்க தானே
இவ்வொடுக்கத்தைச் செய்யாது. ஆதலால்அதனைத் தொழிற்படுத்தி இந்த உலகத்தை இவ்வாறு சங்கரிக்கும் சங்கார
காரணனாக ஓர் முதல் இருக்கவேண்டும்.

இலயித்த தன்னில், இலயித்தவாறு உளதாக வேண்டும்:

பொறிலியப் பார்வைக்கு உலகம் அழியாது தொடர்வதாகவேப் படுகின்றது என்பதால், எப்பொழுது இவ்வுலகு
இலயிக்கப் படுகின்றதோ அதே பொழுதுமீண்டும் உளதாகித் தொடரவும் வேண்டும். ஆகவே எவ் நிமித்த
காரணம் மாலத்தை தொழிற்படுத்தி உலகத்தை இலயித்ததுவோ, அதுவே இவ்வுலகத்தை எந்நிலையில்
இலயித்ததோ அதேப் போன்று--- தொடர்ச்சி உணர்வு தோன்றும்
வகையில்--- மீண்டும் தன் அருளால் உளதாக்க வேண்டும். இல்லையேல் பொறிலியப்பார்வைக்கு வரும்
மூவினையின் உலகு இல்லாது போம்.

இனி இவ்வாறான நூலியப் பார்வை தேவையில்லை, பொறியப் பார்வையே போதும், அதுதான் உண்மை; ஆகவே
நிற்பதாகிய இவ்வுலகிற்குள்ளேயே, அதுமுற்றிலும் நசித்துவிடும் இயல்பும் இருக்கும் என்றுங் கூறவரும்.
இவ்வாறு கூறுவோர் திருமாலிய சமயத்தினர் ஆவர். உலகத்தை திருமால் உண்டு விழுங்கி உமிழ்வன் என்பர். இதுவே

இலயித்தது அத்திதியில் என்னில்:

என்பதின் பொருளாகும். உலகமே ஒடுங்கிஅணுவாகி நிற்பது பொறிலியக் கண்ணிற்கு வரும் மூவினப்படும்
உலகின் உருவிலேயே அதன் இயல்பாய்இருக்கின்றது என்னில்,

அழியாது:

பொறிலியக் காட்சிக்கு ஒன்று அழியபிறிதொன்று தோன்றுதல் என்றவாறு பலவாக நிற்பதில் கருத்தூன்றியே
பற்றிநின்று அதன் வழி ஒன்று இருக்கபிரிதொன்று அழிவதைக் காண முடியுமேஒழிய, உலகமே முற்றிலும்
ஒடுக்கப்படுவதைக் காண முடியாது---- காலஉணர்வின்றியும் திசைவெளியின்றியும் பொருள் நுகர்ச்சி
பொறிலியக் கண்ணிற்கு இல்லையென்பதால், ஏதாவதோர் வகையில் கால இட உணர்வுகள் இருக்கவே வேண்டும்
என்பதால், உலகம் முற்றாக ஒடுங்குவதுஇப்பார்வைக்குப் படாது போம். ஆயினும்,

அவை அழிவ:

இப்படி பொறிலிஅப் பார்வைக்குக் தோன்றினும், குறிப்புக் கால உணர்விற்றாகிய நூலியப் பார்வைக்கு இந்த
உலக இலயிப்பு காணக்கூடிய ஒன்றாகும். ஆகவே

அத்திதியும் ஆதியும் அங்கு:

இவ்வாறு உலகவொடுக்க உண்மையை, அதுவிரிந்து கிடக்கும் அனைத்தையும் சுறுக்கி விரிவையும் ஆகவே உயிர்கள்
மகிழும் பார்வைகளையும் போக்குவது என்பதால், இது இவ்வாறான அணுத்துவத்தைத் தரும் ஆணவ மலத்தாலேயே
ஆகக்கூடியது, அதனை தொழிற்படுத்தி ஒடுக்கும் சங்கார காரணாகிய ஓர் முதலே,இவ்வுலகு உதித்து நிற்பதற்கும்
ஒடுங்கி மீள மீள உளதாதற்கும் காரணமாக இருக்கின்றது என்பதாம்.

இனி ஆணவம் ஏன் வேன்டும், இறைவனே தன்சங்கற்பித்தல் மாத்திரையின் ஒடுக்கலையும் செய்யானோ வெனில்,
ஒளியே வடிவாகிய இறைவன் யாங்குளனோ, ஆங்கு ஒளிநிலையேத் தவிற இருள்நிலை அன்றாம். ஒளியைத் தரும்
இறைவன் இருளைத் தரான். ஆகவே இருளைத்தருவதாக வேறொன்று அநாதியே இருக்கவேண்டும் என்பதாம்.

இனி இதனை எவ்வாறு இறைவன் தொழிற்படுத்துவன் எனில், தான் தூரமாகி நிற்பதின், தனது திரோதகத்தின்,
தன்னை மறைப்பதின் செய்வன் என்று அறிக. ஆதவன் மறைய இருள் தானேப் படர்வது போல் இது.


இணைய அன்பர்களே, இவ்வாறு உலகினைவைத்தே இறைவனைக் காணத்தருகின்றார்நம் மெய்கண்டார்.
பொறிலியப் பார்வையே பார்வைஎன்றிருப்போர்க்கு, இறைவன் தென்படான். நூலியப் பார்வை வழியும்
இவ்வுலகினைக் காண்போர்க்கே,
இருக்கின்ற அவன் இருக்கின்றான் என்றும்படும்.


நாத்திகம் பேசும் பகுத்தறிவாதிகள் இது தொடர்பாக என்னோடு வாதிட வரலாம். இவ்வாறு நான்
மெய்கண்டாரை புரிந்து கொண்டிருப்பதுதவறாகவும் இருக்கலாம். எங்கே பிழை என்று சுட்டிக்காட்டுங்கள்.
திருத்திக் கொள்கின்றேன். மாறுவதற்குநான் அஞ்சுவதில்லை.


அன்பன் கி.லோகநாதன்






------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com