From Swaminathan Sankaran Wed Apr 14 08:14:54 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22095 invoked by uid 7770); 14 Apr 1999 15:14:51 -0000
Received: from veena.cc.uregina.ca (142.3.100.19) by vault.egroups.com with SMTP; 14 Apr 1999 15:14:51 -0000
Received: from Sankaran ("port 1057"@[142.3.212.21]) by meena.cc.uregina.ca (PMDF V5.2-27 #34301) with SMTP id <01JA0NWFYVVQ90SZ6K@...> for agathiyar@egroups.com; Wed, 14 Apr 1999 09:14:49 CST
Date: Wed, 14 Apr 1999 09:14:49 -0600 (CST)
Date-warning: Date header was inserted by meena.cc.uregina.ca
From: Swaminathan Sankaran
X-Sender: sankaran@...
To: agathiyar@egroups.com
Message-id: <01JA0NWFZF6090SZ6K@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.2
Subject: [agathiyar] Re: Meykandar 2
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 264


[The 'you" below is Dr. Loganathan]

[நறுக்...]

At 01:28 AM 4/14/99 +0000, you wrote:
>அன்பர்களே,
Edmund Husserl போன்ற மேலை நாட்டு தத்துவச்சிந்தனையாளர்கள் ,
தொல்காப்பியத்தின் இயலியத்தை,
>அறியாதே மீண்டும் கண்டு பிடித்து அதனை phenomenology என்று நவின்று ஆராயப்படவேண்டியது உலகியல்
>உயிர் அனுபவங்களே (the living experience) என்று கூறி ஒர் சிந்தனைப் புரட்சியையே கொண்டு
>வந்தார். மெய்கண்டாரும் இதனைத் தான்செய்கின்றார் ஆனால் அதனை சுட்டறிவுஎன்றும் சுட்டுணர்வு என்றும்
>கூறுகின்றார். கால உணர்வோடு வாழும்அனைவருக்கும் பொதுவாயதும் மொழியென ஒன்று விளங்குவதற்கு
>அடிப்படையானதும் இதுதான். எங்கே மொழி இருக்கின்றதோ அங்கு சுட்டுணர்வும் உண்டு. இது யாராலும்
>மறுக்கப்படாத ஓர் உண்மையாகும். இந்தஉண்மையில் தொடங்கி ஆழம் ஆழம் சென்று சாதாரண நிலையில் நமக்கு
>எட்டாத உண்மைகளை எட்டுமாறு செய்கின்றார்.
>


மொழிக்குத்தான் சுட்டுணர்வு தேவையே தவிர சுட்டுணர்வுக்கு மொழி தேவையில்லை என்று இருக்க
வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருமனிதன், குருடு, செவிடு, ஊமையாக இருந்தாலும்
(அதாவது, பார்வை, கேள்வி, பேச்சுஅற்றுப் போயிருந்தாலும் அந்த மனிதனுக்கும்
சுட்டுணர்வு என்று இருக்கலாம் அல்லவா?இது அனேகமாக எல்லோரும் ஒத்துக் கொள்ளக்கூடியது
என்று நம்புகிறேன்.

ஆனால் சுட்டுணர்வு இல்லாத ஒரு பிறவிக்கு மொழி என்று ஒன்று இருக்குமா? இருக்கக் கூடியதா?
இருக்கக் கூடலாம். ஆனால் இருக்குமா?மொழியியல் வல்லுனர்கள் (linguists ands speech
therapists and
neurologists) என்ன கூறுகிறார்கள்?

சங்கரன், ரெஜைனா, ஸஸ்கச்சுவான், கனடா


------------------------------------------------------------------------
eGroup home: http://www.eGroups.com/list/agathiyar
Free Web-based e-mail groups by eGroups.com